தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...


PUBLISHED ON : பிப் 13, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 13, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஐந்து மொழிகளில் கின்னஸ் சாதனை படம்!

மோகன்லால் நடிப்பில், 19 மணி நேரத்தில் உருவான பகவான், கன்னட ஹீரோ சிவராஜ்குமார் நடிப்பில், 18 மணி நேரத்தில் உருவான சுக்ரிவா ஆகிய படங்களை இயக்கியவர் பிரசாந்த். இவர், தற்போது தமிழில், உங்கள் வீட்டு பிள்ளை என்ற படத்தை தயாரிப்பதோடு, அடுத்து ஒரே கதையை ஐந்து மொழிகளில் ரீ-மேக் செய்ய திட்டமிட்டுள்ளார். கின்னஸ் சாதனைக்காக எடுக்கப்படும் இப்படத்தை, ஐந்து மொழியை சார்ந்த பிரபல இயக்குனர்கள் இயக்குகின்றனர். — சினிமா பொன்னையா.



மனித உயிரின் எடை 21 கிராம்!


ஒவ்வொரு மனிதனின் இறப்புக்குப் பின்பு, அவனது மொத்த எடையிலிருந்து 21 கிராம் குறைகிறதாம். அதுவே, நம் உயிரின் எடை என அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்தக் கருத்தை மையமாக வைத்து, 'உயிரின் எடை 21 கிராம்' என்ற பெயரில், ஒரு படம் உருவாகிறது. இப்படத்தை, தண்டாயுதபாணி, கிமு, சாமிடா ஆகிய படங்களுக்கு இசையமைத்த இந்திரஜித் இயக்கி, நாயகனாகவும் நடிக்கிறார். — சி.பொ.,

தேஜாஸ்ரீ அதிரடி ஆட்டம்!

'சின்ன வீடா வரட்டுமா?' பாடலுக்கு நடனமாடிய தேஜாஸ்ரீக்கு, அதே பாணியில், தற்போது நிதின் சத்யா நடித்துள்ள, மயங்கினேன் தயங்கினேன் என்ற படத்தில், ஒரு குத்துப்பாட்டு கிடைத்துள்ளது. இந்தப் பாடலில் ரகசியா, முமைத்கான் உள்ளிட்ட அதிரடி ஆட்டக்காரிகளே அதிரும் வகையில், டூ-பீஸ் ஆட்டம் போட்டிருக்கிறார். ஏட்டிக்கு போட்டி, எகனைக்கு மொகனை! — எலீசா.

சுவாதிகா விடும் தூது!

முதல் காதல் மழை படத்தில் நடித்துள்ள சுவாதிகா, மைனாவை இயக்கிய பிரபு சாலமன், களவாணியை இயக்கிய சற்குணம் போன்ற வெற்றிப்பட இயக்குனர்களுக்கு தூதுவிட்டு வருகிறார். 'இதுபோன்ற டைரக்டர்களின் படங்கள் கிடைத்தால், நாயகி மட்டுமல்ல, வில்லி வேடமென்றாலும் நடிப்பேன்; கவர்ச்சி கதவுகளையும் திறந்து விடுவேன். ஏனென்றால், அவர்கள் கவர்ச்சி காட்சி வைத்தாலும், அதிலும் ஒரு காரணம் இருக்கும்...' என்று கருத்தோடு பேசுகிறார். காரணம் இல்லாமல் காரியம் இல்லை!— எலீசா.

கிடப்பில் போட்ட பார்த்திபன்!

சில வருடங்களாக, வித்தகன் படத்தை இயக்கி, நடித்து வந்த பார்த்திபன், தற்போது பைனான்ஸ் பிரச்னையால், அப்படத்தை கிடப்பில் போட்டுள்ளார். மேலும், ஆயிரத்தில் ஒருவன் உள்பட, சில படங்களில் கேரக்டர் ஆர்டிஸ்ட்டாக உருவெடுத்த பார்த்திபனுக்கு, தற்போது அகத்தியன் இயக்கும் அய்யம்பேட்டை அறிவுடைநம்பி கலியபெருமாள் என்ற படத்தில், நாயகனாக நடிக்கும் வாய்ப்புக் கிடைத்துள்ளது. இதனால், கேரக்டர் ரோல்களில் நடிப்பதையும் தற்காலிகமாக தள்ளி வைத்துள்ளார். — சி.பொ.,

வினியோகஸ்தரான இளையராஜா!

மதுரை மண்வாசனையில் உருவாகி வரும் புதிய படம், செங்காத்து பூமியிலே... இப்படத்தின் இசையமைப்பாளரான இளையராஜா, படமாக்கப்பட்ட காட்சிகளைப் பார்த்து அசந்து விட்டார். விளைவு, 'இப்படத்தை வெளியிடும் உரிமையை நான் பெற்றுக் கொள்கிறேன்...' என்று சொல்லி, பட யூனிட்டுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.— சி.பொ.,

அவ்ளோதான்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us