தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...


PUBLISHED ON : டிச 11, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 11, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விஜய் நடிக்கும், துப்பாக்கி!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடிக்கும் படத்துக்கு, துப்பாக்கி என்று பெயர் மாற்றியுள்ளனர். அதிரடி ஆக்ஷன் கதையில் உருவாகும் இப்படம், 65 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகிறது. விஜய்யின் படங்களுக்கு இந்த அளவு வியாபாரம் கிடையாது என்ற போதும், முருகதாஸ் இயக்குவதால், அவரது பட வியாபாரத்தை கருத்தில் கொண்டு, பட்ஜெட் அதிகப் படுத்தப்பட்டுள்ளது.

— சினிமா பொன்னையா.

டான்ஸ் ஷோ நடத்த விரும்பும் பூர்ணா!

'வித்தகன் படத்திற்கு பிறகும், பெரிய ஹீரோக்களின் பட வாய்ப்புகள் வரவில்லையென்றால், எனக்கு பிடித்தமான, டான்ஸ் ஷோ நடத்துவதில் தீவிரம் காட்டுவேன். சிறு வயதிலேயே நடனத்தின் மீது ஆர்வம் ஏற்பட்டதால், பரதம், களறி கலையை நான் முறையாக பயிற்சி எடுத்து வைத்திருக்கிறேன். அதனால், சினிமா கை விட்டாலும், நடனம் எனக்கு கை கொடுக்கும்...' என்கிறார் பூர்ணா. கிடைச்சா கஞ்சித் தண்ணி; கிடைக்காட்டா குழாய் தண்ணி!

— எலீசா.

அனுஷ்கா குத்தாட்டம்!

இந்தி தபாங் படத்தில், மல்லிகா - அரோரா ஆடிய குத்துப்பாட்டு, பெரிய அளவில் ஹிட் ஆனதால், அப்பாடலின் டியூனை அப்படத்தின், தமிழ் ரீ-மேக்கான, ஒஸ்தி, தெலுங்கு ரீ-மேக்கான, கப்பார் சிங் ஆகிய படங்களிலும் பயன்படுத்து கின்றனர். இப்பாடலுக்கு தமிழில் மல்லிகா ஷெராவத் ஆடினார். தெலுங்கில் அனுஷ்கா ஆட சம்மதம் தெரிவித்து உள்ளார். ஆதாயம் இல்லாமல் யாராவது ஆற்றோடு போவரா?

— எலீசா.

தன்சிகாவுக்கு விருது!

அரவான் படத்தில், ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த பெண்களை போலவே, உடம்பில் ஜாக்கெட், காலில் செருப்பு என்று எதுவும் அணியாமல் நடித்துள்ளார் தன்சிகா. அதோடு, கதாபாத்திரத்தின் தன்மைக்கேற்ப முழுவதுமாக மாறி நடித்துள்ளதாக கூறுகிறார். இதனால், பருத்தி வீரன் படத்துக்காக, ப்ரியாமணிக்கு விருது கிடைத்தது போல், அரவான் படத்தில் சிறப்பாக நடித்தமைக்காக தன்சிகாவுக்கும் விருது கிடைக்கும் என்கிறது, அரவான் படக்குழு. நினைத்தது இருக்க, நினையாதது எய்தும்; நினைத்தது வந்தாலும் வந்து சேரும்!

— எலீசா.

இசையமைக்கும் எஸ்.ஜே.சூர்யா!

வாலி, குஷி படங்களை இயக்கிய எஸ்.ஜே.சூர்யா, தற்போது, இசை என்றொரு படத்தை இயக்கி, நடித்து வருகிறார். இப்படத்துக்கு இசையமைக்க, ஏ.ஆர்.ரஹ்மானிடம் அவர் கேட்டபோது, தான் வேறு பணிகளில் பிசியாக இருப்பதாக சொன்னவர், 'நீங்களே இசையமைக்கலாமே...' என்று ஒரு வார்த்தை கூறியுள்ளார். விளைவு, இசை படத்துக்கு தானே இசையமைக்க போவதாக கூறி வருகிறார்.

— சி.பொ.,

கிராமத்து ரோலில் நமீதா!

ரமணா மோகிலி என்ற தெலுங்குப்பட இயக்குனர், தான் இயக்கும் படத்தில், 'குட்டை பாவாடை நடிகை' என்று பெயரெடுத்த நமீதாவுக்கு, பக்கா கிராமத்து பெண் வேடம் கொடுத்துள்ளார். இப்படியொரு வேடத்தில் நடிக்க வேண்டுமென்பது நமீதாவின் நீண்ட நாள் கனவாக இருந்ததால், இப்படத்துக்காக தன் உடல்கட்டை, 'ஸ்லிம்' ஆக்கியுள்ளார். இப்படத்தில், நமீதாவே முக்கிய வேடத்தில் நடிப்பதால், தமிழ், தெலுங்கு என, இரு மொழிகளிலும் படம் தயாராகிறது. கூத்துக்கு ஏற்ற கொட்டுக் கொட்டுகிறது!

— எலீசா.

ஹீரோ தேடும் சுசீந்திரன்!

தற்போது விக்ரமை வைத்து, ராஜபாட்டை படத்தை இயக்கி வரும் சுசீந்திரன், அடுத்து, வீர தீர சூரன் என்ற படத்தை இயக்குகிறார். தன்னுடைய முதல் படமான, வெண்ணிலா கபடி குழு படத்தில் நடித்த விஷ்ணுவை, இப்படத்தில் நாயகனாக நடிக்க வைக்கும் சுசீந்திரன், தெலுங்கு பதிப்பில் நடிக்க அங்குள்ள பிரபல ஹீரோக்களிடம், 'கால்ஷீட்' கேட்டு வருகிறார்.

— சி.பொ.,


இணைவரா விஜய் - அஜீத்!

அமிதாப்பச்சன் - தர்மேந்திரா இணைந்து, இந்தியில் நடித்து, 1975ல் வெளியான, ÷ஷாலே படத்தை, தமிழில், ரீ-மேக் செய்ய ஒரு நிறுவனம் முடிவெடுத்துள்ளது. இதில் விஜய் - அஜீத் இணைந்து நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்றும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இவர்கள் இருவரும் ஏற்கனவே, ராஜாவின் பார்வையிலே என்ற படத்தில் இணைந்து நடித்துள்ளனர். இந்த இரு துருவங்களும் மீண்டும் இணைவரா... பொறுத்திருந்து பார்ப்போம்.

— சினிமா பொன்னையா.


அவ்ளோதான்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us