தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/முட்டாள்கள் தினம்!

முட்டாள்கள் தினம்!

முட்டாள்கள் தினம்!


PUBLISHED ON : மார் 29, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 29, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஏப்ரல், 1ம் தேதியை, அனைத்து முட்டாள்கள் தினம் என்று அழைப்பர்.

கிரிகேரியன் காலண்டர் ஏற்கப்பட்டபோது, 1582ம் ஆண்டு முதல், புத்தாண்டு பிறப்பு, ஏப்ரல் 1லிருந்து, ஜனவரி, 1ம் தேதிக்கு மாற்றப்பட்டது. ஆனால், பலர், ஏப்., 1ம் தேதியை, ஆண்டின் முதல் நாளாக கொண்டாடினர். இவர்கள், மற்றவர்களால் முட்டாள்கள் என, அழைக்கப்பட்டனர். அந்த தினமே முட்டாள்கள் தினமாயிற்று.

* பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சிறுவர்கள், ஏப்., 1ம் தேதி, தன் நண்பர்கள் மற்றும் குழந்தைகளின் பின்புறம் பேப்பர் மீன்களை செய்து, ஒட்டுவர்

* ஸ்காட்லாந்தில், முட்டாள்கள் தினம் இரண்டு நாட்கள் கடைப்பிடிக்கப்படும். பாதிப்புக்கு உள்ளானவன், இரண்டாம் நாள், பாதிப்பு ஏற்படுத்தியவனின் பின்புறம் அவனுக்கு தெரியாமல் கிறுக்கி விடுவான். இதை, 'கிக் பேக்' என, அழைப்பர்

இங்கிலாந்து மற்றும் கனடாவில், ஏப்., 1ம் தேதி பிற்பகல் வரை மட்டுமே, இந்த விளையாட்டு நடக்கும்

* கடந்த, 1950ல், பி.பி.சி., செய்தி ஒலிபரப்பில், 'சுவிட்சர்லாந்து நாட்டில், வயலில் நுாடுல்ஸ் பயிரிட்டு, அறுவடை செய்யப்பட்டது...' என, தெரிவித்தது. பிறகு தான், அது, பொய்யான தகவல் என்று தெரிந்தது

இதே போல், 2008ல், 'மிராகிள் ஆப் எவலேஷன்' என்ற வீடியோவை வெளியிட்டது. இதில், 'பென்குவின்கள், குளிர் மற்றும் அண்டார்டிகாவின் சீதோஷ்ண நிலையை தாங்க இயலாமல், தன் இறகுகளை விரித்து பறந்து, அமெரிக்காவின் வெப்ப மண்டல மழைக்காடு பகுதிகளுக்கு தஞ்சமடைந்து விட்டன...' என, கூறியது. பிறகு தான், இது, 'செட் - அப்' என, தெரிந்தது

இதுதவிர, வெளி உலக மனிதன், பறக்கும் தட்டு மூலம் வந்து இறங்கியுள்ளான். மேலும், விபரங்கள் பின்னால் என, கூறி ஏமாற்றியது

* அமெரிக்காவின், நியூயார்க் நகரில், 1986ம் ஆண்டு முதல், 'ஏப்ரல் பூல் டே' ஊர்வலம் நடக்கிறது. இதில், ஆர்வமாக பலர் கலந்து கொள்கின்றனர்.

கடந்த, 1996ல், 'டெகோ பெல் கார்ப்' என்ற பெல் தயாரிக்கும் நிறுவனம், பல இதழ்களில், ஏப்., 1ம் தேதி, முழு பக்க விளம்பரத்தை வெளியிட்டது. அதில், லிபர்ட்டி பெல்லை, தங்கள் நிறுவனம் வாங்கி விட்டதாகவும், இதனால், லிபர்ட்டி பெல், இனி, 'டெகோ லிபர்ட்டி பெல்' என, அழைக்கப்படுமென கூறியிருந்தது

* போலந்து நாட்டில், ஏப்., 1 அன்று, ஒருவரை ஒருவர் தண்ணீரை பீய்ச்சி அடித்துக் கொள்வர்

* கொரிய ராஜ குடும்பத்தில், ஏப்., 1ல் மட்டும், சிறு குறும்புகள் மற்றும் பொய்களை தாராளமாய் செய்யலாம்; சொல்லலாம்.

* பெல்ஜியம் நாட்டில், ஏப்., 1ம் தேதி, ஆசிரியர் அல்லது பெற்றோரை, ஒரு அறைக்குள் அடைத்து, கதவை சாத்தி விடுவர், குழந்தைகள். உள்ளே இருப்போர், ஸ்வீட் தர ஒப்புக்கொண்டால் தான் கதவை திறப்பர்

* முட்டாள்கள் தினத்தை, 'நோட்லி, நோட்டி, கூல்லி, கூல்' என, செல்ல பெயரிட்டு அழைப்பர், பிரிட்டிஷார். அன்று, டீ, காபி கடைகளில், சர்க்கரைக்கு பதில் உப்பை டேபிளில் வைத்து, முட்டாளாக்குவதும் உண்டு

டெயில் பீஸ்: கடந்த, 1945ல், வானிலை தகவல் ஒலிபரப்பில், 'பசிபிக் தீவில், கடுமையான சுனாமி ஏற்பட்டுள்ளது. பின் விளைவுகள் பற்றிய செய்திகள் இனிமேல் தான் தெரிய வரும்...' என, அறிவித்தது. உண்மையான இந்த தகவலை, பலர் நம்பவில்லை. அடுத்தடுத்து தகவல் வர ஆரம்பித்ததும் தான், நம்பினர்

* 'ஜி மெயில் சர்வீசை' ஏப்ரல் 1ல், 'கூகுள்' துவக்கியபோது, பலர் அதை நம்பவில்லை. பிறகு, உண்மை நிலை அறிந்து, தங்களை இணைத்துக் கொண்டனர்.

- ராஜிராதா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us