sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 19, 2025 ,கார்த்திகை 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

இதப்படிங்க முதல்ல...

/

இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...


PUBLISHED ON : ஏப் 24, 2016

Google News

PUBLISHED ON : ஏப் 24, 2016


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மீண்டும் தீவிரவாத கதையை இயக்கும் மணிரத்னம்!

கடந்த, 1992ல், தீவிரவாதத்தை மையப்படுத்தி, ரோஜா என்ற படத்தை எடுத்தார் மணிரத்னம். அதன்பின், தீவிரவாத கதையை தொடாதவர், தற்போது, கார்த்தி - சாய் பல்லவி நடிப்பில், தீவிரவாத கதையை இயக்க உள்ளார். முழுக்க முழுக்க காஷ்மீரில் எடுக்க உள்ள இப்படத்தில், சில வெளிநாட்டு வில்லன்களை தீவிரவாதிகளாக நடிக்க வைக்கவிருக்கிறார்.

சினிமா பொன்னையா

தம்மன்னாவுக்கு சிபாரிசு செய்த விஜயசேதுபதி!

தர்மதுரை படத்தில் விஜயசேதுபதிக்கு ஜோடியாக, மதுரை பெண்ணாக நடித்துள்ளார் தமன்னா. அக்கதாபாத்திரத்தில் அவர் பக்கா மதுரை பெண்ணாகவே மாறி நடித்து, அனைவரையும் அசத்தி விட்டார். விளைவு, அந்த பட வேலைகள் முடிந்த பின்னும், தமன்னாவின் நடிப்பு குறித்து பேசி வரும் விஜயசேதுபதி, தற்போது, கே.வி.ஆனந்த் இயக்கத்தில், தான் நடிக்கும் படத்திலும், தமன்னாவை நடிக்க வைக்க, சிபாரிசு செய்து வருகிறார். இப்படி, அவர் தமன்னாவுக்கு சிபாரிசு செய்து வருவதை கேள்விப்பட்ட விஜயசேதுபதியின் ஆஸ்தான நாயகிகள், அவர் மீது அதிருப்தியில் உள்ளனர். வந்த வெள்ளம், இருந்த வெள்ளத்தை தள்ளியது.

எலீசா

மகேந்திரன் படத்தில் இயக்குனர் அட்லி!

முள்ளும் மலரும் மற்றும் உதிரிப்பூக்கள் உட்பட பல படங்களை இயக்கியவரும், சிவாஜிகணேசன் நடித்த, தங்கப்பதக்கம் உட்பட பல படங்களுக்கு, கதை வசனம் எழுதியவருமான இயக்குனர் மகேந்திரன், விஜய்யின், தெறி படத்தில் வில்லனாக நடித்திருப்பதை தொடர்ந்து, ஒரு படத்தை இயக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அப்படத்திற்கு தான் வசனம் எழுதுவதை விட, இன்றைய இளவட்ட இயக்குனர் ஒருவர் எழுதினால், சிறப்பாக இருக்குமென்று, தெறி பட இயக்குனர் அட்லியை, வசனம் எழுத வைத்துள்ளார்.

சி.பொ.,

பிசியாகும் பிச்சைக்காரன் பட நாயகி சாதனா டைட்டஸ்!

விஜய் ஆண்டனி நடித்து வெளியான, பிச்சைக்காரன் படத்தில் நடித்தவர் சாதனா டைட்டஸ். கேரளாவை சேர்ந்த இவர், தற்போது, கலையரசன் நடிக்கும் ஒரு படத்தில் ஒப்பந்தமாகியுள்ளதோடு, தெலுங்கு சினிமாவிலும், 'என்ட்ரி' கொடுத்துள்ளார். ஸ்ரீவிஷ்ணு நடிக்கும், நீதி நாதே ஒக்க கதா என்ற படத்தில் ஒப்பந்தமாகியிருப்பவர், அப்படத்தில், தமிழை விட, கூடுதல் கவர்ச்சி காட்டவும் சம்மதித்துள்ளார். அத்துடன், தெலுங்கில் ரீ - மேக்காகும், பிச்சைக்காரன் படத்தில் நடிப்பதற்கும், கல்லெறிந்து வருகிறார். ஆசைக்கு இல்லை அளவென்ற எல்லை!

