தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/ஹிட்லரின் சூப்பர் ரயில் - ஆ.ஆறுமுக நயினார்

ஹிட்லரின் சூப்பர் ரயில் - ஆ.ஆறுமுக நயினார்

ஹிட்லரின் சூப்பர் ரயில் - ஆ.ஆறுமுக நயினார்


PUBLISHED ON : நவ 28, 2010

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 28, 2010


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஜப்பானின் புல்லட் ரயில், பிரான்சின் டி.ஜி.வி., சீனாவின் புல்லட் ரயில் ஆகிய ரயில்களைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், இதையெல்லாம் தூக்கிச் சாப்பிடக்கூடிய சூப்பர் ரயில் ஒன்றை தயாரித்தார் ஜெர்மனியின் சர்வாதிகாரி ஹிட்லர்  என்ற தகவல், எத்தனை பேருக்கு தெரியும்? ஹிட்லரின் மறைந்து போன சாதனைகளில் ஒன்றான சூப்பர் ரயில், அது ஓடும் முன்பே ஹிட்லர் இரண்டாம் உலகப்  போரில் தோற்று, தற்கொலை செய்து கொண்டதால், ஓடாமல் முடங்கி விட்டது. ஜெர்மனியை உலகின் முன்னணி நாடாக மாற்றுவதற்கு ஹிட்லர் மேற்கொண்ட முயற்சிகளில் முக்கியமானது போக்குவரத்து சீரமைப்பு. ஹிட்லரின்

காலத்தில்தான் முதன் முறையாக வாகனங்கள் தடையின்றி செல்வதற்கு வசதியாக நான்கு வழிப்பாதை அமைக்கப்பட்டு, ஆண்டு முழுவதும் குண்டு குழி இல்லாமல் பராமரிக்கப்பட்டன. இச்சாலைகளுக்கு, 'ஆட்டோ பஹன்' என்று பெயர். இதைப் போலவே, ஐரோப்பாவின் ரயில் போக்குவரத்தை தலை கீழாக மாற்றியமைக்க, ஹிட்லர், ஜெர்மனியில் நீராவி இன்ஜின் ரயில்களை ஒழித்துவிட்டு, டீசல் மற்றும் மின்சார இன்ஜின் ரயில்களை அறிமுகப்படுத்தினார். அதைப்போல், அகன்ற ரயில் பாதையில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் பெரிய, வேகமான ரயில்களை ஓட்ட, அக்காலத்தில்  வசதி இல்லாததால், ஆயிரக்கணக்கானவர்களை ஒரே நேரத்தில் ஏற்றிச் செல்லக் கூடிய அதிவிரைவான ரயில்களை தயாரிக்கும்படி தன் பொறியியல் வல்லுனர்களை ஏவினார். இதன்படி உருவானதுதான் ஹிட்லரின், 'சூப்பர் ரயில்!'

கடந்த 1941ல், 'சூப்பர் ரயில்' விடுவதற்கான வரைபடம் தயாரிக்கப்பட்டது. 'சூப்பர் ரயில்' ஏறத்தாழ 20 அடி அகலமும், 16 அடி உயரமும் உடையது. இரண்டு அடுக்குகளை உடைய மாடி ரயில். இது ஓடும் தண்டவாளத்தின் அகலம் 10 அடி. டீசல் இன்ஜின் பொருத்தப்பட்ட இதன் வேகம், மணிக்கு 250 கி.மீ., இதற்கு பிரைட்ஸ்பர் பஹன் (அகன்ற ரயில்வே) என்று பெயர் வைக்கப்பட்டது. இதன் முதல் வகுப்பு பெட்டியில், குளியல் அறைகள் மற்றும் சிறிய  சினிமா, நாடக தியேட்டர் ஆகியன இடம்பெற்று இருந்தன. ஜெர்மனியில் இருந்து ஐரோப்பா முழுமையையும் ஆசியாவையும் இணைக்கும் விதமாக சூப்பர் ரயில் விடுவதற்கு ஹிட்லர் கனவு கண்டார். ஆனால், 1945ம் ஆண்டு இரண்டாம் உலகப் போரில் ஹிட்லர் தோற்று, ஜெர்மனி சரண் அடைந்ததைத் தொடர்ந்து, சூப்பர் ரயில் திட்டம் கிணற்றில் போட்ட கல் ஆகியது. இருப்பினும், தற்போது ஓடும் பிரான்சின் டி.ஜி.வி., ஜப்பானின் புல்லட் ரயில் ஆகியவற்றுக்கு முன்னோடி ஹிட்லரின் சூப்பர் ரயில் என்று கூறலாம்.                          ***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us