
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* பல் துலக்கும் பிரஷ்ஷை, இரண்டு நாட்களுக்கு ஒருமுறை, உப்பு கலந்த நீரில் போட்டு எடுத்து உபயோகிக்க வேண்டும்
* மஞ்சள் மற்றும் மிளகாய் பொடியில், சிறிது உப்பை கலந்து வைத்தால், வண்டுகள் வராது
* மிளகாய் பொடிக்கு, அதை வறுக்கும்போது சிறிது உப்பை சேர்த்தால், கமறல் வராது
* பயன்படுத்திய, 'ஷேவிங் பிரஷ்'ஷை, துாக்கி எறிந்து விடாமல், ரேடியோ, 'டிவி' மற்றும் டேப்ரிக்கார்டர் போன்றவற்றில், கை விரல் புகாத பகுதிகளை சுத்தம் செய்ய பயன்படுத்தலாம்
* கண்ணாடி வளையல்களை வாங்கியவுடன், தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து பிறகு அணிந்து கொண்டால், நீண்ட நாட்களுக்கு உடையாமல் இருக்கும்.