தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...


PUBLISHED ON : செப் 27, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 27, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ரஜினி, 'டைட்டீல்' கிடைக்குமா?

ரஜினி நடித்த, 'சூப்பர் ஹிட்' படத்தின் தலைப்பில், தான் நடிக்க வேண்டும் என்பது, விஜயின் நீண்ட நாள் ஆசையாக இருந்து வருகிறது. இந்நிலையில், அட்லி இயக்கிய, மெர்சல் படத்தில், மூன்று வேடங்களில் நடித்த விஜய், அந்த படத்திற்கு, ரஜினி நடித்த, மூன்று முகம் பெயரை வைக்க ஆசைப்பட்டார். ஆனால், அப்படத்தை தயாரித்த நிறுவனம், தலைப்பை கொடுக்க மறுத்து விட்டது.

தற்போது, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் தன், 65வது படத்தில் நடிக்க தயாராகிக் கொண்டிருக்கும், விஜய், அப்படத்திற்கு, மணிரத்னம் இயக்கத்தில், ரஜினி நடித்த, தளபதி பெயரை வைக்க விரும்புகிறார். அதனால், அது சம்பந்தமான முயற்சிகளில் இறங்கியுள்ளார், ஏ.ஆர்.முருகதாஸ். இந்த முறையாவது, விஜயின் ஆசை நிறைவேறுமா... காத்திருப்போம்.

சினிமா பொன்னையா

கொலவெறியில், சிம்ரன்!

திருமணத்திற்கு பிறகும் சினிமாவில், 'ரீ - என்ட்ரி'யை துவங்கியுள்ள சிம்ரன், தனக்கு போதுமான, 'பப்ளிசிட்டி' கொடுக்கப்படவில்லை என்று, 'பீல்' செய்து கொண்டிருந்தார். அதையடுத்து, அவருக்கு தெரிந்தவர் மூலம் பரீட்சயமான ஒரு புகைப்படக்காரரை வைத்து, விதவிதமான கோணங்களில் இடுப்பை வளைத்து, நெளித்து, 'போஸ்' கொடுத்த சிம்ரன், அதை, புத்தகங்களின் அட்டை படங்களில் வர வைக்குமாறு, அவரிடம் கூறியிருக்கிறார். அந்த நபரோ, பலான புத்தகங்களின் அட்டை படத்திற்கு, சிம்ரனின் புகைப்படங்களை, நல்ல ரேட்டுக்கு விற்று, காசு பார்த்து விட்டார். இந்த சேதியை அறிந்து கொந்தளித்த, சிம்ரன், தலைமறைவாகி விட்ட அந்த புகைப்படக்காரரை கண்டுபிடிக்க, கொலவெறியுடன் சுற்றிக்கொண்டிருக்கிறார்.

நினைத்தது ஒன்று; நடந்தது வேறு!

— எலீசா

ரசிகர்களை ரணகளமாக்கிய, ராய்லட்சுமி!

சினிமா வாய்ப்புகள் குறைந்து விட்டபோதும், அவ்வப்போது, 'பிகினி' புகைப்படங்களை, 'சோஷியல் மீடியா'வில் வெளியிட்டு, ரசிகர்களை திக்குமுக்காட வைத்து வருகிறார், ராய்லட்சுமி. தற்போது, பாய்சன் என்ற, 'வெப்சீரிஸில்' நடிக்கும், ராய்லட்சுமி, அதில், 'டாப்லெஸ்' ஆக நடித்துள்ள வீடியோ ஒன்றை, இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு, ரசிக கோடிகளை ரணகளமாக்கியுள்ளார். அழகுப் பெண்ணே காத்தாயி; உன்னை அழைக்கிறாண்டி கூத்தாடி!

- எலீசா

மலைக்க வைக்கும், சாய் பல்லவி!

ஒரே படத்தில், இரண்டு கதாநாயகியர் நடித்தாலே, கவர்ச்சியை போட்டி போட்டு, வாரி இறைப்பர். ஆனால், சாய் பல்லவியோ, தான் நடிக்கும் படங்களில், மற்ற நடிகையர் கவர்ச்சியாக நடித்தாலும், அதைக் கண்டு கலங்குவதில்லை. தன் முக பாவனை மற்றும் கண்களில் கவர்ச்சியை கொப்பளிக்க வைத்து, ரசிகர்களை கிறங்கடித்து விடுகிறார். சாய் பல்லவின், இந்த, 'டெக்னிக்'கைப் பார்த்து, 'டூ - பீஸ்' உடையணிந்து, மாஞ்சு மாஞ்சு நடிக்கும் நடிகையர், மலைத்து போய் விடுகின்றனர்.

சினிமா பொன்னையா

கறுப்புப்பூனை!

திடுதிப்பென்று கட்சி துவங்கி, அரசியலுக்கு வந்து விட்ட, உலக நடிகர், 2021 தேர்தல் முடிவுகளை எதிர்பார்க்கிறார். 'ஒருவேளை, நான் எதிர்பார்த்தபடி, என்னை, மக்கள் அங்கீகரிக்காவிட்டால், அதன்பிறகு, சினிமாவில் கூடுதல் கவனத்தை திருப்பி, பகுதிநேர அரசியல்வாதியாகி விடுவேன். அதோடு, என் படங்கள் மூலம், தொடர்ந்து நாட்டில் நடக்கும் அவலங்களை, மக்களுக்கு வெளிச்சம் போடுவதில் இன்னும் தீவிரம் காட்டவும் திட்டமிட்டுள்ளேன்...' என்கிறார், உலக நடிகர்.

'யாரால் கெட்டேன் நோரால் கெட்டேன் என, ஒரு பழமொழி சொல்வாங்களே கேட்டிருக்கியா... தேவையில்லாமல் வாயைக் கொடுத்து, பேரை கெடுத்துக்குவான்...'

'யார பத்தி சொல்ற...'

'நம்ம பிரண்ட் கமல் பத்தி தான் சொல்றேன். எல்லாவற்றிலும் தலையை நுழைத்து, 'கருத்து சொல்றேன், ஆணியை பிடுங்குறேன்'னு சொல்றது... கடைசியில், எதுவும் செய்ய முடியாமல், 'இனி, என் வேலையை மட்டும் பார்க்க போறேன்'னு பின் வாங்குறது... இதுவே பொழப்பா போச்சு...' அலுத்தபடி சென்றான், நண்பன்

சினி துளிகள்!

* கமல் நடித்து வரும், இந்தியன் - 2 படம் வெளியாகும்போது, அரசியல் ரீதியான சர்ச்சைகள் எழும் என்று கூறப்படுகிறது.

அவ்ளோதான்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us