
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'மாடலிங்' என்றால், உடல் மெலிந்த அழகியர் தான் நினைவுக்கு வருவர். 'மாடலிங்' செய்யும் இளம்பெண்கள், உடல் பருமன் ஆகாமல் இருக்க, 'டயட்'டில் இருப்பர். ஆனால், குண்டு பெண்களாலும், 'மாடலிங்' செய்ய முடியும் என்று நிரூபித்து இருக்கிறார், மும்பையைச் சேர்ந்த இந்துஜா என்ற குண்டழகி.
'குண்டாக இருப்பதால், சிலர் கிண்டல் செய்யும்போது, வருத்தப்படுவது உண்டு. ஆனால் இன்று, குண்டு உடலை நினைத்து பெருமைப்படுகிறேன்...' என்கிறார், இவர்.
மெலிந்த உடல் கொண்ட, 'மாடல்'கள், சாப்பிட தயக்கம் காட்டும்போது, இவர், 'இன்னும் கொஞ்சம் போடுங்க...' என்று சொல்லி சாப்பிடுகிறார்.
'நோய்கள் இல்லாத குண்டான உடல்; அதுதான் என் லட்சியம்...' என்கிறார், இந்துஜா.
ஜோல்னாபையன்