PUBLISHED ON : ஜூலை 17, 2016

அ நிறம் | அளவு
தமிழகத்தை சேர்ந்தவர், கேரளாவில், கொச்சி மாவட்ட ஆட்சியாளரான ராஜமாணிக்கம்; இவர் மனைவி நிஷாந்தினி, திரிச்சூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டன்டாக உள்ளார். படிக்கும் காலத்தில் காதல் திருமணம் புரிந்த இத்தம்பதியினர், தங்களுடைய சமூக சேவையின் மூலம், கேரள மக்களின் மனதில் இடம் பிடித்துள்ளனர். அதனால், ஊடகங்களும் இவர்களை பெரிதளவில் பாராட்டுகின்றன. இன்ஜினியரிங் படிப்பில், தங்க பதக்கம் பெற்ற ராஜமாணிக்கம், மாத சம்பளமாக பல லட்சங்கள் கிடைத்த வேலையை உதறி, கலெக்டர் ஆனவர், 'பணத்தை விட, மனிதர்களுக்கு உதவுவதையே பெரிதும் விரும்புகிறேன்...' என்கிறார்.
— ஜோல்னாபையன்.
