sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/வாரமலர்/இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...


PUBLISHED ON : டிச 10, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 10, 2017


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

டிஜிட்டலுக்கு மாறும் கமலின், 'ஹிட்' படங்கள்!

எம்.ஜி.ஆர்., நடித்த ஆயிரத்தில் ஒருவன், உலகம் சுற்றும் வாலிபன் மற்றும் சிவாஜிகணேசன் நடித்த, கர்ணன், வீரபாண்டிய கட்டபொம்மன், வசந்த மாளிகை என பல படங்கள், டிஜிட்டல் தொழில் நுட்பத்துக்கு மாறி, மீண்டும், 'ரிலீஸ்' செய்யப்பட்டன. இந்நிலையில், தற்போது, கமல் நடித்த, காக்கி சட்டை, கல்யாண பரிசு, அபூர்வ சகோதரர்கள், விக்ரம் மற்றும் சகலகலா வல்லவன் ஆகிய படங்களும் டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு வருகின்றன.

சினிமா பொன்னையா

நடிப்பு சொல்லிக் கொடுத்த தனுஷ்!

கவுதம் மேனனின், துருவ நட்சத்திரம் மற்றும் தனுஷின், வடசென்னை படங்களில் நடிக்கிறார், ஐஸ்வர்யா ராஜேஷ். இதில், வடசென்னை படத்தில், சென்னை தமிழ் பேசி நடிப்பதால், சில வார்த்தைகளை பேச முடியாமல் தடுமாறுகிறார். அப்போதெல்லாம் அவருக்கு சென்னை தமிழ் மட்டுமின்றி, நடிப்பையும் தனுஷ் சொல்லிக் கொடுப்பதாக கூறும் ஐஸ்வர்யா ராஜேஷ், 'வடசென்னை படம், காக்கா முட்டை போன்று, எனக்கு, இன்னொரு பிரேக் கொடுக்கும்...' என்கிறார். எண்ணத் தொலையாது; ஏட்டில் அடங்காது!

எலீசா

பிரான்சில் முகாமிட்ட தென்னிந்திய நடிகைகள்!

இந்தியில் வெளியான, குயின் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளிலும் ஒரே நேரத்தில், ரீ-மேக் ஆகி வருகிறது. இதில், தமிழ் பதிப்பில் காஜல் அகர்வாலும், தெலுங்கில், தமன்னாவும், மலையாளத்தில், மஞ்சிமா மோகனும், கன்னடத்தில், பருல் யாதவும் நாயகிகளாக நடிக்கின்றனர். இப்படங்களின் படப்பிடிப்பு, தற்போது, பிரான்ஸ் நாட்டில் வெவ்வேறு லொகேஷன்களில் நடந்து வருகிறது.

எலீசா

புது அவதாரம் எடுக்கும் அனுஷ்கா!

பாகுபலி 2 படத்தை தொடர்ந்து, பாக்மதி படத்தில் கதையின் நாயகியாக, ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக நடித்துள்ளார், அனுஷ்கா. இப்படம், அவருக்கு இன்னொரு அருந்ததி என்று சொல்லும் அளவுக்கு, ஆக் ஷன் காட்சிகளில் ஆவேச நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இதையடுத்து, மரத்தை சுற்றி டூயட் பாடும் கதைகளை தவிர்க்கும் அனுஷ்கா, சமூக அக்கறையுள்ள கதைகளில் நடிப்பதில் ஆர்வமாக இருப்பதாக கூறுகிறார். எல்லாரும் தேங்காய் உடைத்தால், நான் சிரட்டையாவது உடைக்கலாம்!

எலீசா

மூன்று பாகங்களில் விக்ரம் - தனுஷ் படங்கள்!

ஆடுகளம் மற்றும் பொல்லாதவன் படங்களைத் தொடர்ந்து, வெற்றி மாறன் இயக்கத்தில், தனுஷ் நடித்து வரும் படம், வடசென்னை. இந்த படம் மூன்று பாகங்களாக வெளியாக உள்ளது. அதேபோல், கவுதம் மேனன் இயக்கத்தில், விக்ரம் நடித்துள்ள, துருவ நட்சத்திரம் படத்தையும் மூன்று பாகங்களாக வெளியிட இருக்கிறார், கவுதம் மேனன்.

— சினிமா பொன்னையா

கறுப்பு பூனை!

தான் இயக்கி, நடித்த படம் தோல்வியடைந்ததால், இனிமேல் நாயகனாக நடிக்கப் போவதில்லை என்ற முடிவுக்கு வந்துள்ளார், கனியானவர். அதேசமயம், தொடர்ந்து குணசித்திர நடிகராக பயணிக்க விரும்பும் அவர், அழுத்தமான கதாபாத்திரங்கள் என்றால் சம்பள விஷயத்தில் கெடுபிடி செய்யாமல் அந்த வாய்ப்பை ஏற்றுக்கொள்கிறார்.

சினி துளிகள்!

* பள்ளி பருவத்திலே என்ற படத்தில், நாயகனாக அறிமுகமாகிறார், இசையமைப்பாளர் சிற்பியின் மகன், நந்தன் ராம்.

* ரஜினியின், காலா படத்தில், ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார், சமுத்திரகனி.

* காமெடி மட்டுமின்றி குணசித்ர வேடங்களில் நடிப்பதிலும் ஆர்வம் காட்டுகிறார், தமாஷ் நடிகர், சூரி.

அவ்ளோதான்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us