தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இதப்படிங்க முதல்ல....

இதப்படிங்க முதல்ல....

இதப்படிங்க முதல்ல....


PUBLISHED ON : ஜூலை 17, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 17, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தீபிகா படுகோனேவுக்கு கமல் அழைப்பு!

தான் இயக்கி நடிக்கும், விஸ்வரூபம் படத்திற்கு, சோனாக்ஷி சின்ஹா, ஸ்ரேயாவை நாயகிகளாக ஒப்பந்தம் செய்த கமல், ஸ்ரேயாவுக்கு, கதக் நடனம் தெரியவில்லை என்று படத்திலிருந்து நீக்கினார். ஆனால், இப்போது, 'படப்பிடிப்பு தள்ளிக் கொண்டே போவதால், இனியும் காத்திருக்க முடியாது...' என்று, விஸ்வரூபம் படத்திலிருந்தே விலகிக் கொண்டுள்ளார் சோனாக்ஷி. இதனால், அவருக்கு பதிலாக, தீபிகா படுகோனேவுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

— சினிமா பொன்னையா.

ராசு.மதுரவன் இயக்கும் காதல் படம்!

மாயாண்டி குடும்பத்தார், முத்துக்கு முத்தாக படங்களை இயக்கிய ராசு.மதுரவன் அடுத்து, பார்த்தோம் - பழகினோம் என்றொரு படத்தை இயக்குகிறார். இதற்குமுன், குடும்ப சென்டிமென்ட் விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, படம் இயக்கிய ராசு.மதுரவன், அதிலிருந்து மாறுபட்டு, காதல் கதைக்கு, முக்கியத்துவம் கொடுத்து இப்படத்தை இயக்குகிறார். அதுவும், இதுவரை யாரும் சொல்லாத புதுமையான காதல் கதை என்கிறார்.

— சி.பொ.,

குறளரசனை அறிமுகம் செய்கிறார் டி.ஆர்.,

தன் வாரிசுகள் சிம்பு, குறளரசன், இலக்கியா ஆகிய மூன்று பேரையும், தன் படங்களில் குழந்தை நட்சத்திரங்களாக நடிக்க வைத்தவர் டி.ராஜேந்தர். இந்நிலை யில், காதல் அழிவதில்லை படத்தில், மூத்த மகன் சிம்புவை நாயகனாக அறிமுகம் செய்த டி.ஆர்., இளைய மகன் குறளரசனையும் விரைவில் தான் இயக்கும் படம் மூலமே நாயகனாக அறிமுகம் செய்கிறார். தற்போது, ஒரு தலை காதல் என்ற படத்தை இயக்கி, நடித்து வரும் டி.ஆர்., இப்படத்தின் வேலைகள் முடிந்ததும், குறளரசன் நடிக்கும் பட வேலைகளை துவங்குகிறார்.

— சி.பொ.,

* ஷங்கர் தயாரிப்பில் உருவாகும் நண்பன் படப் பாடல் ஒன்றை, 15 மொழிகள் கலந்து வரும்படி எழுதி உள்ளார் மதன் கார்க்கி.

* நீது சந்திரா புல்லாங்குழல் இசைப்பதில் வல்லவர். கோபம் வரும் போது, புல்லாங்குழல் இசைத்து, கோபத்தை குறைத்துக் கொள்கிறார்.

சேரிப் பெண்ணாக ஸ்ரேயா!

தீபா மேத்தா இயக்கும், மிட் நைட் சில்ரன்ஸ் படத்தில் சேரிப் பெண்ணாக நடிக்கிறார் ஸ்ரேயா. 'இப்படத்துக்காக என் மேனரிசம், பர்பாமென்ஸ், ஸ்டைல் அனைத்தையும் மாற்றியுள்ளேன். இதில் என் நடிப்பைப் பார்த்து, இந்தியத் திரையுலகமே ஆச்சரியப்படப் போகிறது...' என்கிறார். நினைத்தது இருக்க, நினையாதது எய்தும்; நினைத்தது வந்தாலும் வந்து சேரும்!

— எலீசா.

சமூக ஆர்வம் கொண்ட ப்ரியா ஆனந்த்!

180 பட நாயகியான ப்ரியா ஆனந்த், குழந்தை தொழிலாளர் நிலையைக் கண்டு கொதித்தெழுகிறார். சிறுவர்களை கொத்தடிமைகளாக ஆக்குவதால்தான், எதிர்காலத் தில் அவர்கள் சமூக விரோதிகளாக மாறுகின்றனர். அதனால், இந்த நிலை மாற வேணடும் என்று குரல் கொடுக்கும் ப்ரியா ஆனந்த், தென்னிந்தியாவில் உள்ள சில சமூக நல நிறுவனங் களுடன் இணைந்து, சமுதாய நலனில் தன் பங்களிப்பை யும் செலுத்தி வருகிறார்.

— எலீசா.

பார்த்திபன் செய்த புதுமை!

வித்தகன் படத்தில் ஏதாவது வித்தியாசம் காட்ட வேண்டும் என்று பலமாக யோசித்து வந்த பார்த்திபன், கடைசி கட்ட படப்பிடிப்பை வியன்னாவில் நடத்தி வந்துள்ளார். 'அங்கு, அப்படியென்ன புதுமை உள்ளது?' என்று கேட்டால், 'வியன்னா குடியரசு நாடுகளில், எந்த சினிமாக்காரர்களின் கால்களும் இதுவரை பதிந்ததில்லை. அந்த வகையில், வித்தகன் படப்பிடிப்பு தான் முதன் முதலாக அங்கு நடைபெற்றுள்ளது...' என்று சொல்லும் பார்த்திபன், படத்தை ஆகஸ்ட் மாதம் ரிலீஸ் செய்யப் போவதாகவும் கூறுகிறார்.

— சி.பொ.,

தாய்மொழியை தவிர்க்கும் அமலா பால்!

ப்ருத்விராஜுக்கு ஜோடியாக ஒரு மலையாள படத்தில், அமலா பால் நடிப்பதாக பரவிய செய்தியை மறுக்கிறார் அவர். 'மலையாளம் என் தாய்மொழிதான்; இருப்பினும், இப்போதைக்கு தமிழ், தெலுங்கு தான் என் இலக்கு. இந்த மொழிகளில் முழு கவனம் செலுத்தி, புகழ் பெறுவதே என் நோக்கம்...' என்று சொல்லும் அமலா பால், தமிழ், தெலுங்கில் மார்க்கெட் டவுண் ஆகும் போதுதான், மலையாளத்துக்கு செல்லும் முடிவில் இருப்பதாகவும் கூறுகிறார். உழைப்புக்கு ஊர்க்குருவி; இழைப்புக்கு வான் குருவி!

— எலீசா.

இந்தியை தவிர்த்த காஜல் அகர்வால்!

தமன்னாவின் அதிரடிப் பிரவேசத்தால், காஜல் அகர்வாலின் தெலுங்கு மார்க்கெட் ஆட்டம் கண்டு போனது. இதனால், இந்திக்கு செல்ல திட்டமிட்ட காஜல், அந்த நேரம் பார்த்து, தமிழில், மாற்றான் பட வாய்ப்பு கிடைத்ததால், இந்திப்பட வாய்ப்பை தவிர்த்து, கோலிவுட் கோதாவில் இறங்கி விட்டார். தன் வழக்கமான கண்டிஷன்கள் அனைத்தையும் தவிர்த்து, அதிரடி கவர்ச்சி நடிகையாகவும் பிரவேசித்துள்ளார்.

— சினிமா பொன்னையா.

அவ்வளவுதான்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us