sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 24, 2025 ,ஐப்பசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

இதப்படிங்க முதல்ல...

/

இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...


PUBLISHED ON : ஜன 17, 2021

Google News

PUBLISHED ON : ஜன 17, 2021


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மீண்டும் இளவட்டமாக மாறும் கமல்ஹாசன்!

கடந்த, 1986-ல், விக்ரம் என்ற படத்தில் நடித்த கமல், தற்போது மீண்டும், அதே, தலைப்பில், 35 ஆண்டுகளுக்கு பின், நடிக்கப் போகிறார். அது மட்டுமின்றி, 23 ஆண்டுகளுக்கு முன், காதலா காதலா என்ற படத்தில் நடித்த, பிரபுதேவாவையும் மீண்டும் தன்னுடன் இணைத்துள்ள கமல், 'அந்த படத்தைப் போலவே, ஒரு பாடலில், மீண்டும், பிரபுதேவாவுக்கு இணையாக நடனமாடி அசத்தப் போகிறேன்...' என்கிறார்.

— சினிமா பொன்னையா

தீயாய் பரவும், 'லிப்லாக் சீன்!'

சினிமாவில் கோடு போட்டு நடித்து வந்த, நித்யாமேனன், 'வெப்சீரிஸில்' ஆண் நண்பர்களுடன் காருக்குள், 'லிப்லாக்' செய்யும் காட்சியில் நடித்து, காட்டுத்தீயை பற்ற வைத்துள்ளார். அதோடு நில்லாமல், குளியல் அறை காட்சியிலும், 'குளுகுளு' கவர்ச்சியை வெளிப்படுத்தி நடித்திருக்கிறார். 'ஏன் இந்த திடீர் களேபரம்...' என்று, ரசிகர்கள் கேட்டதற்கு, 'வெப்சீரிஸிற்கு சென்சார் என்ற, 'செக்போஸ்ட்' இல்லையே. அதனால் தான், இத்தனை நாளும் கட்டுக்குள் வைத்திருந்த கவர்ச்சியை கட்டவிழ்த்து விட்டேன்...' என்று உற்சாகம் பொங்க, பொங்கியிருக்கிறார். அவிழ்த்து விட்டதாம் கழுதை; எடுத்து விட்டதாம் ஓட்டம்!

எலீசா

அடுத்த ரம்பாவாகும், ராசிகண்ணா!

கோலிவுட்டில் கோலோச்சி வரும் நடிகையரில் பெரும்பாலான நடிகையர், மார்தட்டியும், இடையழகை காண்பித்தும், தங்களது கவர்ச்சியை, 'எக்ஸ்போஸ்' செய்கின்றனர். இந்நிலையில், அவர்களிடமிருந்து தான் மாறுபட்டு நிற்க வேண்டும் என்று, மூளையை கசக்கி வந்தார், ராசிகண்ணா. சில மாதங்களாக, 'ஜிம்'மில் பிரத்யேக பயிற்சி எடுத்து, தன் தொடைகளை உருண்டு, திரண்டு பளபளப்பாக்கி, முன்னாள் தொடையழகி ரம்பா பாணிக்கு மாற்றியுள்ளார். இதைடுத்து, 'புதிய படங்களில் தொடையழகை, 'எக்ஸ்போஸ்' செய்யும், குட்டை பாவாடை உடைகளை அணிந்து நடித்து, ரம்பா விட்டுச்சென்ற இடத்தை நிரப்பப் போகிறேன்...' என்கிறார். அடுத்தடுத்து முயன்றால், தொடுத்தக் காரியம் முடியும்!

எலீசா

சூரிக்கு, இயக்குனர் போட்ட தடை!

