PUBLISHED ON : மார் 25, 2018

படத்தில் இருப்பவர், ஒடிசாவை சேர்ந்த காய்கறி வியாபாரியான, ஜலந்தர் நாயக். காட்டு பகுதியை ஒட்டி அமைந்துள்ள, தன் கிராமத்திலிருந்து, பக்கத்தில் உள்ள நகருக்கு சாலை அமைத்துள்ளார். 8 கி.மீ., துாரத்திற்கு அமைத்த இந்த சாலைக்காக, இரண்டு ஆண்டுகள், தினமும் எட்டு மணி நேரம் தன்னந்தனியாக உழைத்துள்ளார்.
இவ்வளவு சிரமப்பட்டு, காட்டு பகுதிக்குள் ஏன் சாலை அமைத்தார்... சாதனை பட்டியலில் இடம் பிடிப்பதற்காகவா... இல்லை; சரியான சாலை வசதி இல்லாததால், தன்னால் படிக்க முடியவில்லை; தன் சந்ததிகளாவது படிக்கட்டுமே என்று தான், சாலை அமைத்ததாக கூறுகிறார். இவர் வாழும் கிராமத்தில் சுற்றுச் சூழல் மிகவும் மோசமாக இருப்பதால், இங்கு வாழ்ந்த அனைவரும் கிராமத்தை விட்டு போய் விட்டனர்; இவர் மட்டும், தன் குடும்பத்தினருடன், இங்கு தனியாக வாழ்கிறார்.
— ஜோல்னாபையன்.
