தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...


PUBLISHED ON : டிச 04, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 04, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விஜய்யுடன் மோதும் மாதவன் - ஆர்யா

பொங்கலுக்கு விஜய் நடித்துள்ள, நண் பன் படம் திரைக்கு வரு வதால், அதே நாளில் வெளி யாக இருந்த சில படங்கள் பின் வாங்கி விட்டன. ஆனால், இயக்கு னர் லிங்குசாமி, மாதவன் - ஆர்யாவை வைத்து, தான் இயக்கியுள்ள, வேட்டை படத்தை பொங்கலுக்கு, 'ரிலீஸ்' செய்ய உறுதி செய்து விட்டார். அதோடு, 'யார் படம் வந்தாலும், பொங்கல் ரேசில் என் படமே முதலிடத்தை பிடிக்கும்...' என்றும் சொல்கிறார்.

— சினிமா பொன்னையா.

விக்ரம் நடிக்கும், 'தாண்டவம்!'

தெய்வத்திருமகன் படத்தை இயக்கிய விஜய், மீண்டும் விக்ரமை வைத்து, தாண்டவம் என்ற படத்தை இயக்குகிறார். அனுஷ்கா - எமி ஜாக்சன் ஜோடி சேரும் இப்படம் முழுக்க, முழுக்க ஆக்ஷன் படம். அதனால், சண்டைக் காட்சிகள் வித்தியாசமாக அமைய, ஹாலிவுட் ஸ்டன்ட் மாஸ்டரையும் இப்படத்துக்கு, 'புக்' பண்ணியுள்ளார் இயக்குனர் விஜய்.

— சி.பொ.,

ஐஸ்வர்யாவுக்கு பலம் தனுஷ்!

கணவர் தனுஷை நாயகனாக வைத்து தான் இயக்கியுள்ள, '3' படத்தை பொங்கலுக்கு வெளியிட இருக்கிறார் ஐஸ்வர்யா. 'சில பெரிய படங்களும் பொங் கலுக்கு வெளியாகிறதே...' என்றால், 'என் படமும் பெரிய படம் தான். அது மட்டுமின்றி, என் கணவர் தனுஷ், தேசிய விருது பெற்ற பெரிய நடிகர். அவர், என் படத்தில் நடித்திருப்பதும் எனக்கு பெரிய பலம். பிறகு ஏன் மற்ற படங்களை நினைத்து நான் பயப்பட வேண்டும்...' என்கிறார். கைக் குருவியைக் கொண்டுதான் காட்டுக் குருவியைப் பிடிக்க வேணும்!

— எலீசா.

இந்திக்கு செல்லும் ரிச்சா!

தமிழில் ஜீவனை நாயகனாக வைத்து, தான் இயக்கிய திருட்டுப் பயலே படத்தை, இந்தியில் ரீ-மேக் செய்கிறார் சுசி கணேசன். இதில், நாயகனாக நீல் நிதின் முகேஷ் நடிக்க, ரிச்சா நாயகியாக நடிக்கிறார். தற்போது தமிழில், ஒஸ்தி, மயக்கம் என்ன படங் களில் நடித்துள்ள ரிச்சா, இந்த இந்திப்பட வாய்ப்பு காரணமாக புதிய தமிழ் படங்களை தவிர்த்து வருகிறார். வந்ததை வரப்படுத்தடா, வலக்காட்டு ராமா!

— எலீசா.

ஜூனியர் என்.டி.ஆருடன் த்ரிஷா!

ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக, தம்மு என்ற படத்தில் நடிக்கயிருந்த ஸ்ருதிஹாசன், அப்படத்திலிருந்து விலகியதால், பின்னர் காஜல் அகர்வால், 'கமிட்' ஆனார். ஆனால், அவரது கால்ஷீட்டில் பிரச்னை ஏற்பட, த்ரிஷாவை ஒப்பந்தம் செய்துள்ளனர். பிரபல தெலுங்கு ஹீரோவின் படம் என்பதால், மங்காத்தாவிற்கு பிறகு சோர்ந்திருந்த த்ரிஷா, உற்சாகத்தில் இருக்கிறார். வாழ்கிறதும், தாழ்கிறதும் வண்டி உருளை போல!

