/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
முதுகெலும்பில் செய்த, 'ஹேண்ட்பேக்!'
/
முதுகெலும்பில் செய்த, 'ஹேண்ட்பேக்!'
PUBLISHED ON : மே 17, 2020

தென் கிழக்காசிய நாடான இந்தோனேஷியாவை சேர்ந்த பிரபலமான, 'பேஷன் டிசைனர்' அர்னால்டு புத்ரோ. இவர், பெண்கள் பயன்படுத்தும், 'ஹேண்ட்பேக்' எனப்படும் கைப்பையை, விதம் விதமாக வடிவமைத்து அசத்துவார்.
சமீபத்தில், தான் வடிவமைத்த, கைப்பையின் புகைப்படத்தை, சமூக வலைதளத்தில் பதிவிட்டார்.
'அந்த கைப்பையின் முக்கிய பாகங்கள், முதலையின் நாக்கில் செய்யப்பட்டது. அதன் மேல் பகுதி, இறந்த குழந்தையின் முதுகெலும்பால் செய்யப்பட்டது...' என்ற தகவலையும், அவர் தெரிவித்திருந்தார். இந்தோனேஷியாவில் மட்டுமல்லாமல், உலகம் முழுவதும், அதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.
'மனித உடலின் பாகங்கள், உங்களுக்கு மலிவாகி விட்டனவா...' என, பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த வித்தியாசமான கைப்பை, நான்கு லட்சம் ரூபாய்க்கு விற்பனையாகி உள்ளதாம்.
- ஜோல்னாபையன்

