தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...


PUBLISHED ON : மே 07, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 07, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஜெயம் ரவிக்கு வந்த, ஆசை!

இதுவரை சாதாரண சாக்லேட் பாயாக இருந்து வந்த, ஜெயம் ரவியை, பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் மெகா, 'ஹீரோ' ஆக்கி விட்டார், மணிரத்னம். அதன் காரணமாக, தான் நடித்து, 'ஹிட்'டான படங்களின் இரண்டாம் பாகத்திற்கான கதையை தயார் செய்யுமாறு சம்பந்தப்பட்ட இயக்குனர்களை கேட்டு வருகிறார்.

அதுமட்டுமல்லாமல், கமலை வைத்து, மணிரத்னம் இயக்கிய, நாயகன், ரஜினியை வைத்து இயக்கிய, தளபதி போன்ற படங்களின் இரண்டாம் பாகத்தை இயக்கினால், அப்படங்களில் ரஜினி மற்றும் கமல் நடித்த வேடங்களில் நடிப்பதற்கும் தான் தயாராக இருப்பதாகவும் கூறுகிறார், ஜெயம் ரவி.

சினிமா பொன்னையா

நித்யா மேனனுக்காக காத்திருக்கும், தனுஷ்!

தனுஷை பொறுத்தவரை, கேரளத்து சேச்சிகளை, 'சென்டிமென்ட்' நாயகிகளாக கருதக் கூடியவர். அந்த வகையில், திருச்சிற்றம்பலம் படத்தில், தன்னுடன் நடித்த, நித்யா மேனனே தொடர்ந்து தன் படங்களில் நடிக்க வேண்டும் என்று ஆர்வம் காட்டுகிறார்.

தற்போது தான் எழுதியுள்ள ஒரு கதையில், நாயகியாக, நித்யா மேனன் தான் நடிக்க வேண்டும் என்று கூறி வரும் தனுஷ், 'உங்களை நினைத்தே உருகி உருகி இந்த கதையை எழுதி இருக்கிறேன்.

'அதனால், நீங்கள் ஐந்து ஆண்டுகள் கழித்து, 'கால்ஷீட்' தருவதாக சொன்னாலும், அப்போது வரை காத்திருந்து, இந்த கதையை இயக்குவேன். அதுவரை கிடப்பில் போட்டு வைப்பேன்...' என்று கூறி, அவரை ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறார்.

— சி.பொ.,

மீண்டும் காஞ்சனா!

ராகவா லாரன்சுக்கு அவர் இயக்கி நடித்த, காஞ்சனா படத்தின் மூன்று பாகங்களும் நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தன. சமீபத்தில் அவர் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியான, ருத்ரன் படம் காலை வாரி விட்டது.

இதன் காரணமாக, அடுத்தபடியாக, சந்திரமுகி -2 படத்தில் நடித்த போதும், அந்த படத்தின் மீது பெரிதாக நம்பிக்கை வைக்கவில்லை, லாரன்ஸ். தற்போது, காஞ்சனா படத்தின் நான்காம் பாகத்தை இயக்கி நடிக்க, 'ஸ்கிரிப்ட்' தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளார்.

'முதல் மூன்று பாகங்களை விட, நான்காவது பாகத்தில், மிரட்டலான அமானுஷ்ய காட்சிகளை வைத்து, இந்திய அளவில் ஒரு, 'ஹிட்' படத்தை கொடுத்து விட வேண்டும் என்று தீவிர கதை ஆலோசனையில் ஈடுபட்டுள்ளேன்...' என்கிறார்.

சினிமா பொன்னையா.

கறுப்புபூனை!

ஆரம்ப காலத்தில் தன்னை பற்றி எந்த வதந்தியும் வந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்து வந்த, தேசிய விருது நடிகை, சமீப காலமாக, தன்னைப் பற்றிய பரபரப்புகள் அடங்கி விட்டதால், அதிர்ச்சி அடைந்திருக்கிறார்.

இப்படியே போனால், மார்க்கெட் இல்லாத நடிகை என்று சொல்லி, தன்னை, இயக்குனர்கள் ஓரங்கட்டி விடுவரோ என்று அச்சப்பட்டு, தனக்கு நெருக்கமான சில மீடியா நண்பர்கள் மூலம் தன்னைப் பற்றிய கிசுகிசுக்களை பரப்பி விடுமாறு கேட்டுள்ளார். குறிப்பாக, 'டாப் ரேஞ்சில்' இருக்கும், 'மெகா ஹீரோ'களுடன் இணைத்து, தன்னை பற்றி வதந்தி பரப்புமாறு, அன்பு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சினி துளிகள்!

* விருமன் படத்தை அடுத்து, மாவீரன் படத்தில் நடித்து வரும், அதிதி ஷங்கர், அடுத்தபடியாக, விஷ்ணு விஷால், ஆகாஷ் முரளி ஆகியோருக்கு ஜோடியாக நடிக்க உள்ளார்.

* கதாநாயகி வாய்ப்புகள் குறைந்து விட்டதால், இரண்டாவது நாயகியாக நடிக்க துவங்கி விட்டார், நடிகை அஞ்சலி.

* இதுவரை, 'சிங்கிள் ஹீரோயினி' ஆக மட்டுமே நடிப்பேன் என்று கூறி வந்த, கீர்த்தி சுரேஷ், இப்போது, பட வாய்ப்புகள் குறைந்து விட்டதால், 'டபுள் ஹீரோயினி சப்ஜெக்டிலும் நடிக்க தயார்...' என, அறிவித்துள்ளார்.

* தெலுங்கு நடிகர், ராம்சரணை வைத்து, ஷங்கர் இயக்கி வரும், கேம் சேஞ்சர் படம், அடுத்த ஆண்டு, பொங்கலுக்கு திரைக்கு வருகிறது. இப்படத்தில், கியாரா அத்வானி நாயகியாக நடிக்கிறார்.

அவ்ளோதான்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us