தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...


PUBLISHED ON : செப் 04, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 04, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிவகார்த்திகேயனின், 'ரேஞ்ச்' எகிறியது!

காமெடி கலந்த கதைகளில் நடித்து வந்த சிவகார்த்திகேயன், ரெமோ படத்தில், பெண் வேடத்தில் நடித்து, அடுத்த கட்டத்துக்கு சென்றுள்ளார். அத்துடன், இப்படத்தில், பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், ஆஸ்கர் விருது பெற்ற, சவுண்ட் இன்ஜினியர் ரசூல் பூக்குட்டி என முன்னணி டெக்னீஷியன்களை இணைத்து, மெகா பட்ஜெட்டில் படத்தை தயாரித்துள்ளார். அப்படி சிவகார்த்திகேயன் தயாரித்து, நடித்துள்ள, ரெமோ படம், தற்போது, தமிழகம் மற்றும் கேரளாவில், 34 கோடி ரூபாய்க்கு விற்பனையாகி உள்ளது. இதனால், கோலிவுட்டில், சிவகார்த்திகேயனின், 'ரேஞ்ச்' எகிற துவங்கியுள்ளது.

— சினிமா பொன்னையா

மலை உச்சியில் நடித்த நமீதா!

கவர்ச்சி கதாநாயகியான நமீதா, பொட்டு படத்தில், சுடுகாட்டில் மயான பூஜை செய்து, பேய்களை வசப்படுத்தும் மந்திரவாதியாக நடித்துள்ளார். இப்படத்திற்காக கொல்லிமலை உச்சியில், இரண்டாயிரம் அடி உயரத்தில் ஒரு காட்சியை படமாக்கியுள்ளனர். வாகனங்கள் அங்கு செல்லாது என்பதால், தினமும், 4 கி.மீ., நடந்து சென்று, அந்த லொகேஷனில் நடித்துள்ளார். கூத்துக்கு ஏற்ற கொட்டுக் கொட்டுகிறது!

— எலீசா

தெலுங்கிலும் மார்க்கெட் பிடிக்கும் கீர்த்தி சுரேஷ்!

தமிழில், விஜய் மற்றும் சிவகார்த்திகேயன் என, முன்னணி கதாநாயகர்களுடன் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், அதே வேகத்தில், தெலுங்கு மார்க்கெட்டையும், 'ஸ்டெடி' செய்ய வேண்டும் என, அங்குள்ள முன்னணி கதாநாயகர்களின் படங்களுக்கு கல்லெறிந்து வந்தார். அதில், நானி நடிக்கும், நேனு லோக்கல் என்ற படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. தமிழில் கவர்ச்சி விஷயத்தில் அடக்கி வாசிக்கும் கீர்த்தி சுரேஷ், அப்படத்தில், அதிகப்படியான தாராளம் காட்டுவதாக கூறி, ராகுல் ப்ரீத்சிங்கிற்கு செல்ல இருந்த வாய்ப்பை, லாவகமாக தன் பக்கம் இழுத்துள்ளார். பட்ட பாட்டுக்கு பலன் கைமேலே!

— எலீசா

தயாரிப்பாளர் சங்கத்தில் சலசலப்பு!

நடிகர் சங்கத் தேர்தலில், போட்டியிட்டு வெற்றி பெற்ற விஷாலுக்கு, தற்போது, தயாரிப்பாளர் சங்கத்திலும் போட்டியிட வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டுள்ளது. அதனால், 'திருட்டு வி.சி.டி., விவகாரத்தில், தயாரிப்பாளர் சங்கம் சரியாக செயல்படவில்லை...' என்று குற்றம் சாட்டி, பிரச்னையை துவங்கியுள்ளார். இதற்கு பின்னணியில், சில தயாரிப்பாளர்களின் ஆதரவு அவருக்கு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால், தயாரிப்பாளர் சங்கத்தில், சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

— சினிமா பொன்னையா

கறுப்பு பூனை!

சூப்பர் நடிகர் நடித்து, சமீபத்தில் வெளியான மூன்றெழுத்து படம் வெளியான, இரண்டொரு நாட்களிலேயே, ஒரு மேடையில், அந்த படம் தோல்வியடைந்து விட்டதாக கூறினார், பிரபல கவிஞர். இதையடுத்து, அதற்கு அவர் ஜகா வாங்கி விட்ட போதும், தற்போது, தான் பாடல் எழுதிய படங்களின் ஆடியோ விழாக்களுக்கே வெளியில் தலைகாட்டுவதில்லை. காரணம், அப்போது, தன்னை சந்திக்கும் மீடியாக்கள், சூப்பர் நடிகரின் படம் குறித்து தான் சொன்ன கருத்து பற்றி, மேலும் கருத்து கேட்டு, தன்னை சிக்கலில் மாட்ட வைத்து விடுவர் என்ற பயத்தினால் தானாம்!

சீயான் நடிகர் நடிக்கும் இரண்டெழுத்து படத்தின், இரண்டாம் பாகத்தில் நடிக்க, மூணுஷாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், முதல் பாகத்தில் நாயகியாக நடித்த தன்னை கேரக்டர் வேடத்தில் நடிக்க கூறியதால் மறுத்து விட்ட நடிகை, 'தற்போதும், நான் கதாநாயகி தான்; அதுவும், கதையின் நாயகியாக நடிக்கிறேன். பெரிய கதாநாயகன் படம் என்பதற்காக, என் தகுதியை தாழ்த்திக்கொள்ள மாட்டேன்...' என்று தடாலடியாக மறுத்து விட்டார்.

சினி துளிகள்!

* த்ரிஷா நடித்து வரும், மோகினி படத்தின் அனிமேஷன் வேலைகள் ஹாலிவுட்டில் நடக்கிறது.

* ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரியும், ஜி.வி.பிரகாஷின் அம்மாவுமான ரெஹைனா, ஏன்டா தலையில எண்ணெய் தேய்க்கல என்ற படத்தை தயாரித்து வருகிறார்.

* தர்மதுரை படத்தில், கவிஞர் வைரமுத்து கவிதை நடையில், ஒரு பாடல் எழுதியிருப்பதாக சொல்கிறார், அப்படத்தின் டைரக்டர் சீனுராமசாமி.

அவ்ளோதான்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us