தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...


PUBLISHED ON : ஏப் 17, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 17, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தங்கர்பச்சான் இயக்கும் தொலைந்து போனவர்கள்!

தங்கர்பச்சான் இயக்கியுள்ள, களவாடிய பொழுதுகள் படம், இன்னும் வெளியாகவில்லை. இருப்பினும், தான் எழுதிய, தொலைந்து போனவர்கள் என்ற நாவலை மையமாக வைத்து, அடுத்த படத்திற்கான வேலைகளில் இறங்கி விட்டார். இது, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அப்பா, மகன், தாத்தா ஆகியோரை பற்றிய கதை.

— சினிமா பொன்னையா.

கமலுக்கு ஜோடியாக இந்தி நடிகை!

செல்வராகவன் இயக்கத்தில், கமலுக்கு ஜோடியாக நடிக்க, தீவிரமாக முயற்சி எடுத்தார் அனுஷ்கா. ஆனால், கடைசி நேரத்தில் இந்தி நடிகை சோனாக்ஷி சின்ஹாவை, 'புக்' பண்ணி, அனுஷ்காவுக்கு ஏமாற்றத்தை கொடுத்து விட்டார் செல்வராகவன். இந்த சோனாக்ஷி, பிரபல இந்தி நடிகரான சத்ருகன் சின்ஹாவின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

— சி.பொ.,

பதற வைக்கும் பரத்!

இதுவரை தான் நடித்த படங்களில், ஒரு சிறிய ஜம்பிங் என்றால் கூட, 'டூப்' போட்டு நடித்த பரத், வானம் படத்தில் முதன் முறையாக, 'ரிஸ்க்' எடுத்திருக்கிறார். நிஜமாகவே, தன் கையால் கார் கண்ணாடியை அடித்து உடைப்பது, மலை உச்சியிலிருந்து உருண்டு வருவது என்றெல்லாம் ரத்தம் சொட்டும் அளவுக்கு நடித்துள்ளார். பரத்தின் இந்த ரிஸ்க்கான நடிப்பை பார்த்து, யூனிட்டே பதறிப் போனது.

— சி.பொ.,

அமலா பால் வருத்தம்!

மைனா படத்துக்குப் பின், மார்க்கெட் எகிறினாலும், அமலாபால் நினைத்தது போன்று சிங்கிள் ஹீரோயின் வேடங்கள் கிடைத்தபாடில்லை. விக்ரமுடன் இவர் ஜோடி சேர்ந்துள்ள படத்தில், இன்னொரு நாயகியாக அனுஷ்காவும் இருக்கிறார்; ஆர்யா, மாதவனுடன் இவர் நடிக்கும், வேட்டை படத்திலும் இன்னொரு நாயகியாக சமீரா ரெட்டியும் உள்ளார். இப்படி, பிரபல ஹீரோக்களுடன் தான் நடிக்கும் படங்களில், வேறு ஹீரோயின்களும் இடம்பெறுவதால், வருத்தத்தில் இருக்கிறார் அமலா பால். இந்நிலையை மாற்ற, எதிர்காலத்தில் சிங்கிள் ஹீரோயின் சப்ஜெக்டுகளாக ஓ.கே., செய்து நடிக்க இருப்பதாகவும் கூறுகிறார். வந்த வெள்ளம் இருந்த வெள்ளத்தை தள்ளினது போல!

— எலீசா.

அசின் வேடத்தில் அனுஷ்கா!

தமிழில் விஜய் நடித்த, காவலன் படம் தெலுங்குக்கு, ரீ-மேக் ஆகிறது. வெங்கடேஷ் நாயகனாக நடிக்கும் இப்படத்திலும், நாயகியாக நடிக்க தீவிர முயற்சி எடுத்தார் அசின். ஆனால், தெலுங்கில் அவருக்கு மார்க்கெட் இல்லாததால், அவரது வேண்டுகோளை நிராகரித்து விட்ட இயக்குனர் சித்திக், அசின் வேடத்தில், அனுஷ்காவை நடிக்க வைக்கிறார். ஒரு மரத்துப் பட்டை வேறு ஒரு மரத்தில் ஒட்டுமா?

— எலீசா.

தமன்னாவை விருது ஆசை பிடித்து ஆட்டுகிறது!

இதுவரை கமர்ஷியல் கதைகளுக்கே முதலிடம் கொடுத்து, நடித்து வந்த தமன்னா, இனிமேல், அருந்ததியில் அனுஷ்கா, பருத்தி வீரனில் ப்ரியாமணி போன்றோர் நடித்தது மாதிரியான மாறுபட்ட வேடங்களில் நடிக்க இருப்பதாக கூறுகிறார். அதோடு, தனக்குத்தானே, 'டப்பிங்' பேசவும் முடிவெடுத்துள்ள அவர், 'எதிர்காலத்தில் நடிப்புக்காக விருதுகள் பெற வேண்டும் என்ற ஆசையே என்னை இப்படி மாற்றியுள்ளது...' என்கிறார். வருந்தி, வருந்தி பார்த்தாலும், வருகிற போதுதான் வரும்!'

— எலீசா.

நடிகை நமீதாவின், ஜவுளி வியாபாரம் சூரத் நகரில் ஜோராக நடந்து வருகிறது. இந்நிலையில், புதிதாக ஒரு கட்டுமான நிறுவனத்தையும் துவங்கியுள்ளார்.

டாப் ரேட்டிங்கில் சந்தானம்!

யூத் ஹீரோக்களுக்கு மேட்சான காமெடியனாகி விட்டார் சந்தானம். அதோடு, பாஸ் என்ற பாஸ்கரன் படத்துக்குப் பிறகு, பெரிய கமர்ஷியல் அந்தஸ்தும் சந்தானத்துக்கு கிடைத்திருப்பதால், அவருக்கும், ஹீரோக்களுக்கு இணையாக, கூடுதலான காட்சிகள் தருகின்றனர். அந்த வகையில், வானம் படத்தின் ஒரு பாடல் காட்சியில், சிம்பு, அனுஷ்காவுடன் இணைந்து, சந்தானமும் அதிரடி குத்தாட்டம் ஆடியுள்ளார்.

— சினிமா பொன்னையா.

அவ்ளோதான்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us