தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/வீட்டுக்குறிப்பு!

வீட்டுக்குறிப்பு!

வீட்டுக்குறிப்பு!


PUBLISHED ON : ஜூன் 25, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 25, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* துணிகளில், 'ஹேர் - டை' கறை படிந்த பகுதியை, நெயில் பாலிஷ் ரிமூவரால் துடைத்தால், போய் விடும்

* ரப்பர் ஸ்டாம்ப் பேட், இங்க் காய்ந்து போய் விட்டால், சில சொட்டுகள் நீலம் விட்டால், அழகாக பதிய வரும்.

* மின் விசிறியில் துாசி படிந்து, கறை படிந்திருந்தால், துணியை மண்ணெண்ணெயில் நனைத்து அழுத்தித் துடையுங்கள். சிறிது நேரத்திற்குப் பின், நல்ல துணியால் துடைத்தால் பளிச்சென்றாகி விடும்

* அரை வாளி தண்ணீரில், நான்கு தேக்கரண்டி வினிகரை கலந்து, ஜீன்ஸ் துணிகளை அலசினால், சாயம் போவதை தடுக்கலாம்

* புது வீட்டில், பெயின்ட் வாடை அடித்தால், ஒரு பக்கெட் நிறைய தண்ணீரை நிரப்பி, அறைகளில் வைத்தால் நீங்கிவிடும்

* ஆணி அடிக்கும் போது, அதன் நுனியில் தேங்காய் எண்ணெய் தடவினால், சுவரில் சுலபமாக இறங்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us