தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...


PUBLISHED ON : ஜூலை 02, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 02, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்திய படமெடுக்கும் ஈரானிய இயக்குனர் மஜித் மஜித்!

உலகப்புகழ் பெற்ற, ஈரானிய இயக்குனர், மஜித் மஜித், தற்போது, இந்திய சினிமாவிற்குள் காலடியெடுத்து வைத்துள்ளார். அவர் இயக்கும், பியாண்ட் த க்ளவுட்ஸ் என்ற படம், இந்தி, ஆங்கிலம் மற்றும் தமிழ் என, மூன்று மொழிகளில் தயாராகி வருகிறது. அண்ணன், தங்கை இடையேயான உறவை மையப்படுத்தி உருவாகி வரும் இப்படத்தில், இந்தி நடிகர், இஷான் கட்டார், மலையாள நடிகை மாளவிகா மோகன் மற்றும் பழம்பெரும் தமிழ் நடிகை, ஜி.வி.சாரதா ஆகியோர், முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

— சினிமா பொன்னையா

அம்மா வேடங்களில் பிரபல கதாநாயகிகள்!

அரவிந்த்சாமி கதாநாயகனாக நடித்து வரும் சதுரங்க வேட்டை - 2 படத்தில், அவருக்கு மனைவியாகவும், நான்கு வயது சிறுமிக்கு, அம்மாவாகவும் நடிக்கிறார், த்ரிஷா. அதேபோல், இமைக்கா நொடிகள் படத்தில், போலீசாக நடிக்கும் நயன்தாராவும், நான்கு வயது சிறுமிக்கு, அம்மாவாக நடிக்கிறார். இந்நிலையில், கமலுடன், விஸ்வரூபம் மற்றும் உத்தம வில்லன் படங்களில் கதாநாயகியாக நடித்த, பூஜாகுமார், தற்போது, தெலுங்கில், டாக்டர் ராஜசேகர் கதாநாயகனாக நடிக்கும், கருடாவேகா என்ற படத்தில், ஆறு வயது சிறுமிக்கு, அம்மாவாக நடித்து வருகிறார்.

— எலீசா

ரஜினியின், 'டாட்டூ' ரகசியம்!

இயக்குனர், பா.ரஞ்சித் இயக்கத்தில், தற்போது, ரஜினி நடித்து வரும் படம், காலா. மும்பையில் வாழ்ந்த நெல்லை மாவட்டத்தை சேர்ந்த, தாதா, திரவியம் நாடாரின் கதாபாத்திரத்தில் நடிக்கும் ரஜினி, இப்படத்துக்காக, தன் கையில், 'எஸ்' வடிவில், 'டாட்டூ' வரைந்துள்ளார். இந்த, 'டாட்டூ'வுக்கும், படத்தின் கதைக்கும் மிகப்பெரிய சம்பந்தம் உள்ளது. இது குறித்து எழுந்த கேள்விகளுக்கு, 'படம் திரைக்கு வரும் போது, அதன் முக்கியத்துவம் புரியும்...' என்று, 'சஸ்பென்ஸ்' வைத்துள்ளார், ரஞ்சித்.

— சி.பொ.,

உலக அளவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள்!

உலக அளவில், அதிக சம்பளம் வாங்கும், 100 நடிகர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது, பிரபல ஆங்கில பத்திரிகை ஒன்று. அப்பட்டியலில், 66 சதவீதம் பேர் அமெரிக்கர்கள், 20 சதவீதம் ஐரோப்பியர், மற்றும் 12 சதவீதம் பேர் கனடாவை சேர்ந்தவர்கள். ஆசிய நாடுகளில், 5 சதவீதத்தினரே இடம் பெற்றுள்ளனர். அவ்வகையில், இந்திய நடிகர்களில் ஷாரூக்கான், 65வது இடத்தையும், சல்மான்கான், 71வதும் மற்றும் அக் ஷய்குமார், 80வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

— சினிமா பொன்னையா

கறுப்புப் பூனை!

தாரா நடிகையை பாலிவுட்டில் இறக்கி விட, சில தயாரிப்பாளர்கள் முயற்சித்தனர். ஆனால், அவரோ, 'பாலிவுட் சினிமா, 'கல்ச்சர்' எனக்கு செட்டாகாது. சமீபகாலமாகத் தான் கவர்ச்சி, 'இமேஜில்' இருந்து விடுபட்டுள்ளேன். இந்நேரத்தில், பாலிவுட்டில், 'என்ட்ரி' கொடுத்தால், பழையபடி என்னை பிகினி நடிகையாக்கி விடுவர்...' என்று கூறி, பாலிவுட் வாய்ப்புகளை, 'ரிட்டன்' செய்து விட்டார்.

வம்பு நடிகருடன் அறிமுகமான, கேரளத்து நடிகை, தமிழ் ரசிகர்களின் ரசனைக்கேற்ப, வாட்ட சாட்டமாக இருந்த போதும், கோலிவுட்டில் எதிர்பார்த்த வாய்ப்புகள் இல்லை. அதனால், 'பீல்' செய்து வரும் நடிகை, இதுவரை, கவர்ச்சிக்கு கட்டுப்பாடு வைத்திருந்தவர், இப்போது, 'கதைக்கு தேவையென்றால், கவர்ச்சி காண்பிக்க தயார்...' என, புதிய அறிவிப்பை, கோலிவுட்டில் வெளியிட்டுள்ளார். ஆனாலும், அம்மணி நடித்த படங்கள், 'ஹிட்'டடிக்காததால், கமர்ஷியல் இயக்குனர்களிடமிருந்து, எவ்வித ரியாக் ஷனும் இல்லை.

சினி துளிகள்!

இமைக்கா நொடிகள் படத்தில், போலீஸ் வேடத்திற்காக, 10 கிலோ வரை எடை குறைந்துள்ளார், நடிகை நயன்தாரா.

நடிகர் விஜயுடன் இணைந்து, கத்தி படத்தில் நடித்த, இந்தி நடிகர் நீல் நிதின் முகேஷ், தற்போது, பாகுபலி கதாநாயகன் பிரபாஸ் நடிக்கும், சாஹோ படத்தில், வில்லனாக நடிக்கிறார்.

தன் மூத்த மகள் ஷிவானியை, சினிமாவில் அறிமுகம் செய்ய, தீவிரமாக கதை கேட்டு வருகிறார், தெலுங்கு நடிகர், டாக்டர் ராஜசேகர்.

சத்ரியன் படத்தை அடுத்து, இப்படை வெல்லும் படத்தில் நடித்து வருகிறார், நடிகை, மஞ்சிமா மோகன்.

இந்தி நடிகர், ரன்வீர் சிங்குடன், 'டேட்டிங்' செல்ல ஆசைப்படுவதாக கூறுகிறார், நடிகை, ராகுல் ப்ரீத் சிங்.

அவ்ளோதான்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us