காமெடியனாக நடித்து வந்த, புரோட்டா சூரி, தற்போது, வெற்றிமாறன் இயக்கி வரும் புதிய படத்தில், 'ஹீரோ'வாக பரிணாம வளர்ச்சி பெற்றிருக்கிறார். அதோடு, 'ஹீரோ' சூரியை, புதிய வடிவத்திற்கு மாற்றியுள்ள, வெற்றி மாறன், 'இந்த படத்தில் நடிக்கும், 'கெட் - அப்' வெளியில் தெரியக்கூடாது. படம், தியேட்டருக்கு வரும் வரை ரகசியம் காக்க வேண்டும்...' என்று, கட்டளை பிறப்பித்துள்ளார். அதனால், படப்பிடிப்பு இல்லாத நாட்களில், வீட்டை விட்டு வெளியே வராமல், மீண்டும் ஊரடங்கை கடைப்பிடித்து வருகிறார், சூரி.

— சினிமா பொன்னையா

கறுப்புப்பூனை!

ஜெயமான நடிகரின் இரண்டெழுத்து படம் மூலம் கோலிவுட்டில், 'என்ட்ரி' கொடுத்துள்ள அந்த ஆந்திர ஆவக்காய், வந்த வேகத்தில் செம சூடு காட்டி வருகிறார். குறிப்பாக, மற்ற நடிகையரெல்லாம் மேலாடை அணிந்து கவர்ச்சி காட்ட, இவரோ, உள்ளாடை அணிந்த நிலையிலேயே, 'போஸ்' கொடுத்து, புதிய புரட்சி செய்து வருகிறார். இதனால், ஒட்டுமொத்த கோலிவுட்டின் இளைஞர் சமுதாயமும், அம்மணியின் தரிசனத்திற்காக ஏங்கி நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

முதல் படம் திரைக்கு வருவதற்கு முன்பே, மூன்று படங்களை கைப்பற்றியுள்ள அம்மணி, மின்னல் வேகத்தில், 'கல்லா' கட்டி வருகிறார். 'ஆந்திர ஆவக்காய் நடிகையின் இந்த கவர்ச்சி அட்டகாசத்தால், நம்முடைய அனைத்து முயற்சிகளும் தவிடு பொடியாகி விடுமோ...' என்று, தல - -தளபதி நடிகர்களுடன் நடித்து வரும், சில அண்டை மாநில நடிகையர் மிரண்டு நிற்கின்றனர்.

'கேட்டியாடி இந்த அநியாயத்தை... ஊரு விட்டு ஊர் வந்த, நிதி பொண்ணு, நமக்கு போட்டியால்ல நிக்குது...'

'யார் அது? நிதி - நீதின்னு பேர் வைச்சுட்டு...'

'வெளியூரிலிருந்து இங்கு வந்து, 'செட்டில்' ஆயிருக்கு. நாம, சின்ன அளவுல பிறந்த நாள் விழா, நிச்சயதார்த்தம், புதுமனை புகுவிழான்னு, மண்டப அலங்காரம் முதல் சமையல், சீர் வரை, 'கான்ட்ராக்ட்' எடுத்து செஞ்சுட்டு வர்றோம். இந்த பொண்ணு, வந்ததும், வராததுமா பந்தாடிட்டு இருக்கா.

'தன் ஊரிலிருந்து, புதுசு புதுசா அலங்காரப் பொருட்கள் எடுத்து வந்து, அலங்கரிப்பதென்ன... தன் ஊர் சமையல்காரர்களை வரவழைத்து, விதவிதமா சமையல் ஐட்டங்களை அறிமுகம் செஞ்சு, அசத்தறாளாம்.

'முகநுால், 'டுவிட்டர், யு - டியூப்' சேனல் என்று, நவீன தொழில்நுட்பம் மூலமாக, தன் தொழிலை விரிவுபடுத்திட்டு இருக்கா... இப்படியே போனா, நாம, நம்ம கம்பெனிய இழுத்து மூட வேண்டியது தான்...' என்று அங்கலாய்த்தனர், தோழியர் இருவர்.

சினி துளிகள்!

* ஜெயம்ரவியுடன், பூமி என்ற படத்தில் நடித்துள்ள, தெலுங்கு நடிகை நிதி அகர்வால், அடுத்தபடியாக சிம்பு, உதயநிதி படங்களில் நடித்து வருகிறார்.

அவ்ளோதான்!






      Dinamalar
      Follow us