— எலீசா.

அனுஷ்கா குத்தாட்டம்!

இதுவரை, தான் ஹீரோயினாக நடித்த படங்களில் மட்டுமே குத்தாட்டம் ஆடிய அனுஷ்கா, முதன் முறையாக, சகுனி படத்தில் ஒரு பாட்டுக்கு ஆடுகிறார். இதையறிந்து மேலும் சில டைரக்டர்களும், தங்கள் படங்களில் பாட்டுக்கு ஆட அனுஷ்காவை தேடி, படையெடுத்து விட்டனர். விட்டால் தன்னை முழுநேர குத்தாட்ட நடிகையாக்கி விடுவர் போலிருக்கே என்று ஆடிப் போன அனுஷ்கா, இனிமேல் எந்த படத்திலும் குத்தாட்டம் ஆடும் ஐடியா இல்லை என்று தீர்க்கமாக சொல்லி அனுப்பி விட்டார். ஓய்ந்த வேளையில் ஆடினால் உப்புப் புளிக்கு ஆகும்!

— எலீசா.

மீரா ஜாஸ்மின் எதிர்கால திட்டம்!

பெரும்பாலான நடிகைகள் ஓட்டல், பங்களா என்று வருமானத்தை முதலீடு செய்து வருகின்றனர். ஆனால், மீரா ஜாஸ்மின் சம்பாதிக்கும் பணத்தை, அப்பார்ட்மென்ட் கட்டி, வாடகைக்கு விடுகிறார். கேட்டால், 'தேவையில்லாத சொத்துக்களை வாங்கி முதலீட்டை முடக்கிப் போடுவதை விட, வீடு கட்டி வாடகைக்கு விட்டால், அது, ஆயுசுக்கும் சோறு போடும்...' என்கிறார். அறிவார், அறிவார், ஆய்ந்தவர் அறிவார்!

— எலீசா.

ஆஸ்கர் விருதுக்கு அனிமேஷன் படங்கள்!

பிப்ரவரி 26, 2012ல், 84வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா துவங்குகிறது. இதில், போட்டியிட 18 அனிமேஷன் படங்களும் பரிந்துரைக்கப் பட்டுள்ளன. அவற்றில், குங்பூ பாண்டா-2, தி அட்வென்சர் டின்டின், ஹப்பி பீட் ஆகியவை முக்கிய இடம் பிடித்துள்ளன.

— சி.பொ.,

ஹாலிவுட் பாணியில் விஜய் - அஜீத்!

கவுதம் மேனன் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும், யோஹன் அத்தியாயம் ஒன்று படத்தின் விளம்பரம், ஹாலிவுட் படம் போன்ற டிசைனில் வெளியானதை தொடர்ந்து, இப்போது, அஜீத் நடித்து வரும், பில்லா-2 பட டிசைனும் ஹாலிவுட் பாணியிலேயே வெளியாகியுள்ளது. விசாரித்த போது, இவ்விரு படங்களுமே மெகா பட்ஜெட்டில் ஹாலிவுட் பட தரத்தில் உருவாக இருப்பதாக கூறுகின்றனர்.

— சி.பொ.,

நகுல் படம் டிராப்!

காதலில் விழுந்தேன் படம் வெளியான நேரத்தில், ஒன்றரை கோடி ரூபாய் வரை சம்பளம் கேட்டதால், அதன் பிறகு, நகுலுக்கு படம் கொடுக்க யாரும் முன்வரவில்லை. இதனால், இரண்டு ஆண்டு இடைவெளிக்கு பின், குறைவான சம்பளத்தில் ஆஸ்கார் பிலிம்ஸ் தயாரிக்கும் படத்தில் ஒப்பந்தமாகி, நடித்து வந்தார். ஆனால், போட்ட பட்ஜெட்டை விட, பட இயக்குனர் அறிவழகன் கூடுதல் செலவு செய்து விட்டதாக படத்தை, 'டிராப்' செய்து விட்டனர். இதனால், அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார் நகுல்.

— சினிமா பொன்னையா.

அவ்ளோதான்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us