தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...


PUBLISHED ON : ஏப் 16, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 16, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

குள்ள மனிதராக ரஜினிகாந்த்!

அபூர்வ சகோதரர்கள் படத்தில், குள்ள மனிதராக நடித்திருந்தார் கமல். அவரை தொடர்ந்து, தற்போது, ஷங்கர் இயக்கத்தில், 2.0 படத்தில் ஐந்து விதமான, 'கெட்டப்'புகளில் நடிக்கும் ரஜினி, இரண்டு, கெட்டப்பில் குள்ள மனிதராக நடித்திருக்கிறார். ஆனால், இதற்காக எந்த, 'ரிஸ்க்'கும் அவர் எடுக்கவில்லை. அவரை, நார்மலான தோற்றத்தில் நடிக்க வைத்து, அக்காட்சிகளை, 'அனிமேஷனில்' குள்ள மனிதராக மாற்றுகிறார் இயக்குனர் ஷங்கர்.

— சினிமா பொன்னையா

சினிமாவில் நடிக்க ஆசைப்படும் தொகுப்பாளினி!

விஜய், 'டிவி' தொகுப்பாளினி, திவ்யதர்ஷினி, தனுஷ் இயக்கும், பவர்பாண்டி படத்தில், ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இதற்கு முன், சில படங்களில் நடித்திருந்தபோதும், இப்படத்தில் அவருக்கு, நல்ல வேடம் கொடுத்திருக்கும் தனுஷ், திவ்யதர்ஷினி மிக சிறப்பாகவும், நேர்த்தியாகவும் நடித்ததாக சொல்லி, உற்சாகப்படுத்தியுள்ளார். இதையடுத்து, நடிப்பில், தனக்கு ஆர்வம் அதிகரித்திருப்பதாக கூறும் திவ்யதர்ஷினி, இனிமேல், சின்ன திரையை போலவே, சினிமாவிலும் கூடுதல் கவனம் செலுத்த போவதாக கூறுகிறார். காணக் கிடைத்தது கார்த்திகை பிறை போல!

— எலீசா

தயாரிப்பாளர்களிடம் கெத்து காட்டிய ஆனந்தி!

தயாரிப்பாளர்கள் கொடுக்கிற சம்பளத்தை எண்ணி பார்க்காமல், வாங்கி வந்த கயல் பட ஆனந்தி, கடவுள் இருக்கான் குமாரு படத்திற்கு பின், 30 லட்சம் ரூபாய் சம்பளம் கேட்கிறார். அதை கேட்டு, வாயடைத்து போய் நின்ற தயாரிப்பாளர்களிடம், 'ரொம்ப ஒல்லியாக இருக்கிறாய், பூசினாற் போன்று, எடை போட வேண்டும் என்று சொன்னீர்கள்; நானும் செய்தேன். அதன்பின், இன்னும் முகப்பொலிவு வேண்டும் என்றீர்கள். மாதக் கணக்கில், ஆயுர்வேத சிகிச்சை எடுத்தேன். இதனால், எனக்கு ஏகப்பட்ட செலவு; அதனால், கேட்கிற சம்பளத்தை கொடுங்கள்...' என்று, கெத்தாக கூறியுள்ளார். சந்தடி சாக்கிலே கந்தப் பொடி காற்பணம்!

எலீசா

விற்பனைக்கு வரும், விவேகம் பொம்மை!

ரஜினி, கபாலி படத்தில் நடித்த போது, அவர் நடித்த கெட்டப்பில், கபாலி பொம்மை என்று வடிவமைத்து, அதை விற்பனை செய்தனர், ரஜினி ரசிகர்கள். அதேபோல், தற்போது, அஜித் நடித்து வரும், விவேகம் படத்தில், அவர், 'சிக்ஸ் பேக்' கெட்டப்பில் தோன்றுவதை, விவேகம் பொம்மை என்ற பெயரில் வடிவமைத்துள்ள, அஜித் ரசிகர்கள், அதை விற்பனை செய்ய தயாராகி வருகின்றனர்.

— சினிமா பொன்னையா

கறுப்புபூனை!

* சகுனி நடிகைக்கு, அப்படம் மட்டுமின்றி, அதன்பின் நடித்த எப்படமும் கை கொடுக்கவில்லை. இருப்பினும், அம்மணிக்கு, அடைக்கலம் கொடுத்திருக்கும் ஒரு இளவட்ட தயாரிப்பாளர், தான் தயாரிக்கும் படத்தில், மீண்டும் நடிகைக்கு, வாய்ப்பு கொடுக்க நினைத்தார்; ஆனால், அப்படத்தை இயக்குபவரோ, 'நடிகை ராசியில்லாதவர்; அவர் நடித்தால், படமே ஓடாது...' என்று, தயாரிப்பாளரிடம் மல்லுக்கு நின்று கொண்டிருக்கிறார்.

* தான் நாயகனாக நடித்த முதல் படத்தில் நடித்த நடிகையை, இரண்டாவது படத்திலும் நடிக்க வைத்த வாசனை காமெடியன், அந்த நடிகையுடன் ஐக்கியமானதை அடுத்து, அவரது குடும்பத்திற்குள் சண்டை - சச்சரவு ஏற்பட்டது. அதனால், சில காலம் நடிகையை தள்ளி வைத்திருந்த நடிகர், மறுபடியும், அரவணைக்க துவங்கியிருக்கிறார். இதனால், நடிகரின் வீட்டில், மறுபடியும் அக்கப்போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது.

சினி துளிகள்!

* திருட்டுப் பயலே இரண்டம் பாகத்தில், முதல் பாகத்தில், சோனியா அகர்வால் நடித்தது போன்று, அதிரடி வேடத்தில் நடிக்கிறார் அமலா பால்.

* தமிழில், தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ், தெலுங்கில், இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.

* எனக்கு வாய்த்த அடிமைகள் படத்திற்கு பின், புதிய படங்கள் ஒப்பந்தம் ஆகாததால், மீண்டும், தாய்மொழியான கன்னடத்திற்கே சென்று விட்டார்,

ப்ரணிதா.

* சந்தானத்துடன், வல்லவனுக்கு வல்லவன் மற்றும் இனிமே இப்படித்தான் படங்களில் நடித்த, ஆஷ்னா சாவேரி, தற்போது, நாகேஷ் திரையரங்கம் படத்தில் நடிக்கிறார்.

அவ்ளோதான்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us