தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...


PUBLISHED ON : மே 14, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 14, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'ரியாலிட்டி ஷோ'வில் கமல்ஹாசன்!

சபாஷ் நாயுடு படத்தில் நடித்து வரும் கமல்ஹாசன், சில ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கும், விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகத்தை வெளியிடும் முயற்சியிலும் வரிந்து கட்டியுள்ளார். மேலும், இதுவரை, 'ரியாலிட்டி ஷோ'களில், கலந்து கொள்ளாதவர், முதன்முறையாக, இந்தியில், சல்மான்கான் நடத்தி வரும், 'பிக் பாஸ்' என்ற நிகழ்ச்சியை, தமிழில், வரும் ஜூன் 18ம் தேதி முதல் விஜய் டிவியில் தொகுத்து வழங்க இருக்கிறார்.

— சினிமா பொன்னையா

இந்திக்கு செல்லும் காஜல் அகர்வால்!

தென்னிந்திய சினிமாவில், அதிகப் படியான படங்களில் நடித்து வரும், காஜல் அகர்வால், மும்பை பெண்ணாக இருந்த போதும், பாலிவுட்டில் போதுமான படங்கள் கிடைக்கவில்லை. இந்நிலையில், ஜூனியர் என்.டி.ஆருடன், தெலுங்கில், அவர் நடித்த, டெம்பர் என்ற தெலுங்கு படம், தற்போது, இந்தியில், ரீ- மேக் ஆகிறது. ரன்வீர் சிங் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தை கைப்பற்றியுள்ள காஜல் அகர்வால், 'இதன் மூலம், என் தாய்மொழியான இந்தியில், அழுத்தமாக கால் பதித்து விடுவேன்...' என்கிறார். ஆசை நோய்க்கு அவிழ்தம் ஏது?

— எலீசா

உலகின் இரண்டாவது அழகி ப்ரியங்கா சோப்ரா!

அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், ஒரு சோஷியல் நெட்ஒர்க் மீடியா நடத்திய வாக்கெடுப்பில், உலகின் பிரபலமான, 30 பெண்களின் புகைப்படங்களை வெளியிட்டு, ரசிகர்கள் மூலம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில், உலகின் இரண்டாவது அழகான பெண்ணாக, இந்தி நடிகை ப்ரியங்கா சோப்ரா, தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இச்செய்தியை அடுத்து, தன் பாலிவுட் நண்பர்களுக்கு, 'பார்ட்டி' கொடுத்து, மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார், ப்ரியங்கா சோப்ரா. அதிர்ஷ்டம் ஆறாய் பெருகுகிறது!

— எலீசா

ரூட்டை மாற்றும் வடிவேலு!

'ரீ - என்ட்ரி'யில் வடிவேலு காமெடியனாக நடித்த, கத்திச்சண்டை மற்றும் சிவலிங்கா படங்கள், பெரிதாக, பேசப்படாத நிலையில், அடுத்தபடியாக, ஆர்.கே.,வுடன் இணைந்து நடிக்கும், நீயும் நானும், நடுவுல பேயும் என்ற படத்தில், காமெடி வில்லனாக உருவெடுத்துள்ளார். தொடர்ந்து மற்றொரு படத்தில், காமெடி கலந்த, குணசித்ர கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

— சினிமா பொன்னையா

கறுப்பு பூனை!

ஜெயமான நடிகருடன், திரைமறைவில் காதல் லீலைகளை நடத்தி வந்த அங்காடி நடிகை, இப்போது, வெளிப்படையாக கட்டவிழ்த்து வருகிறார். மேற்படி நடிகர் நடிக்கும் படப்பிடிப்பு தளங்களுக்கு செல்லும் அம்மணி, கேரவனுக்குள் புகுந்தால், நடிகரை வெளியே வர விடுவதே இல்லை. இதனால், படப்பிடிப்பு தளத்தில் இந்த நடிகையை கண்டாலே, இயக்குனர்கள் டென்ஷன் அடைவதுடன், 'பேக் - அப்' சொல்லி, 'ஸ்பாட்டை' விட்டே வெளியேறி விடுகின்றனர்.

சுள்ளான் நடிகரின், அரவணைப்பில் இருந்து வரும் பால் நடிகை, தற்போது, அவரது கையை மீறி, வேறு சில நடிகர்களின் அன்பு பிடிக்குள் சிக்குண்டு கிடக்கிறார். இதனால், நடிகைக்கு, மாறி மாறி, சிபாரிசு செய்கின்றனர் நடிகர்கள். இதன் காரணமாக, 'இனிமேல், நடிகை தன்னை ஏறெடுத்து கூட, பார்க்க மாட்டாரோ...' என்று, கடும் மன உளைச்சலில் இருக்கிறார் சுள்ளான்.

சினி துளிகள்!

* எங்கேயும் எப்போதும் படத்தை தொடர்ந்து, ஜெய்-அஞ்சலி ஜோடி, பலுான் என்ற படத்தில் நடித்து வருகின்றனர்.

* சமூக பிரச்னைக்கு, தீர்வு சொல்லும் படங்களில் நடிக்கவே அதிக ஆர்வமாக இருப்பதாக சொல்கிறார், நிகிலா விமல்.

* வேலையில்லா பட்டதாரி இரண்டாம் பாகத்தை அடுத்து, திருட்டுப்பயலே இரண்டாம் பாகத்திலும், கதாநாயகியாக நடித்து வருகிறார், அமலாபால்.

* மாதவனுடன் நடித்துள்ள, விக்ரம் வேதா படத்தில், தாதா வேடத்தில் நடிக்கிறார், விஜயசேதுபதி.

அவ்ளோதான்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us