
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
படத்தில் இருப்பவர்கள் பழம் பெரும், மலையாள நடிகரான, பறவூர் பரதன் மற்றும் அவர் மகன் மது. சமீபத்தில், காலமான பரதன், உடல் நலமில்லாமல் இருந்த போது, அவருக்கு துணையாக இருந்ததுடன், அவரை கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே திருமணம் செய்து கொள்ளவில்லை மது. பரதன் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டு, சளி வெளியேறாமல் மூச்சு விட சிரமப்பட்ட சமயங்களில், தந்தையின் மூக்கில், தன் வாயை வைத்து, சளியை உறிஞ்சி, வெளியேற்றி இருக்கிறார் மது. தந்தைக்காக வாழ்ந்த மகனை வாழ்த்தாமல் இருக்க முடியுமா?
— ஜோல்னா பையன்.

