PUBLISHED ON : நவ 20, 2011

சின்னத்திரைக்கு வரும் விஜய்!
இந்தி, 'டிவி' சேனலில் அமிதாப்பச்சன் நடத்திய, 'குரோர்பதி' என்ற நிகழ்ச்சியை தழுவி, பின்னர் தமிழில், 'கோடீஸ்வரன்' என்ற பெயரில் ஒளிபரப்பானது. அதே போன்றதொரு வித்தியாசமான நிகழ்ச்சியை, விஜய்யை வைத்து நடத்த ஒரு பிரபல சேனல் முயற்சி எடுத்துள்ளது; விஜய்யும் அதற்கு சம்மதம் தெரிவித்து விட்டதாக கூறப்படுகிறது. ஆக, விரைவில் விஜய்யும் சின்னத்திரைக்கு வருகிறார்.
— சினிமா பொன்னையா.
தனுஷுக்கு உருவான கதையில் சிம்பு!
ஆடுகளம் படத்தை இயக்கிய வெற்றி மாறன், மீண்டும் தனுஷுக்காக ஒரு கதை ரெடி பண்ணி, கால்ஷீட்டுக்காக காத்திருந்தார். ஆனால், தனுஷ், மயக்கம் என்ன, 3 ஆகிய படங்களில் பிசியாக இருந்ததால், அந்த கதையை சிம்புவிடம் சொல்லி, ஓ.கே., செய்து விட்டார். ஒஸ்தி படம் முடிந்ததும் துவங்க இருக்கும் இப்படம், 25 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகிறது. சிம்பு படங்களில் இதுவே அதிக பட்ஜெட் படம்.
— சி.பொ.,
சமீரா ரெட்டி குத்தாட்டம்!
பிபாஷா பாசு, தீபிகா படுகோனே ஆகிய நடிகைகளை தொடர்ந்து, சமீரா ரெட்டியும் குத்துப் பாட்டுக்கு ஆடுவதில் ஆர்வம் காட்டி வருகிறார். காரணம் கேட்டால், 'இப்போது பல படங்களின் வெற்றியை குத்து பாடல்கள் தான் தீர்மானிக்கின்றன. தபாங் இந்தி படம் கூட அப்படத்தில் இடம்பெற்ற குத்து பாடலுக்காகவே அதிக நாட்கள் ஓடியது. எனவே, நானும் குத்து பாட்டுக்கு நடனமாடி, படங்களின் வெற்றிக்கு காரணமாக போகிறேன்...' என்கிறார். தன் பலம் கண்டு அம்பலம் ஏற வேண்டும்!
— எலீசா.
விமல் போடும் கண்டிஷன்!
நடித்த படங்கள் ஓடாததால், மீண்டும் டைரக்ஷனுக்கு திரும்பி விட்டார் சுந்தர் சி. ஒரு கதையை ரெடி பண்ணிய அவர், களவாணி விமலுக்கு சொல்லி, ஓ.கே., செய்திருக்கிறார். ஆனால், முதலில் 40 லட்ச ரூபாய்க்கு நடிக்க சம்மதித்த விமல், படத்தில் இவ்னொரு புதுமுக ஹீரோவும் இருக்கிற சேதியறிந்து, இப்போது கூடுதல் சம்பளம் கேட்கிறார். இதனால், விமலுக்கு பதிலாக வேறு நடிகரை, 'புக்' பண்ணலாமா என்று ஆலோசித்து வருகிறார் சுந்தர் சி.
— சி.பொ.,
ஜெனிலியா ஆட்சேபனை!
காக்க காக்க படம் இந்தியில், போர்ஸ் என்ற பெயரில், ரீ-மேக் ஆகிறது. இதில், ஜான் ஆபிரகாமுடன் நடிக்கும் ஜெனிலியா, 'தமிழில் ஜோதிகா நடித்த டீச்சர் வேடம் எனக்கு செட் ஆகாது...' என்று ஆட்சேபனை தெரிவித்ததை தொடர்ந்து, ஹீரோயின் வேடத்தை சமூக சேவகி போன்று மாற்றி அமைத்துள்ளனர். அவளுக்கு எவள் ஈடு; அவளுக்கு
அவளே ஜோடு!
— எலீசா.
கவிஞர் தாமரை ஆதங்கம்!
