PUBLISHED ON : ஜூன் 12, 2011

அ நிறம் | அளவு
முத்திரை
* நீ வாழ்ந்து மறைந்து விட்டாய்...
அதற்கான அடையாளமெங்கே?
நீரோடு ஓடுகிற கசடுகள்...
அதுவும், நீயும் ஒன்றா?
* பிறந்தோம் உழைத்தோம்,
உண்டோம் பிழைத்தோம்,
வாழவில்லை மறைந்தோம்...
உந்தன் முத்திரை எங்கே?
* ஊருக்குள்ளாவது உன்னைப் பற்றி
தெரியுமா? யாராவது உன்னைப் பற்றி
நினைத்துப் பார்ப்பரா?
நீ வைத்து விட்டு போனதென்ன?
* ஆடினாய், ஓடினாய், மார்தட்டினாய்...
மீசைக்கு நெய் போட்டாயே...
இப்போது உன் தடயமெங்கே?
* உன்னால் யாருக்கும் லாபமில்லை...
நீ போனதால் யாருக்கும் இழப்புமில்லை...
மண்மேடுகள் மழையில் கரைந்து விடும்...
மலைகள் என்றுமே மறைவதில்லை...
நீ மண் மேடுதானா?
* இருப்பதை மறைக்காமல்,
இல்லையென்று சொல்லாமல்,
வாய்மையோடு வாழ்ந்திட்டால்
கல்லில் செதுக்கப்படும் உன் முத்திரை!
— ந.பொன்னுசேகரன், சிவகாசி.
