PUBLISHED ON : மே 15, 2011

பிரபு சாலமன் படத்தில் யானைகள்!
மைனா பட டைரக்டர் பிரபு சாலமன், அடுத்து, யானைகளை வைத்து ஒரு படம் இயக்குகிறார். காட்டு யானைகளால், பொது மக்களுக்கு ஏற்படும் உயிரிழப்பு, பொருள் இழப்புகளை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில், அப்பிரச்னைக்கு நல்ல தீர்வையும் சொல்கிறார். இப்படத்தில், ஏராளமான யானைகளும் நடிக் கின்றன.
— சினிமா பொன்னையா.
அம்மா பெயரை காப்பாற்றுவாரா கார்த்திகா?
'என் அம்மா ராதா நடித்த படங்களில், அலைகள் ஓய்வதில்லை, காதல் ஓவியம், எங்கேயோ கேட்ட குரல், முதல் மரியாதை ஆகிய படங்கள் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அந்த மாதிரி படங்கள் எனக்கு கிடைக்குமா என்று தெரியாது. அதனால், காலத்திற்கேற்ற மாதிரி நடித்து, அம்மாவின் பெயரை காப்பாற்றும் மகளாக திகழ்வேன்..' என்கிறார் கார்த்திகா. நினைத்தது இருக்க, நினையாதது எய்தும்; நினைத்தது வந்தாலும் வந்து சேரும்!
— எலீசா.
வில்லனாகும் நரேன்!
மொழி நாயகன் பிருத்விராஜை தொடர்ந்து, அஞ்சாதே பட நாயகன் நரேனும் முழுநேர மலையாள நடிகராகி விட்டார். தமிழில், கடைசியாக நடித்த, தம்பிக்கோட்டை படத்தின் தோல்விக்கு பிறகு, இந்த முடிவை எடுத்துள்ள நரேன், மலையாளத்தில் ஹீரோ மட்டுமின்றி, கேரக்டர் ரோல்களிலும் நடித்து வருகிறார். அடுத்து, தமிழில் வில்லன் வேடம் கிடைத்தாலும், நடிக்கத் தயார் என்றும் தகவல் வெளியிட்டுள்ளார்.
— சி.பொ.,
உருக்கமான நடிப்பில் நித்யா!
கவுதம் மேனன் தயாரித்துள்ள வெப்பம் படத்தில் நடித்த நித்யா மேனன், சித்தார்த் நடித்திருக்கும், 180 என்ற படத்திலும் நடித்துள்ளார். இப்படத்தில் நித்யாவின் உருக்கமான நடிப்பை கண்டு வியந்த சித்தார்த், ஒரு தெலுங்குப்பட இயக்குனரிடம் சொல்ல, 180 படத்தின் படப்பிடிப்பு நடந்த கடைசி நாளன்று, ஸ்பாட்டுக்கே வந்து தன் படத்துக்கு நித்யா மேனனை, 'புக்' செய்துள்ளார் அந்த ஆந்திர இயக்குனர். இதைத் தொடர்ந்து, சித்தார்த்துக்கு ஸ்பெஷல் விருந்து வைத்து, நன்றிக்கடன் செலுத்தியிருக்கிறார் நித்யா. காணாமல் கண்டு, காடு, மேடு எல்லாம் இழுத்தடித்த கதை!
— எலீசா.
கலகலப்பான விஜய்!
இதுவரை விஜய் என்றாலே அமைதியான நடிகர், யாரிடமும் கலகலப்பாக பேச மாட்டார் என்று, திரையுலகில் விஜய்யை பற்றி இருந்து வந்த கருத்து, நண்பன் படத்தோடு அடியோடு மாறி விட்டது. இப்படத்தில், அவருடன் இணைந்து நடிக்கும் ஸ்ரீகாந்த், ஜீவா இருவரும், விஜய், ஸ்பாட்டில் தங்களுடன் ஜாலியாக, இயல்பாக பேசிப் பழகியதை, திரையுலக நண்பர்களிடம் ஒருவர் விடாமல் கூறி வருகின்றனர். அதனால், இதுவரை விஜய்யை விட்டு விலகி நின்றவர்கள் கூட, இப்போது நெருங்கி பழகி வருகின்றனர்.
— சி.பொ.,
நமீதா இடத்துக்கு குறிவைக்கும் அக்ஷயா!
உயர்திரு 420 படத்தில், அல்ட்ரா மாடர்ன் ரோலில் நடித்திருக்கிறார் கலாபக் காதலன் அக்ஷயா. 'இனி, கதாநாயகி மட்டுமின்றி, இதுபோன்ற மாறுபட்ட வேடங்களிலும் நடிப்பேன். நமீதா போன்று, அதிரடி கவர்ச்சி காட்டி நடிக்கவும் நான் தயாராகி விட்டேன். தமிழ் சினிமா இயக்குனர்கள்தான் என்னை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்...' என்று, கோலிவுட்டுக்கு அறைகூவல் விடுக்கிறார். இட்டபடியே ஒழிய ஆசைப்பட்டு பலன் இல்லை!
— எலீசா.
* நடிகை பூர்ணாவுக்கு செல்லப் பிராணிகள் வளர்ப்பதென்றால் கொள்ளை பிரியம். தன் வீட்டில் சில லவ் பேர்ட்ஸ் ஜோடிகளை வளர்ப்பவர், அவற்றை சிறிய அளவிலான கூண்டில் அடைக்காமல், அதற்கென பெரிய அறையே கட்டியுள்ளார்.
* ஏ.ஆர்.முருகதாசின் உதவியாளரான சரவணன். இயக்கும் படம், அர்ஜுனன் காதலி. இதில், நடிகர் ஜெய், உதவி இயக்குனராக பணியாற்றுகிறார்.
இலியானா கண்டிஷன்!
ஜூனியர் என்.டி.ஆர்., நடித்த, ஓம்சக்தி படத்தில், முதலில் கதை சொன்னது போல் படமாக்காமல், இலியானாவின் ரோலை பின்னர் டம்மி ஆக்கி விட்டனராம். இதனால், தற்போது உஷாராகி விட்ட இலியானா, தான் நடிக்கும் படங்களில், கதை சொன்னது போன்று படமாக்கா விடில், அது எத்தனை பெரிய ஹீரோவின் படமாக இருந்தாலும், அதிலிருந்து பாதியிலேயே விலகிக் கொள்வது என்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டே நடிக்கிறார்.
— எலீசா.
அவ்ளோதான்!