'காதல் பாடல்கள் எழுத மட்டுமே என்னை இயக்குனர் கள் அணுகுவதால், என் மீது, 'காதல் பாடலாசிரியர்' என்ற முத்திரை விழுந்து விட்டது...' என்று ஆதங்கப்படுகிறார் தாமரை. 'காதல் தவிர தத்துவம், புரட்சி, சோகம் போன்ற பாடல் களையும் என்னால் சிறப்பாக எழுத முடியும்...' என்று சொல்லும் கவிஞர் தாமரை, குத்துப் பாடல்கள் மட்டும் எழுதுவதில்லை என்ற கொள்கையை தொடர்ந்து கடை பிடித்து வருவதாகவும் சொல்கிறார். தன்னைத் தானே மெச்சிக் கொள்ளுமாம் தவிட்டுக் கொழுக் கட்டை!
— எலீசா.
தமிழ் பாடல் இல்லாத ரஹ்மான் ஆல்பம்!
வந்தே மாதரம் பாடலைத் தொடர்ந்து, சகோதரத்துவத்தை வலியுறுத்தி ஒரு ஆல்பம் தயார் செய்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான். ஆனால், மூன்று இந்தி பாடல்கள், இரண்டு ஆங்கில பாடல்கள் இடம்பெறும் இந்த ஆல்பத்தில், ஒரு தமிழ் பாடல் கூட இடம்பெறவில்லை என்பது வருத்தப்படக் கூடிய செய்தி.
— சி.பொ.,
எம்.எஸ்.பாஸ்கரின் அரசியல் கருத்து!
காமெடியன்கள் அரசியலில் ஈடுபடக் கூடாது என்கிறார், காமெடி நடிகர் எம்.எஸ்.பாஸ்கர். 'அரசியல்வாதியாக நடிக் கலாம், ஊழலை எதிர்க்கலாம், கருத்து சொல்லலாம்; ஆனால், அரசியல்வாதியாக மட்டும் மாறக் கூடாது. ஒருவேளை அரசியல்வாதியாக ஆக வேண்டும் என்ற ஆசை இருந்தால், சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டு, முழுநேர அரசியல்வாதியாகி விட வேண்டும்...' என்கிறார்.
— சி.பொ.,
ஆந்திராவுக்கு செல்லும் த்ரிஷா!
ஆந்திர மாநிலத்தில் பிரமாண்டமான ஒரு ஸ்டார் ஓட்டல் கட்டி வருகிறார் த்ரிஷா. விரைவில் கட்டுமான பணிகள் முடியும் தருவாயில் இருக்கும் அந்த ஓட்டலின் விழாவை, தெலுங்கு பட உலகமே மூக்கின் மேல் விரல் வைக்கும் அளவுக்கு அமர்க் களப்படுத்த உள்ள த்ரிஷா, அதன் பிறகு, ஆந்திராவுக்கு குடிபெயரவும் திட்டமிட்டிருக் கிறார். கூந்தல் உள்ள சீமாட்டி வலக் கொண்டையும் போடுவாள்; இடக் கொண்டையும் போடுவாள்.
— எலீசா.
தமிழ் படத்தில் டோனி!
கிரிக்கெட் வீரராக பிரகாஷ் ராஜ் இயக்கி நடிக்கும் படம், டோனி. இப்படத்தில் டோனியாகவே நடிக்கும் பிரகாஷ் ராஜ், நிஜ கிரிக்கெட் வீரர் டோனியையும் ஒரு வேடத்தில் நடிக்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள பிரகாஷ் ராஜ், டோனி நடிக்கும் காட்சியை சஸ்பென்சாக வைக்கவும் முடிவு செய்துள்ளார்.
— சி.பொ.,
பாட்டுக்கு சென்சார்!
நடிகை சங்கீதா முக்கிய வேடத்தில் நடிக்கும் படம், உச்சிதனை முகர்ந்தால்... ஈழத் தமிழ் சிறுமியை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தில், ஈழக்கவிஞர் காசி ஆனந்தன் எழுதியுள்ள, 'இருப்பாய் தமிழா நெருப்பாய்...' என்ற பாடலில் சில வரிகள், உலக தமிழர்களை ஆக்ரோஷமாக்கும் வகையில் இடம்பெற்றுள்ளதாம். அதனால், காட்சிகளில் மட்டுமே கத்திரி வைத்து வரும் சென்சார் போர்டு, இந்த பாடலிலும் கத்திரி வைத்துளளது.
— சினிமா பொன்னையா.
அவ்ளோதான்!
