தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/வாய்ப்பு கொடுத்த, நவுஷாத்!

வாய்ப்பு கொடுத்த, நவுஷாத்!

வாய்ப்பு கொடுத்த, நவுஷாத்!


PUBLISHED ON : பிப் 23, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 23, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடந்த, 1929ல் பிறந்த பின்னணி பாடகி லதா மங்கேஷ்கருக்கு, 91 வயதாகிறது. அவரது புகழுக்கு காரணமானவர், இசை அமைப்பாளர், நவுஷாத் அலிகான். 1948ம் ஆண்டில், ஒருநாள், இவரது அலுவலகம் வந்தார், லதா.

பழைய சேலை உடுத்தி, பரிதாபமாக காட்சியளித்த அவரை, உள்ளே வரச் செய்தார், நவுஷாத்.

'மராத்தியில் பாடும் எனக்கு, ஹிந்தி சினிமாவில் பாட ஆசை...' என்றார்.

அவர் பாட்டை கேட்ட, நவுஷாத், அமர் என்ற படத்தில், பாட வாய்ப்பு கொடுத்தார். பாடல் பதிவின்போது, குடும்ப ஏழ்மையை நினைத்து சோர்வடைந்தார், லதா. பாடுவதற்கு முன், இசை கலைஞர்கள், வாத்தியங்களை இசைக்க துவங்கியபோது, மயங்கி விழுந்தார். தண்ணீர் தெளித்து, எழுப்பி, ஆறுதல் கூறி, பாட வைத்தார், நவுஷாத். அந்த பாடல், பலராலும் பாராட்டப்பட்டது. அதிலிருந்து அவரது இசைப் பயணம் தொடர ஆரம்பித்தது.

- ஜோல்னாபையன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us