தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...


PUBLISHED ON : ஜூலை 10, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 10, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மிஷ்கின் படத்தில் ஜீவா!

யுத்தம் செய் மிஷ்கின், அடுத்து, தன் கனவு படைப்பான, முகமூடி படத்தை இயக்குகிறார். ஆனால், இந்த கதையில் நடிக்க சூர்யா, விஷால், சிம்பு, ஆர்யா உள்பட பலரும் மறுத்து விட்டனர்; கடைசியாக இப்படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார் ஜீவா. அதோடு, 'பலரும் நடிக்க மறுத்த, கோ படம்தான் எனக்கு திருப்புமுனையாக அமைந்தது; அதேபோல், பல நடிகர்களும் மறுத்த இந்த, முகமூடி படம், எனக்கு இன்னும் பெரிய வெற்றியை தரும்...' என்கிறார்.

— சினிமா பொன்னையா.

மலையாளத்தில் சமீரா ரெட்டி!

தமிழில் பல படங்களில் நடித்து விட்ட போதும், நிலையான இடம் கிடைக்காததால், மலையாளத்துக்கு தாவி விட்டார் சமீரா ரெட்டி. அங்கு, மோகன் லாலுக்கு ஜோடியாக நடித்த, ஒரு நாள் வரும் என்ற படம், தற்போது தமிழுக்கு, 'டப்' ஆக உள்ளது. நேரடி தமிழ் படம் எனக்கு பெற்றுத் தராத பெயரை இந்த, 'டப்பிங்' படம் பெற்றுத் தரும் என்றும் சொல்கிறார். நினைப்புதான் குடியைக் கெடுத்ததாம்!

— எலீசா.

அழகு ரகசியம்!

அனுஷ்காவிடம், 'உங்கள் அழகின் ரகசியம் என்ன?' என்று கேட்டால், 'என், 12வது வயதில் இருந்து தினமும், ஒரு மணி நேரம் யோகா செய்கிறேன். சூரிய நமஸ்காரம், ஆசனம் மட்டும், 108 தடவை செய்து வருகிறேன். இதனால், என்னுடைய உடலும், மனதும் ஆரோக்கியமாக உள்ளது; இதுவே, என் அழகு ரகசியம்...' என்கிறார். அதைத்தான் சொல்வானேன்; வாய்தான் நோவானேன்!

— எலீசா.

தெரு நாய்களிடம் கருணை காட்டும் த்ரிஷா!

பெரும்பாலான நடிகைகள், விலை உயர்ந்த அயல் நாட்டு நாய்களை வளர்க்கத் தான் ஆசைப்படுவர்; ஆனால், த்ரிஷா, தெருக்களில் சுற்றித் திரியும் நாய்களை கொண்டு சென்று வளர்க்கிறார். இப்படி, தெரு நாய்கள் மீது பாசம் காட்டி, அவற்றை த்ரிஷா தத்தெடுப்பதால், பிராணிகள் நல வாரியத்தினர் அவரை தூதுவராக்கி உள்ளனர். இந் நிலையில், தெரு நாய்களை யாரும் துன்புறுத்தக் கூடாது, கல்லால் அடிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தும் ஒரு விளம்பர படத்தில் த்ரிஷாவை நடிக்க வைத்துள்ளது பிராணிகள் நல வாரியம். அதிசயம் அடி அம்மங்காரே, கொதிக்கற கொழம்பு சிரிக்கிறது!

— எலீசா.

கே.வி.ஆனந்த் கண்டிஷன்!

கோ படத்திற்குப் பிறகு, மாற்றான் பட வேலைகளில் தீவிரமடைந்துள்ளார் கே.வி.ஆனந்த். தற்போது, நைஜீரியாவில், ஹாரிஸ் ஜெயராஜுடன் பாடல் கம்போசிங் கில் ஈடுபட்டுள்ள ஆனந்த், அடுத்த மாதம் முதல் தொடர்ந்து, எட்டு மாதங்கள் வரை, மாற்றான் படப்பிடிப்பை நடத்துகிறார். இதற்காக படத்தில் ஜோடி சேரும் ஹீரோ - ஹீரோயின் இருவரையும், மொத்த கால்ஷீட்டாக, எட்டு மாதங்கள் தந்தே ஆக வேண்டும் என்று, கண்டிஷன் போட்டுள்ளார்.

— சி.பொ.,

கரீனா கபூருக்கு மெழுகுச் சிலை!

பாலிவுட்டைச் சேர்ந்த அமிதாப்பச்சன், ஷாரூக்கான், அமீர்கான், ஹிருத்திக் ரோஷன், ஐஸ்வர்யா ராய் உள்பட பலருக்கு லண்டனில் உள்ள, 'மேடம் டுசாட்ஸ்' மியூசியத்தில் மெழுகுச் சிலை உள்ளது. அவர்கள் வரிசையில் தற்போது, கரீனா கபூருக்கும் சிலை வைக்கப்பட்டுள்ளது. இதனால், தனக்கும் உலக அளவில் சிறந்த நடிகைக்கான அங்கீகாரம் கிடைத் திருப்பதாக பெருமையாக சொல்கிறார். படைக்காமல் படைத்தானாம்; காடு மேடு எல்லாம் இழுத்து அடித்தானாம்!

— எலீசா.

தமிழில் பவன் கல்யாண்!

தமிழில் இருந்து சில ஹீரோக்கள், தெலுங்குக்கு செல்வது போல், சில தெலுங்கு ஹீரோக்களும், தமிழுக்கு வர விரும்பு கின்றனர். அவர்களில், ஜூனியர் என்.டி.ஆர்., பவன் கல்யாண், ராம்சரண் தேஜா ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். இதில், பவன் கல்யாண், ஏகன் படத்துக்குப் பிறகு, ராஜு சுந்தரம் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இப்படம் தமிழ், தெலுங்கு என, இரு மொழிகளில் உருவாகிறது.

— சினிமா பொன்னையா.

அவ்ளோதான்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us