தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...


PUBLISHED ON : மார் 05, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 05, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மன்சூர் அலிகானுக்கு அடித்த யோகம்!

விஜய் நடித்த, முதல் படமான, நாளைய தீர்ப்பு படத்தில், நான்கு வில்லன்களில் ஒருவராக நடித்தவர், மன்சூரலிகான். அதன்பின், வில்லனாக, ஹீரோவாக, குணச்சித்திர நடிகராக பலதரப்பட்ட வேடங்களில் நடித்து வருபவர், நீண்ட இடைவெளிக்கு பின், தற்போது, விஜய் நடிக்கும் படத்தில் இணைந்திருக்கிறார்.

அதனால், அவரது மார்க்கெட் மீண்டும் சூடு பிடித்துள்ளது; 16 ஆண்டுகளுக்குப் பின், சரக்கு -என்ற படத்தில், மீண்டும், 'ஹீரோ'வாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இதையடுத்து இன்னும் சில படங்களில் நடிப்பது சம்பந்தமாக, பேசி வருகிறார்.

— சினிமா பொன்னையா

நயன்தாராவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த, மாதவன்!

நயன்தாரா திருமணம் செய்த பின், எந்த, 'மெகா ஹீரோ'களின் பட வாய்ப்புகளும் அவருக்கு கிடைக்கவில்லை. அதற்கு முன், ஒப்பந்தமான ஷாருக்கானின், ஜவான், ஜெயம் ரவியின், இறைவன் போன்ற படங்களில் தான் தற்போது நடித்து வருகிறார்.

இந்நேரத்தில், மாதவன் நடிக்க இருக்கும் ஒரு புதிய படத்தில் ஜோடியாக நடிக்க, நயன்தாராவுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இதனால், இன்ப அதிர்ச்சி அடைந்திருக்கும் நயன்தாரா, 'ஹிந்தி சினிமாவை போன்று, திருமணத்துக்கு பின், நடிகையரை, 'ஹீரோயின்' ஆக, 'புக்' பண்ணும் கலாசாரம், தமிழ் சினிமாவிலும் தொடர வேண்டும். அப்போது தான், திறமைக்கு வாய்ப்பு கிடைக்கக் கூடிய ஒரு ஆரோக்கியமான சூழல் கோலிவுட்டிலும் ஏற்படும்...' என்று, கருத்து வெளியிட்டுள்ளார்.

சி.பொ.,

'க்யூட்'டாக மாறிய, ஜோதிகா!

தற்போது, 44 வயதாகும், ஜோதிகா, மலையாளம், ஹிந்தியில் தலா ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்நேரத்தில், திடீரென்று, 'ஹேர் ஸ்டைலை' மாற்றி, 'செம க்யூட்' ஆக காட்சி கொடுக்கிறார்.

இதுகுறித்து, ஜோதிகாவிடம் கேட்டபோது, 'இதுவரை என்னை சின்ன பெண் என்று தான், மனதளவில் நினைத்துக் கொள்வேன். ஆனால், என் மகள் தியாவுக்கு, 15 வயதாகி, என் உயரத்துக்கு வளர்ந்து விட்டாள். இப்போது தான் எனக்கும் வயதாகி கொண்டிருக்கிறது என்பதை உணரத் துவங்கினேன்.

'அதனால், இனிமேல் நான், அழகு விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். மகளுடன், நான் இணைந்து செல்லும்போது, அவளுக்கு அக்காள் போலவே இருப்பதாக, மற்றவர்கள் என்னை பார்த்து சொல்ல வேண்டும். அதற்காகவே, இதுவரை இல்லாத அளவுக்கு என் அழகை பராமரிப்பதில் கூடுதல் கவனம் செலுத்த துவங்கி இருக்கிறேன்...' என்கிறார், ஜோதிகா.

எலீசா

பான் இந்தியா, 'ஹீரோ'களுடன், 'டீல்' போடும், அர்ஜுன்!

