PUBLISHED ON : செப் 02, 2018

சீன மொழி பேசும் விஜய்யின், மெர்சல்!
விஜய் நடித்த, மெர்சல் படம், அரசியல் சர்ச்சைகளில் சிக்கி, பெரிய அளவில் வெற்றி பெற்றது. 200 கோடி ரூபாய் வரை, வசூல் செய்த அப்படம், தற்போது, சீன மொழியில், 'டப்' செய்யப்பட்டு சீனாவில் வெளியாக உள்ளது. இதற்கு முன், ஹிந்தி மற்றும் தெலுங்கில் தயாரான சில படங்கள் சீனாவில் வெளியான போதும், சீனாவில் வெளியாகும் முதல் தமிழ்ப்படம், விஜய் நடித்த, மெர்சல் என்பது குறிப்பிடத்தக்கது.
- சினிமா பொன்னையா
ஹாலிவுட் நடிகரை சந்தித்த, ஏ.ஆர்.ரஹ்மான்!
சமீபத்தில், ஹாலிவுட் நடிகர்வில் ஸ்மித்தை சந்தித்த, ஏ.ஆர்.ரஹ்மான், அந்த புகைப்படங்களை, தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும், தன் மனதுக்கு நெருக்கமானவர்கள் பற்றி அவரிடம் கலந்துரையாடியதாக கூறும், ஏ.ஆர்.ரஹ்மான், டிசம்பர் மாதம் சென்னையில் தான் நடத்தும் இசை நிகழ்ச்சியில், வில் ஸ்மித்தும் பங்கேற்க போவதாக தெரிவித்துள்ளார்.
— சி.பொ.,
நிவேதா பெத்துராஜின் ஆக் ஷன் அவதாரம்
பிரபுதேவா போலீசாக நடித்து வரும், பொன்.மாணிக்கவேல் என்ற படத்தில், நாயகியாக நடிக்கும் நிவேதா பெத்துராஜும் போலீசாக நடிக்கிறார். முதன்முதலாக காக்கி சட்டை அணிந்து நடிக்கும் நிவேதா, முன்னதாக, போலீஸ் வேடத்தில் நடித்த சில நடிகையர் படங்களைப் பார்த்து, தன்னை தயார் படுத்திக்கொண்டதாகவும், அப்படத்தில், ஒரு சண்டை காட்சியில் நடிக்கப்போவதாக சொல்பவர், 'இப்படம், 'ரொமான்ஸ்' மட்டுமின்றி, ஆக் ஷன் நாயகியாகவும் என்னை வெளிப்படுத்தும்...' என்கிறார். ஆகும் காலம் வந்தால், தேங்காய்க்கு, இளநீர் போல் சேரும்!
— எலீசா
சிம்பு வில்லன் அவதாரம்!
மன்மதன் படத்தில் நெகடிவ் கலந்த கதாநாயகனாக நடித்தவர் சிம்பு. தற்போது, வெங்கட் பிரபு, இயக்கும், மாநாடு என்ற படத்தில் வில்லனாக நடிக்கிறார். இதன்பின், 'ரொமான்டிக் ஹீரோ' என்பதில் இருந்து விடுபட்டு, மாறுபட்ட, 'பர்பாமென்ஸ்' நாயகனாக உருவெடுக்கப்போகிறார். அத்துடன், தன் கெட்டப்பையும் படத்துக்குப் படம் மாற்றப்போவதாக சொல்லும் அவர், அதிரடியான அரசியல் கதைகளிலும் கூடுதல் ஆர்வம் காட்டப்போவதாக கூறுகிறார்.
— சினிமா பொன்னையா
கறுப்பு பூனை!
ரஷ்யாவைச் சேர்ந்தவரை சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட சிவாஜி கேர்ள் நடிகை, வழக்கம் போல் சினிமா நடிப்பை தொடர்ந்து வருகிறார். அத்துடன், திருமணத்திற்கு பின் நடிகைகள் கவர்ச்சி விஷயத்தில் அடக்கி வாசிப்பர். ஆனால், இவரோ, புதிய பட வாய்ப்புகளுக்காக, தன் பிகினி போட்டோக்களை கமர்ஷியல் இயக்குனர்களுக்கு அனுப்பி, அவர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கிறார்.
''நடு ரோடுல காற்றாடி விட வந்துட்டியே... பானா காத்தாடி அதர்வான்னு நினைப்பா!''
சில நடிகர்களைப் பார்த்து தானும் படம் தயாரித்து நடித்தார், பரதேசி நடிகர். ஆனால், அந்த படம் அவரது கையை பதம் பார்த்தது. இதனால், கடனில் சிக்கியிருக்கும் நடிகர், மேலும் கதைகளுடன் தன்னை படம் தயாரிக்குமாறு முற்றுகையிட்ட இயக்குனர்களை கையெடுத்து கும்பிட்டு, திருப்பி அனுப்புகிறார்.
''அடேங்கப்பா... நடிகை ஸ்ரேயா மாதிரி ஸ்டைலா மாறிட்டியே எலீசா... என் கண்ணே பட்டுடும் போலிருக்கே!''
சினி துளிகள்!
* வரும் - ஆயுத பூஜையன்று, விஷாலின் சண்டக்கோழி-2, தனுஷின், வடசென்னை, ஜோதிகாவின், காற்றின் மொழி ஆகிய படங்கள் திரைக்கு வருகின்றன.
* ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள, கனா படம், மகளிர் கிரிக்கெட் விளையாட்டை மையமாகக் கொண்ட கதையில் உருவாகி வருகிறது.
* சந்தானம் நடித்து வரும், தில்லுக்கு துட்டு - 2 படம் மூலம், தமிழுக்கு இறக்குமதியாகியுள்ளார், மலையாள நடிகை, ஷிர்தா சிவதாஸ்.
* கொரில்லாவைத் தொடர்ந்து, கொம்பு என்ற படத்தில் நடிக்கிறார், ஜீவா.
அவ்ளோதான்!
