PUBLISHED ON : ஜன 09, 2022

அ நிறம் | அளவு
அமேசான் காடுகளை பற்றி அறியாதவர்கள் மிக குறைவு. அமெரிக்கா மற்றும் பிரேசில் நாடுகளில் உள்ள இந்த காட்டு பகுதி, இரண்டு இந்தியா சேர்ந்தால் எவ்வளவு இருக்குமோ, அந்தளவு பரந்து விரிந்துள்ளது. இங்கு, 500 பழங்குடி இன மக்கள் இருந்தாலும் இவர்களில், 50 இனத்தவர்கள் வெளி மனிதர்களை சந்திக்காமல் வாழ்ந்து வருகின்றனர்.
இங்கு, ஏராளமான நதிகள் ஓடுகின்றன. சில நதிகள், இன்றும் கண்டுபிடிக்கப்படாமல் மறைந்திருக்கின்றன. 2011ல் கண்டுபிடிக்கப்பட்ட நதி ஒன்றுக்கு, கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்த, அம்சா என்பவரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
அமெரிக்கா பல்கலைகழகம் ஒன்றில் பேராசிரியராக உள்ள, பி.எம்.அம்சா என்பவர் இதை கண்டுபிடித்தார் என்பதால், நதிக்கு அவர் பெயரையே சூட்டியிருக்கின்றனர்.
ஜோல்னாபையன்
