தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...


PUBLISHED ON : ஜூலை 25, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 25, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

குற்றப்பரம்பரையை துாசி தட்டும், பாரதிராஜா!

கதாசிரியர், ரத்னகுமார் எழுதிய, குற்றப்பரம்பரை என்ற கதையை, படமாக்க வேண்டும் என்பது, பாரதிராஜாவின், 20 ஆண்டு கனவு. அந்த கதையை படமாக்க, சிவாஜிகணேசன், விஜயகாந்த் என, பல நடிகர்களை அணுகினார். ஆனபோதும், அந்த படம் துவங்கப்படவே இல்லை. அதையடுத்து, குற்றப்பரம்பரை கதை சம்பந்தமாக, இயக்குனர் பாலாவுடன் ஏற்பட்ட சலசலப்பால், அதை அப்படியே கிடப்பில் போட்டிருந்த, பாரதிராஜா, மீண்டும் அந்த கதையை துாசி தட்டி, அதில் நடிப்பதற்கு, விஜய் சேதுபதியை அணுகியிருக்கிறார். இந்த முறையாவது, குற்றப்பரம்பரையை படமாக்கி, தன், 20 ஆண்டு கனவை நனவாக்கிக் கொள்வாரா பாரதிராஜா... பொறுத்திருந்து பார்ப்போம்.

— சினிமா பொன்னையா

நிவேதா தாமஸ், பிடிவாதம்!

டோலிவுட்டில் கதாநாயகியாக கொடியேற்றி வரும், நிவேதா தாமஸை, மற்ற ஆந்திர ஆவாக்காய்களைப் போன்று, கவர்ச்சி குதிரையாக்க முயற்சி எடுத்த இயக்குனர்கள், தோல்வியடைந்தனர். காரணம், தன்னுடன் நடிக்கும் மற்ற, 'ஹீரோயின்'கள் மார்தட்டி நிற்கும்போது, நிவேதாவோ, கணுக்கால் கவர்ச்சிக்கு கூட, 'செக்போஸ்ட்' வைத்து விடுகிறார். மாறாக, 'உடல் கவர்ச்சியை காண்பிக்காமல், கண்களால், உதடுகளால், வசீகர கவர்ச்சியை வெளிப்படுத்தி, ரசிகர்களை கவருவதே என் பாணி...' என்று, கவர்ச்சிக்கு அணை போட்டு விடுகிறார். நிவேதா தாமஸின் இந்த பிடிவாதம் காரணமாக, சில கமர்ஷியல் இயக்குனர்கள், 'உங்களது கண்ணும் வேண்டாம், உதடும் வேண்டாம்...' என்று, அவருக்கு, 'குட் பை' சொல்லி, ஓட்டம் பிடிக்கின்றனர். ஆகாத பஞ்சாங்கத்துக்கு, அறுபது நாழிகையும் தியாஜ்யம்!

\— எலீசா

'பிகினி' வேடம் கேட்கும், ஸ்ரேயா!

'பிகினி' உடையணிந்த தன்னை, கணவர், அலேக்காக துாக்கி, 'போஸ்' கொடுக்கும், 'ரொமான்டிக்' புகைப்படங்களை, 'சோஷியல் மீடியா'வில் தட்டிவிடும், ஸ்ரேயா, அதையெல்லாம் மிஞ்சும் அளவுக்கு, சினிமாவில் நடிக்க இப்போதும் தான் தயாராக இருப்பதாக இயக்குனர்களுக்கு செய்தி அனுப்புகிறார். அதைக்கேட்டு, 'திருமணமான நடிகையை, 'டீன் - ஏஜ்' நடிகை போன்று தோலுரித்தால், விமர்சனங்கள் வருமே...' என்றதற்கு, 'நான், அப்படி நடிப்பதை பார்த்து ரசிக்க, என் கணவரே, ஒரு ரசிகராக காத்துக் கொண்டிருக்கும்போது, விமர்சனங்களைப் பற்றி ஏன் கவலைப்படுகிறீர்கள்... மீண்டும், 'பிகினி' நடிகையாக என்னை திரையில் கொண்டு வாருங்கள்...' என்று, இயக்குனர்களை நச்சரித்து வருகிறார். ஊருக்கு எல்லாம் ஒரு வழி; உனக்கு ஒரு வழியா?

