தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...


PUBLISHED ON : மே 21, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 21, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வீரசிவாஜி கதையை படமாக்கும் ராஜமவுலி!

பாகுபலி படத்தை இயக்கிய ராஜமவுலி, அடுத்து, மகாபாரதத்தை இயக்க நினைத்தார்; ஆனால், அந்த கதையில் மோகன்லாலை வைத்து, ஆயிரம் கோடி ரூபாய் பட்ஜெட்டில், ஒரு மெகா படம் தயாராவதால், வீரசிவாஜி கதையை படமாக்க திட்டமிட்டுள்ளார், ராஜமவுலி.

— சினிமா பொன்னையா

கெத்து காட்டும் சினேகா!

மீண்டும், சினிமாவில் நடிக்க துவங்கியிருக்கும் சினேகா, சிவகார்த்திகேயன் நடித்து வரும், வேலைக்காரன் படத்தில், முக்கிய வேடத்தில் நடிக்கிறார். தொடர்ந்து, மாறுபட்ட கதாபாத்திரங்களில், 'பாசிட்டிவ்' மட்டுமின்றி, முக்கியத்துவம் வாய்ந்த, 'நெகடிவ்' வேடங்களிலும் நடிக்கயிருக்கிறார். அதனால், தன் தோற்றத்தை கெத்தாக காட்டும், ஜீன்ஸ் பேன்ட் கெட்டப்பில், சினிமா வட்டாரங்களில் வளைய வருகிறார். விழுந்து, விழுந்து புரண்டாலும், ஒட்டுவது தான் ஒட்டும்!

— எலீசா

ஸ்ரீதிவ்யாவை, 'பீல்' செய்ய வைத்த பட வாய்ப்பு!

ஒரு படத்திலாவது விஜயுடன் நடித்து விட வேண்டும் என்பது, ஸ்ரீதிவ்யாவின் ஆசை. எனினும், தற்போது, விஜய் நடித்து வரும், தளபதி 61 படத்தில் நடிக்க, ஸ்ரீ திவ்யாவை அழைத்த போது, கால்ஷீட் பிரச்னையால், அப்படத்தில் நடிக்க முடியவில்லை. அதன்பின், நித்யாமேனன் ஒப்பந்தமாகி, நடித்து வருகிறார். இதனால், 'விஜய் படத்தில் நடிப்பதற்காக வாய்ப்பு கிடைத்தும், என்னால் நடிக்க முடியாமல் போய் விட்டதே...' என்று, 'பீல்' செய்கிறார். இட்ட எழுத்திற்கு மேல் ஏற ஆசைப்பட்டால் கிடைக்குமா?

— எலீசா

சிலம்பம் பயிலும் சமந்தா!

இதுவரை, சாதாரண வேடங்களில் நடித்து வந்த சமந்தாவின் கவனம், தற்போது, வித்தியாசமான கதாபாத்திரங்கள் பக்கம் திரும்பியுள்ளது. அதன் முதல் கட்டமாக, சிவகார்த்திகேயனுடன் அவர் நடிக்கும் புதிய படத்தில், சிலம்பக்கலை வீராங்கனையாக நடிக்கிறார். அப்படம் துவங்க, இன்னும் சில மாதங்கள் இருக்கும் நிலையில், இப்போதே, சிலம்பக்கலை பயிற்சியை, ஒரு மாஸ்டரை நியமித்து, துவங்கி விட்டதுடன், தான் பயிற்சி பெறும் அப்புகைப்படத்தையும், 'டுவிட்டரில்' வெளியிட்டுள்ளார். ஆசை பெருக அலைச்சலும் பெருகும்!

— எலீசா

விக்ரமுடன் நடிக்க சம்மதித்த கீர்த்தி சுரேஷ்!

விஜயுடன், பைரவா படத்தில் நடித்த போது, விக்ரமுடன் நடிக்க ஒரு வாய்ப்பு வந்தது; ஆனால், அவரது வயதை காரணம் காட்டி, அப்படத்தில் நடிக்க மறுத்தார், கீர்த்தி சுரேஷ். ஆனால், பைரவா படம், எதிர்பார்த்தபடி அவருக்கு திருப்புமுனையாக அமையாததால், ஹரி இயக்கத்தில், விக்ரம் நடிக்கும், சாமி இரண்டாம் பாகத்தில் நடிக்க, தற்போது ஒப்பந்தமாகியுள்ளார். அத்துடன், 'இனிமேல், கதை பிடித்தால், எந்த நடிகருடனும் நடிப்பேன்...' என்று, கோலிவுட்டில் தகவல் வெளியிட்டுள்ளார்.

— சினிமா பொன்னையா

கறுப்புப் பூனை!

வாசனை காமெடியன், தாரா நடிகையுடன் ஒரு படத்திலேனும், நடித்து விட ஆசைப்பட்டார்; ஆனால், அம்மணி இடம் கொடுக்கவில்லை. இந்நிலையில், பரோட்டா காமெடியன், தற்போது, ஒரு படத்தில் தாரா நடிகையுடன் நடிக்கிறார். நடிகையை சுற்றி பின்னப்பட்டுள்ள கதை என்ற போதும், காமெடியனாக நடிக்கும் பரோட்டா நடிகர், அப்படத்தின், 'கதாநாயகனே தான் தான்' என்பது போல், கோலிவுட்டில், 'பில்டப்' கொடுத்து வருகிறார்.

கயல் நடிகைக்கு, தொடர்ந்து சிபாரிசு செய்து வந்த பிரகாசமான நடிகர், இப்போது, அம்மணியை தன் படங்களில் நடிக்க வைப்பதில்லை என்றாலும், தன் கட்டுப்பாட்டில் தான் வைத்திருக்கிறார். அத்துடன், நடிகைக்கு, தன் செலவிலேயே, வீடு வாங்கியும், கொடுத்துள்ளார். இச்சேதி, நடிகரின் இல்லத்தரசியின் காதுகளை எட்ட, நடிகரின் வீட்டில், புயல் வீசத் துவங்கியுள்ளது.

சினி துளிகள்!

* நாச்சியார் படத்தில், கதையின் நாயகியாக ஒப்பந்தமானதால் தான், விஜய்யின், 61வது படத்தில் இருந்து விலகியதாக சொல்கிறார், ஜோதிகா.

* 'கதாநாயகனுடன், படம் முழுக்க வரும் வேடங்களில் மட்டுமே நடிப்பேன்...' என்கிறார், தமாசு நடிகர் சூரி.

* 'அடங்காதே மற்றும் ஐங்கரன் படங்களில், ஆக் ஷன் வேடத்தில் நடித்து வருகிறார், ஜி.வி.பிரகாஷ்.

அவ்ளோதான்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us