PUBLISHED ON : பிப் 24, 2013

தென் ஆப்பிரிக்காவில் உள்ள இளைஞர்களிடையே, தங்களின், முன்புற பற்களை அகற்றும் வினோதமான நடைமுறை, புது பேஷனாக உருவெடுத்துள்ளது. முன்புறத்தின், மேற்புறத்தில் உள்ள, இரண்டு அல்லது மூன்று பற்களை, பல் மருத்துவரிடம் சென்று, அகற்றி விட்டு, ஓட்டைப் பல் வாயர்களைப் போல், காட்சி அளிக்கின்றனர்.
'இப்படி, வித்தியாசமான தோற்றத்தில் காட்சி அளிப்பதால், இளம் பெண்கள், எங்களை பார்க்கின்றனர்; எங்களுடன் பேச ஆசைப்படுகின்றனர். அதனால் தான், ஓட்டைப் பற்களுக்கு மாறி வருகிறோம்...' என்கின்றனர், இளைஞர்கள்.
இங்குள்ள பெரியவர்களோ, 'இது, ஏற்கனவே பின்பற்றப்படும் பழக்கம் தான். இங்குள்ள மீனவர்கள், மீன் பிடிக்க செல்லும்போது, கடல் அலைகளின் ஓசையால், ஒருவர் பேசுவது, மற்றொருவருக்கு சரியாக கேட்காது. இதனால், விசில் மூலம், சைகை செய்வதற்கு வசதியாக, பற்களை அகற்றினர். இந்த நடைமுறை தான், இப்போது பேஷனாக உருவெடுத்துள்ளது...' என, பின்னணியை விளக்குகின்றனர்.
— ஜோல்னா பையன்.
