PUBLISHED ON : மார் 08, 2020

அ நிறம் | அளவு
'ஆண்களுக்கு பதிலாக இயந்திர மனிதர்களை, பெண்கள் விரும்பும் காலம், வெகு தொலைவில் இல்லை...' என்கின்றனர், விஞ்ஞானிகள். மது அருந்தாத, புகை பிடிக்காத, நோய்கள் ஏதுமில்லாத, அதிக திறமையுள்ள துணையை, பெண்கள் விரும்புவது அதிகரித்து வருகிறது.
உலகம் முழுவதும், இயந்திர மனிதனை உருவாக்குவதில் போட்டா போட்டி நடைபெற்று வருகிறது. ஒரு ஆணுக்குரிய அனைத்து குணங்களும் உள்ள, 'ரோபோ'க்கள் உயிர் பெற்று வருகின்றன. 'பெண்களை, ஒருபோதும் கொடுமைபடுத்தாத, இவைகளை வரவேற்றால், ஆண்கள் பாடு படு திண்டாட்டம் தான்...' என கூறப்படுகிறது.
- ஜோல்னாபையன்
