PUBLISHED ON : ஜன 21, 2018

அ நிறம் | அளவு
'தேவையே கண்டுபிடிப்புகளின் தாய்' என்பது, ஆங்கில பழமொழி. பிரதீப் என்பவரின் வீட்டுத் தோட்டத்தில், மாமரத்தில் இருந்து மாங்காய்களை பறித்துப் போட, இரண்டாயிரம் ரூபாய் கூலியாக கேட்டார், வேலையாள். இதனால், அதிர்ச்சியடைந்த பிரதீப், 150 ரூபாய் செலவில், கம்பிகளை வாங்கி, 'ப்ரூட் பிளக்கர்' என்று ஓர் எளிய கருவியை கண்டுபிடித்தார்.
இக்கருவியின் மூலம், உயரமான மரங்களில் இருந்து கூட பழங்களை பறிக்க முடியும். பின், அக்கருவியில் சில மாற்றம் செய்து, இப்போது வேறு ஒன்றை தயாரித்துள்ளார். இந்த கருவிக்கு தற்போது, ஏகப்பட்ட கிராக்கி ஏற்பட்டுள்ளது.
— ஜோல்னாபையன்.