எலீசா

தனுஷின், தெலுங்கு மோகம்!

சமீபகாலமாக, தனுஷ் நடிக்கும் படங்கள், 100 கோடி வசூலை ஈட்டி தந்தபோதும், கோலிவுட்டில், அவருக்கான சம்பளம் எகிறுவதில்லை. அதேசமயம், அவரை தெலுங்கு படங்களுக்கு ஒப்பந்தம் செய்துள்ள தயாரிப்பாளர்கள், தமிழில் அவர் வாங்கும் சம்பளத்தை அப்படியே இரட்டிப்பாக்கி தருவதாக கூறி, தெலுங்கு சினிமா மீது ஆர்வத்தை அதிகப்படுத்தி வருகின்றனர். இதனால், கைவசம் உள்ள தமிழ் படங்களை வேகவேகமாக முடித்துக் கொடுத்து, டோலிவுட் சினிமா கதவை திறக்க தயாராகிக் கொண்டிருக்கிறார்.

— சினிமா பொன்னையா

கறுப்புப்பூனை!

பண்ணைப்புர இசையமைப்பாளரின் இளைய வாரிசு, மதம் மாறி திருமணம் செய்து கொண்டதை அடுத்து, அந்த மதம் குறித்த தகவல்களை, 'சோஷியல் மீடியா'வில் வெளியிட்டு வந்தார். இதற்கு, அவரது ரசிகர்கள் மத்தியில் இருந்து, கடுமையான எதிர்ப்பு எழுந்து, 'சோஷியல் மீடியா'வில், 'பாலோ' செய்து வந்த, மற்ற மதங்களைச் சேர்ந்தவர்கள், அவரை பின்தொடர்வதை குறைத்து விட்டனர். அதிர்ந்துபோன இசை வாரிசு, இசையின் மூலம் அனைத்து மக்களுக்கும் பொதுவானவர் என்ற அடிப்படையில், மத பிரசாரம் செய்வது தவறு என்பதை உணர்ந்தார். தற்போது, 'சோஷியல் மீடியா'வில், மதம் சம்பந்தப்பட்ட கருத்துக்களை வெளியிடுவதை நிறுத்தி விட்டார்.

'யுவன் தம்பி, இங்க வா... நுாலகத்துக்கு வந்தமா, புத்தகம் எடுத்தமா படித்தமான்னு இருக்கணும். அதை விட்டு, நுாலகமே உன் பரம்பரை சொத்து மாதிரி நினைச்சுட்டு, இங்குள்ள புத்தகங்களில், உன் சொந்த கருத்துகள, பக்கத்துக்கு பக்கம் கிறுக்கி வைத்திருக்கிறியே... இது கொஞ்சம் கூட நல்லால்ல... இப்படியே செஞ்சுட்டு இருந்தா, உன் உறுப்பினர் அட்டையை பறிமுதல் செய்து, நுாலகத்து பக்கமே தலை வைத்து படுக்க முடியாம செஞ்சுருவேன்... ஜாக்கிரதை. இனியாவது, அனைவருக்கும் பொதுவான புத்தகங்களில் கண்டபடி கிறுக்குவதை விட்டுடு...' என்று காட்டமாக பேசினார், நுாலகர்.

சினி துளிகள்!

* சமீபகாலமாக, இசை ஆல்பங்கள் தயார் செய்து, அதில் தானும் நடிக்கத் துவங்கி இருக்கிறார், யுவன் சங்கர் ராஜா.

அவ்ளோதான்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us