தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இதோ வித்தியாசமான ஜோடி!

இதோ வித்தியாசமான ஜோடி!

இதோ வித்தியாசமான ஜோடி!


PUBLISHED ON : ஆக 18, 2013

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 18, 2013


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

படத்திலுள்ள இளம் ஜோடியை கூர்ந்து பாருங்கள். எதுவும் புரியாவிட்டால் தொடர்ந்து படியுங்கள். முதலாமவர் பெயர் ஆண்ட்ரூ. இவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன், எமரால்ட் என்ற பெயரில், பெண்ணாக பவனி வந்தவர். இரண்டாமவர், ஹில்லோ. இவர், லூகாஸ் என்ற பெயரில் ஆணாக உலவியவர்.

பள்ளியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில், எமரால்டுக்கு, மார்பகங்கள் பெரிதாக வளர ஆரம்பித்த போது, அது, தனக்கு உரியது அல்ல என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது. அத்துடன், அவரிடம் பெண்ணின் உணர்வுக்கு மாறாக, ஆணுக்குரிய சிந்தனைகள் பெருக, பெற்றோர் உதவியுடன் மாற்று அறுவை சிகிச்சை செய்து, ஆணாக மாறிவிட்டார்.

லூகாஸ் நிலையோ இதற்கு எதிரானது. தன்னை ஒத்த ஆண் குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடினாலும், தனிமையை உணர்ந்தார். பெண் சார்ந்த உணர்ச்சிகள், ஆசைகள் அதிகரிக்க, பெற்றோர் உதவியுடன், தன்னை மாற்று அறுவை சிசிச்சை செய்து, பெண்ணாக மாறினார்.

இப்படி, மாற்று அறுவை சிகிச்சை மூலம் புது வாழ்வு கண்ட, இவர்களின் சந்திப்பு, எதிர்பாராத விதமாக நடக்க, இருவரும், ஒருவர் மீது ஒருவர் மையல் கொண்டனர். இன்று, பெற்றோர் ஆசியுடன் இருவரும் இளம் ஜோடியாக பவனி வருகின்றனர்.

இதில் இன்னொரு சிறப்பு என்னவென்றால், ஆண்ட்ரூ 17 வயதாகும் பள்ளி மாணவன், ஹில்லோ 19 வயது கல்லூரி மாணவி. இவர்களுக்கு வயது ஒரு பொருட்டல்ல... அதெல்லாம் அங்கு சகஜமப்பா.

— ஜோல்னா பையன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us