எலீசா

நயன்தாராவை மடக்கிய சிவகார்த்திகேயன்!

'மான்கராத்தே படத்தில் ஹன்சிகாவுடன் இணைந்து நடித்த சிவகார்த்திகேயன், நயன்தாராவுடன் ஜோடி சேர, நேரம் பார்த்துக் கொண்டிருந்தவர், தற்போது, மோகன் ராஜா இயக்கும் படத்தில், அவருடன் ஜோடி சேரவிருக்கிறார். இப்படத்திற்காக, நயன்தாராவிடம் கால்ஷீட் கேட்ட போது, கைவசம் பல படங்கள் இருப்பதாக சொல்லி, கழண்டு கொள்ள நினைத்தார். ஆனால், அவருடன் நடித்தே ஆக வேண்டும் என்கிற ஆர்வத்தில் சிவகார்த்திகேயன் இருந்ததால், நயன்தாராவுக்கு மூன்று கோடி ரூபாய் சம்பளம் கொடுத்து, ஒருவழியாக, ஒப்பந்தம் செய்து விட்டார் மோகன் ராஜா. ரெமோ படத்திற்காக, தற்போது கீர்த்திசுரேஷுடன் நடித்து வரும் சிவகார்த்திகேயன், விரைவில் நயன்தாராவுடன், 'டூயட்' பாடவிருக்கிறார்.

— சினிமா பொன்னையா

கறுப்பு பூனை!

தல நடிகரின் புதிய படத்தில் நடிக்க, மேல்தட்டு நடிகைகள் அனைவருமே வரிந்து கட்டி நிற்கின்றனர். இதில் ஒரு, நான்கெழுத்து நடிகையோ இயக்குனரை கைக்குள் போட்டு படத்தை கைப்பற்றி விட, 'ரூட்' போட்டு வருகிறார். இதனால், மேற்படி பட இயக்குனரும், அந்த நடிகையைப் பற்றி தினமும் நடிகரின் காதில் ஓத, செம டென்ஷனாகி விட்டார் நடிகர். அதையடுத்து, 'தென்னிந்திய நடிகை இப்படத்துக்கு வேண்டாம்; யாராவது பாலிவுட் நடிகையை இறக்குமதி செய்யலாம்...' என்று கூறி, இயக்குனருக்கு அதிர்ச்சி கொடுத்து விட்டார்.

'திருநங்கைகள் அரசியலுக்கு ஏற்றவர்கள் அல்ல...' என்று பிரபல பூ நடிகை கருத்து கூறியதை அடுத்து, சென்னையில் பல பகுதிகளில் பூ நடிகைக்கு எதிராக போராட்டம் நடத்தினர் திருநங்கைகள். தேர்தல் நேரத்தில் இந்த விஷயத்தை பற்றி மேலும் பேசினால் பிரச்னை பெரிதாகி விடும் என்பதால், 'இதைப்பற்றி மேற்கொண்டு எதுவும் பேசி, விஷயத்தை பெருசுபடுத்த வேண்டாம்...' என்று நடிகைக்கு, கட்சி மேலிடம் எச்சரித்துள்ளது.

சினி துளிகள்!

* அம்மா வேடங்களில் நடிக்க துவங்கியுள்ளார், மாஜி கதாநாயகி சுமலதா.

* சிவா இயக்கத்தில், அஜித் நடிக்கும் புதிய படம் ஜூன் மாதம் துவங்குகிறது.

* தன் சொந்த பேனரில் நடிக்கும் படத்திற்கு, செம போதை ஆகாத என்று பெயர் வைத்துள்ளார் அதர்வா.

* கலகலப்பு - 2 படத்தை, தன், அவ்னி பிலிம்ஸ் மூலமாக தயாரிக்கிறார் நடிகை குஷ்பூ.



அவ்ளோதான்!






      Dinamalar
      Follow us