PUBLISHED ON : ஆக 12, 2018

அ நிறம் | அளவு
படத்தில், முதியவர் ஒருவரை, காலால் மிதித்து, 'பெண்டு' எடுக்கிறார் ஒருவர். இந்த முதியவர் யார் என தெரிகிறதா? முன்னாள் பிரதமரும், இந்நாள் கர்நாடக முதல்வர் குமாரசாமியின் தந்தையுமான தேவகவுடா தான். 'உடற்பயிற்சி என்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும்; அது தான், என் இளமையின் ரகசியம்...' என்று அடிக்கடி அறிக்கை விடுத்து கதிகலங்க வைப்பவர். சாப்பிடாமல் கூட இருப்பார்; ஆனால், இதுபோன்ற உடற்பயிற்சிகளை செய்யாமல் இருக்க மாட்டார் என்று, இவரை பற்றி சொல்கின்றனர்.
— ஜோல்னாபையன்.
