sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

இதப்படிங்க முதல்ல...

/

இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...


PUBLISHED ON : செப் 04, 2011

Google News

PUBLISHED ON : செப் 04, 2011


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மீனவர் பிரச்னையை படமாக்கும் மணிரத்னம்!

கன்னத்தில் முத்தமிட்டால் படத் தில், விடுதலைப் புலிகள் போராட்டத்தை சொன்ன மணிரத்னம், அடுத்து, இலங்கை கடற் படையால் பாதிக்கப்படும் தமிழக மீனவர் கள் பிரச்னையை படமாக்குகிறார். ஜெய மோகன் கதை, வசனம் எழுதும் இப்படத் தில், நடுக்கடலில் மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படுவது முதல், நிர்வாணப் படுத்தி சித்ரவதைப்படுத்தப்பட்டு வரும் கொடுமைகளையும் வெளிச்சம் போட்டு காட்ட இருக்கிறார்.

சினிமா பொன்னையா.

கமர்ஷியல் கதைகளில் விக்ரம்!

தற்போது, ராஜபாட்டை, கரிகாலன் படங்களில் நடித்து வரும் விக்ரம், அதன் பிறகு பாலா மற்றும் விஜய் இயக்கும் படங்களில் நடிக்கிறார். அந்த இரண்டு படங்களையும் முடித்து விட்டு, தரணி இயக்கத்தில் நடிக்கிறார். ஆனால், இந்த படங்கள் அனைத்துமே பக்கா கமர்ஷியல் கதையில் உருவாகிறது. தெய்வத் திருமகள் எதிர்பார்த்த வெற்றியை தராததால், இப்படி முழு கமர்ஷியல் ஹீரோவாக மாறியுள்ளார்.

சி.பொ.,

ஹன்சிகாவுக்கு கோவில்!

குஷ்பூவுக்கு சில ரசிகர்கள் முன்பு கோவில் கட்டியதைப் போல், ஹன்சிகா மோத்வானி மீது வெறி கொண்ட ரசிகர்கள், அவருக்கு கோவில் கட்ட முயற்சி எடுத்தனர். ஆனால், விஷயத்தை கேள்விப் பட்ட ஹன்சிகா, அதை தடுத்து நிறுத்தியதோடு, 'நடிகைகளும் சாதாரண மனுஷிகள்தான்; கோவில் கட்டி, அவர்களை தெய்வமாக்கு வது தவறானது...' என்று அந்த ரசிகர்களுக்கு அன்பான, அறிவுரை வழங்கி உள்ளார். தன்னை அறியா சன்னதம் உண்டா?

எலீசா.

இலியானா மிரட்டல்!

இதுவரை படத்துக்கு, ஒரு கோடி ரூபாய் சம்பளம் கேட்டு மிரட்டி வந்த இலியானா, தற்போது, தன் கூடவே நண்பர்கள் பலரையும் அழைத்து வந்து, அவர்களுக்கும் விமான டிக்கெட், ஸ்டார் ஓட்டலில் தங்கும் வசதி என்றெல்லாம் பெரிய பில்லை தயாரிப்பாளர்களின் தலையில் கட்டுகிறார். இந்த சேதி, ஆந்திராவிலிருந்து சென்னைக்கு பரவ, நண்பன் படத்திற்கு பிறகு இலியானாவை, 'புக்' செய்ய இருந்த படாதிபதிகள், பின்வாங்கி உள்ளனர். ஆசைப்பட்ட பண்டம் ஊசிப் போயிற்று!

எலீசா.

இயக்குனர் ஆசையில் ப்ரியா ஆனந்த்!

180 படத்தில் நடித்த ப்ரியா ஆனந்த், மணிரத்னத்தின் தீவிர ரசிகை. அவர் இயக்கத்தில் நடிப்பதை விட, அவரிடம் உதவி இயக்குனராக பணிபுரிவதையே விரும்புகிறார் ப்ரியா. 'அவரிடம் படம் இயக்கும் கலையை கற்று, இதே தமிழ் சினிமாவில் இயக்குனராக வேண்டும் என்பதே என் எதிர்கால சினிமா ஆசை...' என்கிறார். நினைத்தது இருக்க, நினையாதது எய்தும்; நினைத்தது வந்தாலும் வந்து சேரும்.

எலீசா.

* யானைகளை மையப்படுத்தி பிரபு சாலமன் இயக்கும் கும்கி படத்தில், அறிமுகமாகிறார், சிவாஜியின் பேரன் விக்ரம் பிரபு.

சமூக சேவை செய்யும் ஸ்வேதா மேனன்!

காமசூத்ரா விளம்பர படத்தில் ஸ்வேதா மேனன் நடித்தது குறித்து, பலரும் பலவிதமாக கூறி வருகின்றனர். ஆனால், அவரோ, 'அப்படியொரு விளம்பரத்தில் நடித்தது எனக்கு கூச்சமாகவோ, வெட்கமாகவோ இல்லை; மாறாக, மக்கள் தொகையை கட்டுப்படுத்த அரசு எடுக்கும் முயற்சிக்கு துணை புரிந்ததாகவே கருதுகிறேன். மேலும், என்னைக் கேட்டால், இது கூட ஒரு சிறந்த சமூக சேவைதான்...' என்றும் மார் தட்டுகிறார். தன்னைத் தானே மெச்சிக் கொள்ளுமாம் தவிட்டுக் கொழுக்கட்டை!

எலீசா.

ரம்யா கிருஷ்ணனின் கனவு மாளிகை!

சினிமாவில் நடிகையானதில் இருந்தே, சொந்தமாக ஒரு பங்களா கட்ட வேண்டும் என்பது ரம்யா கிருஷ்ணனுக்கு கனவாக இருந்ததாம். அந்த கனவு இப்போது தான் அவருக்கு கை கூடியுள்ளது. சென்னை கிழக்கு கடற்கரை சாலையில், ஐந்து ஏக்கர் பரப் பளவுள்ள நிலத்தில், ஒரு அழகிய பங்களா கட்டி, தற்போது, அதில் குடியேறி விட்டார். பாதுகாப்பு கருதி, அந்த வீட்டைச் சுற்றி கண்காணிப்பு கேமராக்களையும் பொருத்தியுள்ளார்.

எலீசா.

இயக்குனர் சங்கம் புதிய ஆணை!

இதுவரை படாதிபதிகள் தான், ஒவ்வொரு படத்தை தயாரிக்கும் போதும், பிலிம் சேம்பரில் பதிவு செய்து, பணம் கட்டி வந்தனர். அதேபோல், இப்போது இயக்குனர்களும் ஒவ்வொரு படத்தையும் இயக்கும் போதும், இயக்குனர் சங்கத்தில், பத்து ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் என்ற ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இயக்குனர் சங்கத்தில் புதிதாக பொறுப்பேற்ற சமுத்திரகனி, அமீர், எஸ்.பி.ஜனநாதன் அடங்கிய குழு, இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

— சினிமா பொன்னையா.

அவ்ளோதான்!






      Dinamalar
      Follow us