கடல், இரும்புத்திரை உள்ளிட்ட சில படங்களில் வில்லனாக நடித்த, அர்ஜுன், தற்போது, விஜயின், லியோ படத்தில், வில்லனாக நடித்து வருகிறார்.

அதோடு, 'இந்த படத்தில், இதுவரை சினிமாவில் நான் நடிக்காத ஒரு மாறுபட்ட வேடத்தில் நடிக்கிறேன். இப்படத்தின் இயக்குனர், என், 'கெட் - அப்'பையும் முழுமையாக மாற்றி இருக்கிறார். அதனால், இந்த படத்திலிருந்து என் சினிமா கேரியரே மாறப்போகிறது.

'குறிப்பாக, பான் இந்தியா படங்களாக ஒப்பந்தமாகி, இந்திய அளவிலான ஒரு நடிகராக உருவெடுக்கப் போகிறேன். மேலும், தமிழ், தெலுங்கு, கன்னட சினிமாக்களில் உள்ள, பான் இந்தியா, 'ஹீரோ'கள் மற்றும் இயக்குனர்களையும் சந்தித்து, புதிய படங்களுக்கான தீவிர பேச்சில் இறங்கியுள்ளேன்...' என்கிறார், அர்ஜுன்.

— சினிமா பொன்னையா

கறுப்புப்பூனை!

பீட்சா நடிகர், தமிழில், 'பிசி'யாக நடித்து வந்தபோதும், சில நேசத்திற்குரிய நடிகையருக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுத்து வந்தார். இப்போது அவர் ஹிந்தியில், 'பிசி'யாகி விட்டதால், அந்த நடிகையர் பட வாய்ப்பு இல்லாமல் அல்லல்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இதில், நடிகரின் அரவணைப்பில் நீண்ட காலமாக இருந்து வரும், அந்த நான்கு எழுத்து நடிகை, சமீபத்தில் மேற்படி நடிகரை சந்தித்து, தன் நிலைமையைச் சொல்லி புலம்பி இருக்கிறார். அதையடுத்து, தன் நட்பு வட்டார இயக்குனர்கள் இரண்டு பேரை அழைத்து, உடனடியாக அம்மணிக்கு புதிய படங்கள் கிடைப்பதற்கு வழிவகை செய்திருக்கிறார், நடிகர்.

தனக்கு படம் ஒப்பந்தம் செய்து கொடுத்தால், நடிகருக்கு, 'பார்ட்டி' கொடுத்து உபசரிப்பதை, வாடிக்கையாக வைத்திருக்கும் மேற்படி நடிகை, 'அட்வான்ஸ்' வாங்கிய கையோடு மும்பை சென்று, நடிகருக்கு 'செம' விருந்து கொடுத்து, 'ரிட்டர்ன்' ஆகி இருக்கிறார்.

சினி துளிகள்!

* படப்பிடிப்பு தளங்களில், மதிய இடைவெளியின்போது, கிரிக்கெட் விளையாடுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார், யோகி பாபு. இதை அறிந்த இந்திய கிரிக்கெட் வீரர் தோனி, தன் கையெழுத்து போட்ட, ஒரு கிரிக்கெட் பேட்டை, யோகி பாபுவிற்கு பரிசாக வழங்கியிருக்கிறார்.

* ஜவான் படத்துக்காக, ஷாருக்கானுடன், விஜய்சேதுபதி மோதும் சண்டை காட்சியை, 12 கேமராக்களை வைத்து படமாக்கி இருக்கிறார், அட்லீ.

* பிரபல ஹீரோகளுடன் நடிக்கும் பட வாய்ப்புகள் குறைந்து விட்டதால், தற்போது கதையின் நாயகியாக நடிப்பதில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார், சாய் பல்லவி. குறிப்பாக, 'ஹாரர்' அல்லாத மாறுபட்ட கதைகளை எதிர்பார்க்கிறார்.

அவ்ளோதான்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us