PUBLISHED ON : ஜூன் 05, 2011

சாய்பாபா வாழ்க்கை சினிமாவாகிறது!
மறைந்த புட்டபர்த்தி சாய்பாபா பற்றி ஒரு படம் உருவாகிறது. தெலுங்கில் தயாராகும் இப்படத்தில், நாகார்ஜுனா நடிக்கிறார். பாபாவின் இளமைக்காலம் தொட்டு அவரது ஆன்மிக பயணம், சமூக தொண்டு குறித்த முக்கிய பகுதிகள் இப்படத்தில் இடம்பெறும்.
— சினிமா பொன்னையா.
தனுஷின் நிஜ கேரக்டர்!
படத்துக்குப் படம் அப்பா - அம்மாவுக்கு அடங்காத பிள்ளையாக நடித்து வந்த தனுஷûக்கு, வேங்கை படத்தில் பெற்றோரை மதிக்கும் நல்ல பிள்ளை வேடம் கிடைத்துள்ளது. 'சினிமாவைப் பொறுத்தவரை, இந்த வேடம் எனக்கு புது அனுபவம். என்றாலும், என் நிஜ கேரக்டரும் இதுதான்...' என்கிறார்.
— சி.பொ.,
தாய்குலம் முயற்சி பலிக்குமா?
கோ படம், அக்ஷய் குமார் நடிப்பில் இந்தியில், ரீ-மேக் ஆகிறது. இப்படத்திலும், தன் மகள் நடித்தால், இந்தியிலும் பிரபலமாகி விடுவாள் என்று நினைக்கும் மாஜி ஹீரோயின் ராதா, மகள் கார்த்திகாவின் ஆல்பங்களை இந்தி பீல்டில் சுற்றலில் விட்டிருப் பதோடு, அப்படத்தில் நடிக்கும் அக்ஷய் குமாரையும் சந்தித்து, மகளின் அருமை, பெருமைகளை கூறி, சிபாரிசு கோரியிருக்கிறார். அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்.
— எலீசா.
'கிங் 2' படத்தில் ரீமா சென்!
தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழி சினிமாக்களும், ரீமாசென்னை கைவிட்ட போதும், மலையாள சினிமா கை கொடுத்துள்ளது. மம்முட்டி - சுரேஷ் கோபி இணைந்து நடிக்கும், கிங் 2 என்ற படத்திலும் ரீமாதான் நாயகி. 'யதார்த்தமான சினிமாவை நேசிக்கும் எனக்கு இந்த வாய்ப்பு கிடைத் தது ரொம்ப சந்தோஷமாக உள்ளது...' என்று மலையாள படங்களையும், அங்குள்ள சினிமாக்காரர்களையும் ஓவராக புகழ்ந்து தள்ளுகிறார். ஆல் பழுத்தால் அங்கே கிளி, அரசு பழுத்தால் இங்கே கிளி!
— எலீசா.
சீயான் விக்ரமின் பசுமைப் புரட்சி!
தன் விக்ரம் பவுண்டேஷன் மூலம், நிறைய சமூக சேவைகள் செய்து வரும் நடிகர் விக்ரம், தற்போது, பசுமைப் புரட்சி என்றொரு திட்டத்தை அறிவித் துள்ளார். இதன் முதல்கட்ட பணியாக, சென்னையில் மரம் நடும் பணியை துவங்கி, அதை, தன் ரசிகர் மன்றம் மூலம் பராமரித்து வருகிறார். எதிர்கால சந்ததியை பாதுகாப் பதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த முயற்சி, படிப்படியாக விரிவுபடுத்தப்படும் என்றும் சொல்கிறார்.
— சி.பொ.,
பத்திரிகையாளர் வேடத்தில் பூனம் பாஜ்வா!
கோ படத்தில் கார்த்திகா நடித்தது போன்று, எதிரி எண் 3 படத்தில், பூனம் பாஜ்வாவும் நிருபர் வேடத்தில் நடிக்கிறார். இதற்காக, மும்பையைச் சேர்ந்த ஒரு பெண் நிருபரிடம், முறையான பயிற்சி எடுத்துள்ள பூனம் பாஜ்வா, இப்படத்தில் சிக்கலில் சிக்கும் ஸ்ரீகாந்தை காப்பாற்றும் அதிரடி ஜர்னலிஸ்டாக நடித்துள்ள அவர், வழக்கமான கவர்ச்சி ஆட்டமும் ஆடி யுள்ளார். ஆள் ஜம்பமே தவிர வேலை ஜம்பம் கிடையாது!
— எலீசா.
போட்டா போட்டி!
நடிகர்கள் ராஜேஷ், ஷாம் ஆகியோரை தொடர்ந்து, தற்போது நமீதா, நடிகர் ஆர்.கே., ஆகியோரும் ரியல் எஸ்டேட் வியாபாரத்தில் மும்முரமடைந்துள்ளனர். இருவருமே, சென்னையை அடுத்த திண்டிவனம், காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில், போட்டி போட்டு நிலங்களை வாங்கி வருகின்றனர். இதனால், மேற்படி நபர்கள் எந்த படப்பிடிப்பு தளத்தில் இருந் தாலும், அவர்களை சுற்றி நிலத்தரகர்கள் கூட்டம், வட்டம் போடுகிறது. ஆசை பெருக, அலைச்சலும் பெருகும்!
— எலீசா.
போலீஸ் வேடத்தில் சிம்பு!
இந்தியில் சல்மான்கான் நடித்த, தபாங் படத்தை தமிழில், ஒஸ்தி என்ற பெயரில், ரீ-மேக் செய்கிறார் தரணி. இதில், நாயகனாக நடிக்கும் சிம்பு, முதன் முறையாக போலீஸ் வேடத்தில் நடிக்கிறார். இதற்காக, தன் ஹேர் ஸ்டைல், பாடி லாங்வேஜ் என்று அனைத்தையும் கச்சிதமாக மாற்றுகிறார். மேலும், இப்படத்தின் மூலம், தான் தென்னகத்து சல்மான்கான் என்று பெயரெடுக்கவும் விரும்புவதாக சொல்கிறார்.
— சினிமா பொன்னையா.
அவ்ளோதான்!
