sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

இதப்படிங்க முதல்ல...

/

இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...


PUBLISHED ON : டிச 02, 2018

Google News

PUBLISHED ON : டிச 02, 2018


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊழலுக்கு எதிரான கதையில், கமல் - விஜய்!

ஷங்கர் இயக்கத்தில், கமல் நடிக்கும், இந்தியன் - 2 படம், முதல் பாகத்தைப் போலவே, ஊழலுக்கு எதிரான கதையில் உருவாகிறது. இதில், இந்தியன் தாத்தா, இன்னும் அதிரடியாக விஸ்வரூபம் எடுக்கிறார். அதே போல், தெறி மற்றும் மெர்சல் படங்களைத் தொடர்ந்து, அட்லி இயக்கும், 63வது படத்தில், சி.பி.ஐ., அதிகாரியாக நடிக்கிறார், விஜய். இந்த படத்தில், அரசியல் ரீதியாக நடந்து வரும், 'அண்டர் கிரவுண்ட்' ஊழல்களை, அம்பலப்படுத்துகிறார்.

சினிமா பொன்னையா

வதந்தி பரப்பும் லட்சுமி மேனன்!

லட்சுமி மேனனின் எடை அதிகரித்து விட்டதால், அவரை பலரும் ஓரங்கட்டி வந்தபோதும், தற்போது, பிரபுதேவாவுடன், யங் மங் சங் படத்தில் நடித்துள்ளார். இதையடுத்து, யாரும் அவரை படங்களுக்கு ஒப்பந்தம் பண்ணவில்லை. இருப்பினும், தான் நடிக்க விரும்பும் சில நடிகர்களை சந்தித்து, படவேட்டையில் ஈடுபட்டுள்ளார், லட்சுமி மேனன். அதோடு, நட்பு அடிப்படையில் சந்தித்ததை வைத்து, அடுத்தபடியாக அவர்களுடன் நடிப்பது போன்று வதந்தி பரப்பி, மீண்டும் தான், 'பிசி'யாகி விட்டது போல் ஒரு பரபரப்பை ஏற்படுத்தி விட்டுள்ளார். காலம் செய்த கோலத்துக்கு யாரை வெறுப்பது!

எலீசா

காஜல் அகர்வால் எண்ணம் ஈடேறுமா?

தற்போது, ஹிந்தி, 'ரீ - மேக்'கான, பாரிஸ் பாரிஸ் படத்தில், கதையின் நாயகியாக நடித்துள்ள காஜல் அகர்வால், இதன் பின், தன் மார்க்கெட் போய் விடுமோ என்ற கவலையில் இருந்தார். ஆனால், கமல் நடிக்கும், இந்தியன் - 2 படத்தில், ஒரு வேடத்தில் நடிக்க, அவரை அழைத்து பேசியிருக்கிறார், இயக்குனர் ஷங்கர். இதனால், உற்சாகத்தில் எகிறி குதித்து வரும், காஜல், அந்த படத்தில் நடிக்க தனக்கு ஒப்பந்தம் போடுவதற்கு முன், இந்த செய்தியை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி, புதிய பட வாய்ப்புகளை தன் பக்கம் இழுத்து வருகிறார். எண்ணம் இட்டவன் துாங்கான்; ஏடு எடுத்தவனும் துாங்கான்!

எலீசா

பள்ளி ஆசிரியை ஆகிறார், ஜோதிகா!

பெண்களுக்கு தன்னம்பிக்கை கொடுக்கும் கதைகளாக தேர்ந்தெடுத்து, நடித்து வருகிறார் ஜோதிகா. காற்றின் மொழி படம் வெளியான நிலையில், புதுமுக இயக்குனர் ராஜ் இயக்கும் படத்தில், காக்க காக்க படத்தை அடுத்து, மீண்டும் பள்ளி ஆசிரியை வேடத்தில் நடிக்கிறார். இன்றைய மாணவ - மாணவியருக்கு தன்னம்பிக்கை, அறிவுரை, உற்சாகம் கொடுக்கக் கூடிய, ஒரு பொறுப்பான ஆசிரியையாக நடிக்கப் போவதாக கூறுகிறார்.

— சினிமா பொன்னையா

கறுப்புப் பூனை!

பீட்சா நடிகர் தொட்டதெல்லாம், 'ஹிட்'டாகி வருகிறது. இதனால், மேல்தட்டு நடிகையர் அனைவருமே, அவருடன் நடிக்கும் ஆசையில் சிபாரிசு கோரி, துரத்துகின்றனர். ஆரம்பத்தில் சில நடிகையருக்கு சிபாரிசு செய்து, 'கிசுகிசு'வில் சிக்கியவர், திரும்பவும் அதே பிரச்னையில் சிக்கி, 'இமேஜை' கெடுத்துக் கொள்ளக்கூடாது என்பதற்காக, அம்மணிகள் எதிரில் வந்தால், அவர்களின் கண்ணில் படாமல் தலைமறைவாகி விடுகிறார்.

'விஜய சேதுபதி அண்ணே... இந்த பார்சலை, மும்பைக்கு, 'கூரியர்ல' அனுப்பணும்... 'கூரியர்' அலுவலகத்துல கொடுத்துட்டு வர்றீங்களா...' என்று கேட்டார், காசாளர்.

கணவரை விவாகரத்து செய்த பின், சுதந்திர பறவையாகி விட்ட, கேரளத்து பால் நடிகை, சில இளவட்ட நடிகர்களுடன், 'டேட்டிங்' செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இதனால், அவ்வப்போது, 'கிசு கிசு' சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார். அதன் காரணமாக, மகளுக்கு மீண்டும் கால்கட்டு போட, அவரது பெற்றோர், வரன் தேடுகின்றனர். இதனால், தன் சுதந்திரத்திற்கு மறுபடியும் தடை வந்து விடுமோ என்று, கலவர மனநிலையில் காணப்படுகிறார் நடிகை. அதோடு, மாப்பிள்ளையின் புகைப்படத்தை காண்பித்தால், ஏதாவது குறை சொல்லி தட்டிக்கழித்து வருகிறார்.

'ஏண்டா மவனே... 29 வயசாகுதே... கல்யாணம் கட்டிக்கடான்னு சொன்னா கேக்கறியா... அமலாபால் மாதிரி பெண் வேணும்ன்னா எங்கடா போய் தேடுறது...' என்றார், அப்பா.

சினி துளிகள்!

* இமைக்கா நொடிகள் படத்தில், அதர்வாவுக்கு ஜோடியாக நடித்த ராசி கண்ணா, அடங்கமறு படத்தில், ஜெயம் ரவியுடன் நடித்து வருகிறார்.

* அரவிந்த்சாமி நடித்து வரும், கள்ளபார்ட் படம், வங்கி கொள்ளை சம்பந்தப்பட்ட கதையில் தயாராகிறது.

* மிஸ்டர் சந்திரமவுலி படத்தை அடுத்து, தேவராட்டம் என்ற படத்தில் நடித்து வருகிறார், கவுதம் கார்த்திக்.

* சிண்ட்ரல்லா என்ற படத்தில், இரண்டு வேடங்களில் நடிக்கிறார், ராய் லட்சுமி.

* சீதக்காதி படத்தில், முதிர்ச்சியான நாடக கலைஞராக நடித்துள்ளார், விஜய சேதுபதி.

* ஆடை படத்தில், காமினி என்ற வேடத்தில் நடிக்கிறார், அமலாபால்.

அவ்ளோதான்!






      Dinamalar
      Follow us