PUBLISHED ON : மார் 27, 2016

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நம் அரசியல்வாதிகள், ரூபாய் நோட்டுகளை எண்ணும் போது மட்டுமே காந்தியை நினைக்கின்றனர். ஆனால், மற்ற நாட்டினரோ, காந்தியை போற்றி புகழ்கின்றனர். எகிப்து நாட்டு சினிமாக்காரர் ஒருவர், காந்தியின் பேச்சை மையமாக வைத்து, ஆறரை நிமிடம் ஓடக்கூடிய குறும்படத்தை உருவாக்கி, 'யூ - ட்யூபில்' போட்டுள்ளார்.
அக்குறும்படத்தில், ரயில் பயணத்தின் போது, ஒரு செருப்பை இழக்கிறார் காந்தி. உடனே, மற்ற செருப்பையும், கீழே வீசுகிறார். உடன் பயணிப்போர் வியந்து, அது குறித்து கேட்ட போது, 'செருப்பு இல்லாத ஒருவருக்கு இச்செருப்புகள் பயன்படட்டும்...' என்று விளக்கம் கூறுவார். இக்கருத்தை மையமாக வைத்து படம் தயாரித்து, காந்திக்கு பெருமை சேர்த்துள்ளார், எகிப்து நாட்டு கலைஞர்.
— ஜோல்னாபையன்.

