PUBLISHED ON : பிப் 08, 2015

'மனைவி, குழந்தைகளை தவிர, எல்லாவற்றிலும் மாற்றம் வேண்டும்!' - சாம்சங் நிறுவனர் லீ குன் ஹி தன் ஊழியர்களிடம் கூறிய அறிவுரை தான் இது. 'குப்பையான பொருட்களை தயாரிக்காமல், தரமுள்ளவைகளை மட்டுமே உருவாக்க வேண்டும்...' என்று சொல்லும் லீயின் சாம்சங் நிறுவனம், 74 கம்பெனிகளாக செயல்படுகின்றன. உலகம் முழுவதும், 3,69,000 ஊழியர்கள் நேரடியாக பணியாற்றி வருகின்றனர். இதன் ஆண்டு வருவாய், 20 லட்சம் கோடி ரூபாய். நிறுவனர் லீக்கு, 74 வயதாகிறது. இதய நோயால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, முழு ஓய்வில் இருப்பதால், 46 வயது மகன் ஜி யாங் நிர்வாக பொறுப்பை ஏற்றுக் கொண்டார். தந்தை லீ, ஊழியர்களிடம் கடுமையாக நடந்து கொள்வார். அவர் தொழிற்சாலை மற்றும் அலுவலகம் வரும்போது, சிகப்பு பட்டு விரித்து, அதன் மீது தான் நடப்பார். தேவையில்லாத யாரும், அவர் முன் தோன்றக்கூடாது. இப்படிப்பட்டவரின் மகனான, ஜி யாங் எந்த பந்தாவும் இல்லாமல் ஊழியர்களிடம் சகஜமாக பழகி வருகிறார்.
— ஜோல்னாபையன்.
