
சர்வதேச விழாவில், தில்லானா மோகனாம்பாள்!
ரஷ்யாவின் உக்ளிக் நகரில், நவம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழா நடக்கிறது. இதில், சிவாஜி, கோ, சந்திரமுகி, தென்மேற்கு பருவக்காற்று, அங் காடித்தெரு, பாஸ் என்ற பாஸ்கரன் ஆகிய படங்கள் திரையிடப்படுகின்றன. இதற் கெல்லாம் மேலாக, சிவாஜி கணே சனை கவுரவப்படுத்தும் வகையில் அவர் நடித்த, தில்லானா மோகனாம் பாள் படமும் இவ்விழாவில் திரை யிடப்படுகிறது.
— சினிமா பொன்னையா.
தயாரிப்பாளரான நீது சந்திரா!
யுத்தம் செய் படத்தில், 'கன்னீத்தீவு பொண்ணா...' என்ற பாடலுக்கு டைரக்டர் அமீருடன் குத்தாட்டம் ஆடிய நீது சந்திரா, அதே அமீர் இயக்கும், ஆதிபகவன் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இதைத் தொடர்ந்து, போஜ்பூரி மொழியில் ஒரு படம் தயாரிக்கும் நீது சந்திரா, அந்த படம் வெற்றி பெற்றால், இங்கும் படம் தயாரிக்க திட்டமிட்டுள்ளார். ஓடி ஒன்பது பணம் சம்பாதிப்பதிலும், உட்கார்ந்து ஒரு பணம் சம்பாதிப்பது மேல்!
— எலீசா.
பாட்ஷா பாணியில் வேட்டை மன்னன்!
வேட்டை மன்னன் படத்தில் சர்வதேச கொலைக்காரனாக நடிக்கிறார் சிம்பு. தன் நண்பனை கொலை செய்தவனை போட்டுத் தள்ளும் சிம்பு, ஒரு கட்டத்தில் சர்வதேச மாபியாவாக மாறுவதே இப்படத்தின் கதை. இப்படத்தில் அதிரடி கவர்ச்சி நாயகியாக நடிக்க சம்மதம் தெரிவித்து உள்ளார் ஹன்சிகா மோத்வானி.
— சி.பொ.,
அசின் இடத்தை பிடிக்கும் மித்ரா!
காவலன் படத்தில் அசினின் தோழியாக நடித்து, பின்னர் விஜய்க்கு மனைவியாகும் ரோலில் நடித்தவர் மலையாள வரவு மித்ரா. அதன் பிறகு, இப்போது விக்ரமுக்கு ஜோடியாக, கரிகாலன் படத்தில் நடிக்கும் மித்ராவுக்கு, அசின் போன்றொரு நடிகையாக புகழ் பெற வேண்டும் என்பதுதான் நோக்கம். அதனால், இப்போது அசின் பாலிவுட் நடிகையாகி விட்டதால், தமிழில் அவர் விட்டுச் சென்ற இடத்தை பிடிக்க முயற்சி எடுத்து வருவதாக சொல்கிறார். ஆசை பெருக, அலைச்சலும் பெருகும்!
— எலீசா.
இந்திக்கு செல்லும் லிங்குசாமி!
ரன் இந்தி ரீ-மேக் வெற்றி பெற்றதால், தமிழில் தான் இயக்கிய, ஆனந்தம், சண்டக்கோழி, ஜி, பையா, வேட்டை ஆகிய படங்களையும் இந்தியில் அடுத்தடுத்து ரீ-மேக் செய்ய முடிவு செய்துள்ளார் லிங்குசாமி. இதில், சண்டக்கோழியில் அபிஷேக் பச்சன், பையா, வேட்டை படங்களில் ரன்பீர் கபூர் ஆகிய ஹீரோக்களை நடிக்க வைக்கவும் பேசி வருகிறார்.
— சி.பொ.,
கொத்தடிமைகள் பற்றிய கதை!
பசங்க, வம்சம் படங்களை இயக்கிய பாண்டிராஜ், தற்போது, மெரீனா என்ற படத்தை இயக்குகிறார். இதில், கொத்தடிமைகளாக விற்கப்படும் சிறுவர்களை மையப்படுத்தி, கதை பண்ணியிருப்பதாக சொல்லும் பாண்டிராஜ், 'இந்தப் படத்தை பார்த்து, 10 சிறுவர்கள் கொத்தடிமையில் இருந்து மீட்கப்பட் டாலும், எனக்கு கிடைத்த வெற்றியாக கருதுவேன்...' என்கிறார்.
— சி.பொ.,
துணிச்சல்காரியான நிஷா அகர்வால்!
கன்னத்தில் முத்தம் கொடுத்து நடிக்கவே தயங்குகிறார் காஜல் அகர்வால்; ஆனால், அவரது தங்கை நிஷா அகர்வால், விமலுடன் நடித்து வரும், இஷ்டம் படத்தில் உதட்டு முத்தக்காட்சியில் நடித்து, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அதோடு, 'கதைக்கு தேவையென்று டைரக்டர் சொல்லும் போது, அதன்படி நடித்துக் கொடுப்பதுதானே நல்ல நடிகைக்கு அழகு...' என்றும் புத்திசாலித்தனமாக பேசுகிறார். மூத்தாளை விட்டு, இளையாளைப்
பட்டம் கட்டின கதை!
— எலீசா.
இந்தியன் பார்ட் 2 படத்தில் அஜீத்!
ஷங்கர் இயக்கிய படங்களில் சிறந்த படமான, இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்கிறார் ஏ.எம்.ரத்னம். முதல் பகுதியில் கமல் நடித்தார்; இரண்டாம் பாகத்தில் அஜீத் நடிக்கப் போகிறார். இந்தியனை இயக்கிய ஷங்கரே, இரண்டாம் பாகத்தையும் இயக்கினால்தான் சரியாக இருக்கும் என்று, ஷங்கரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் ஏ.எம்.ரத்னம். ஆக, ஜீன்ஸ் படத்திலேயே ஷங்கர் இயக்கத்தில் நடிக்க வேண்டிய அஜீத், அப்போது தவற விட்டார்; இப்போது விட்டதை பிடிக்கிறார்.
— சினிமா பொன்னையா.
அவ்ளோதான்!

