தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...


PUBLISHED ON : மே 08, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 08, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நாசர் நடிகராகி, 25 வருடமாச்சு!

நடிகர் நாசர் சினிமாவில் நடிக்க ஆரம்பித்து, இந்த ஆண்டோடு, 25 வருடங்கள் ஆகிறது. இந்த, 25 ஆண்டு சினிமா கேரியரில், தற்போது தான் நடித்துள்ள, மகாராஜா படத்தை முக்கியமானதாக சொல்கிறார். மேலும், 'இதுவரை நான் நடித்திராத வித்தியாசமான வேடம் மட்டுமின்றி, படத்தில் நானும் இன்னொரு கதாநாயகன் போன்று நடித்திருக்கிறேன்...' என்கிறார்.

— சினிமா பொன்னையா.

டாப்ஸி கொள்கை எது தெரியுமா?

தற்போதைய நிலவரப்படி ஹன்சிகா மோத்வானி மற்றும் டாப்ஸி ஆகிய இருவருக்குமிடையேதான் தொழில்முறை போட்டி வலுத்திருக்கிறது. ஆனால், ஹன்சிகா, நான்கு படங்கள் கைவசம் வைத்திருக்க, டாப்ஸியோ, ஆடுகளத்திற்கு பிறகு, வந்தான் வென்றான் படத்தை மட்டுமே வைத்துள்ளார். கேட்டால், 'கைநிறைய படங்கள் இருப்பதாக, 'பில்ட்-அப்' கொடுப்பது எனக்கு பிடிக்காது; ஒன் பை ஒன் தான் என் பாலிசி...' என்கிறார். ஆடம்பரம் டம்பம்; அபிஷேகம் சூன்யம்!

— எலீசா.

த்ரிஷா அதிரடி பிரவேசம்!

இந்தியில் முதல் படம் தோல்வியடைந்து விட்ட போதும் தளரவில்லை த்ரிஷா. அசின், ஸ்ரேயா போன்ற நடிகைகள் இந்தியில் காலூன்றி வருவதைப் பார்த்து, மறுபடியும் இந்தியில் நடிக்க, நேரம் பார்த்து வருகிறார். மேலும், அசின் மாதிரி கிளாமர் விஷயத்தில் அடக்கி வாசிக்காமல், அதிரடி பிரவேசம் மேற்கொள்ளப் போவதாகவும் சொல் கிறார். ஆகிறது அரைக் காசிலும் ஆகும்; ஆகாதது ஆயிரம் பொன்னாலும் ஆகாது!

— எலீசா.

அரவான் படத்தில் பரத்!

ஏற்கனவே டைரக்டர் வசந்த பாலன் இயக்கத்தில், வெயில் படத்தில் நடித்த பரத், மீண்டும் அவர் இயக்கும் அரவான் படத்திலும் நடிக்கிறார். இப்படத்தில் ஆதி, பசுபதி இருவரும் முக்கிய வேடங்களில் நடிக்க, பரத்துக்கு சிறிய வேடம் தான். வசந்த பாலன் கேட்டுக் கொண்டதால், தன் ரோலைப் பற்றி கூட கேட்காமல், ஸ்பாட்டில் ஆஜராகியிருக்கிறார்.

— சி.பொ.,

சோலோ ஹீரோவான மாதவன்!

இந்தியில் மாதவன் நடித்த, தனு வெட்ஸ் மனு என்ற படம் வெற்றி பெற்றதால், மற்ற ஹீரோக்களுடன் இணைந்து நடிப்பதை தவிர்க்கிறார். 'இனி, சோலோ ஹீரோவாக என்னால், 'ஹிட்' கொடுக்க முடியும்...' என்று தில்லாக சொல்பவர், பிரபல ஹீரோயின்கள் கண்டிப்பாக தனக்கு ஜோடியாக வேண்டும் என்றும், டைரக்டர்களிடம் கண்டிஷனாக பேசி வருகிறார்.

— சி.பொ.,

ஏவி.எம்.,மின், 175வது படைப்பான, முதல் இடம் படத்திற்கு, கே.வி.ஆனந்தின் அசோசியேட் செல்லத்துரை ஒளிப்பதிவு செய்துள்ளார். இதுவரை படமாக்கப்பட்ட காட்சிகளை, 'ரஷ்' பார்த்த ஏவி.எம்.சரவணன், படத்தின் சிறப்பான ஒளிப்பதிவுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் முதன் முதலில் காலடி எடுத்து வைத்த வாஸ்கோட காமாவை, எப்படி கொன்றனர் என்பதுதான், உருமி படத்தின் கதை. தபு, ஜெனிலியா, அமலா பால் போன்றோர், போதும் போதும் என்ற அளவுக்கு, செக்ஸ் மூவ்மென்ட் கொடுத்து நடித்துள்ளனர்.

ஆக் ஷனுக்கு திரும்பிய மம்முட்டி!

சில காலமாக பேமிலி சென்டிமென்ட் கதைகளுக்கு முன்னுரிமை கொடுத்து வந்த மம்முட்டி, மீண்டும் ஆக் ஷனுக்கு கதைகள் பக்கம் திரும்பியுள்ளார். அந்த வகையில், ஆகஸ்ட் 15 என்ற பெயரில், அவர் நடித்த மலையாள படம், மாபெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, இப்போது, அதே பெயரில் தமிழிலும், 'டப்' ஆகிறது. இப்படத்துக்காக மாதக் கணக்கில், 'டயட்' இருந்து, உடற்கட்டையும் குறைத்திருக்கிறார்.

— சினிமா பொன்னையா.

அவ்ளோதான்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us