தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/ஏழைகளுக்கு உதவுவதே...

ஏழைகளுக்கு உதவுவதே...

ஏழைகளுக்கு உதவுவதே...


PUBLISHED ON : நவ 20, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 20, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'வெறும் மத போதனை செய்து, வாழ்க்கையை வீணாக்க விரும்பவில்லை; ஏழைகளுக்கு உதவுவது தான் மதம்...' என்று நினைக்கும் பாதிரியார் டேவிஸ் சிறமேல், தன் சிறுநீரகம் ஒன்றை, ஏழை வாலிபருக்கு, தானமாக அளித்தார். மேலும், இலவசமாக சிறுநீரகம் வழங்கும் அமைப்பை ஏற்படுத்தி, சேவை செய்து வருகிறார்.

ஒருநாள், மறைந்த அப்துல் கலாம் இவரை அழைத்து, 'கோட்டயத்தில் உள்ள கல்லூரி ஒன்று, தனக்கு பாராட்டும், பரிசும் வழங்க இருக்கிறது; விழாவுக்கு, நீங்களும் வர வேண்டும்...' என்றார். 'அதற்கு நான் ஏன் வர வேண்டும்...' என்று கேட்ட பாதிரியாரிடம், 'எனக்கு கிடைக்கும் ஒரு லட்சம் ரூபாயை, உங்களுக்கு அளிக்கப் போகிறேன்...' என்றார் கலாம்.

அதேபோன்று, மேடையில், கலாம், ஒரு லட்சம் ரூபாயை பாதிரியாரிடம் அளித்த போது, அவருக்கு ஏழை பெண் ஒருவரை அறிமுகப்படுத்திய பாதிரியார், அப்பெண்ணின் குடும்பமே பல்வேறு விதமான நோய்களால் திண்டாடுகிறது; அதனால், இப்பணத்தை, அப்பெண்ணிற்கு அளிப்பதாக கூறி, கொடுத்தார். இதைப் பார்த்து, மிகவும் மகிழ்ச்சி அடைந்தார் கலாம்.

இந்நிகழ்ச்சியை பார்த்தவர்கள், அந்த ஏழை பெண்ணிற்கு பணத்தை வாரி வழங்க, சில நாட்களில், ஒன்றரை கோடி ரூபாய் கிடைத்தது.

ஏழைகளுக்கு உதவுவது தான் மதம் என்று நினைக்கும் இவர்களை போன்றவர்களால் தான், ஆதராவற்றோர் பலர் உயிர் வாழ்கின்றனர்.

ஜோல்னாபையன்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us