தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/பணம் எப்படி செலவாகும்

பணம் எப்படி செலவாகும்

பணம் எப்படி செலவாகும்


PUBLISHED ON : மார் 04, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 04, 2012


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பணம் என்பதும், பொருள் என்பதும் ஒரே இடத்தில் தங்கி இருப்பதில்லை. அது, ஒவ்வொரு இடமாக போய்க் கொண்டே இருக்கும். சிலரிடம் உள்ள செல்வம், நல்ல காரியங்களுக்கு செலவிடப்படும். கோவில், கும்பாபிஷேகம், குளம் வெட்டுதல் போன்ற பொதுநல காரியங்களுக்கு செலவிடப்படும்; சிலரிடம் உள்ள பணம், நல்ல காரியங்களுக்கு செலவிடப்படாமல், தீய வழிகளில் செலவிடப்படும்.

ஒரு தாசியின் மகள், தன் தாயைப் பார்த்து, 'ஏம்மா... இப்படி பணமுள்ளவர்கள் எல்லாம், பணத்தைக் கொண்டு வந்து நம்மிடம் கொட்டுகின்றனரே... இதற்கு நாம் என்ன புண்ணியம் செய்திருக்கிறோம்...' என்று கேட்டாளாம். அதற்கு அந்தத் தாய், 'இதற்கெல்லாம் நாம் எந்த புண்ணியமும் செய்யவில்லை. இப்படிப்பட்ட பணமுள்ளவர்களுக்காகத் தான், பகவான், கள்ளையும், சூதையும், நம்மையும் படைத்தான்!' என்றாளாம்.

மிதமிஞ்சி பணமுள்ளவன் என்ன செய்கிறான்? சூதாட்டம், குதிரைப் பந்தயம் மற்றும் தாசி வீடு என்று போகிறான். கையிலிருந்த பணம், பொருளை இழந்த பின்னும் புத்தி வருவதில்லை. கள்ளு கடைக்குப் போகும் பழக்கமுள்ளவன் என்ன செய்கிறான்? வீட்டில் உள்ள நகை, வெள்ளிசாமான்களை விற்றோ, அடகு வைத்தோ, கள்ளுக்கடைக்குப் போய், கையிலிருந்த பணத்தைத் தொலைத்து விட்டு வருகிறான்.

எப்படியாவது பணம் தேட வேண்டும். விபசாரி வீட்டுக்கோ, கள்ளுக் கடைக்கோ, சூதாட்டத்துக்கோ போக வேண்டும் என்ற வெறியில் இருக்கிறான். கையில் கிடைக்கும் பணத்துக்குத் தகுந்தபடி, அந்தந்த இடத்துக்குப் போய், பணத்தை தொலைத்து விட்டு வருகிறான். ஆக, இந்த மாதிரி ஆட்களுக்காகத் தான், பகவான், கள்ளையும், சூதையும், விபசாரிகளையும் படைத்துள்ளான் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டியிருக்கிறது.

அந்த விபசாரி நல்ல அனுபவசாலி போல் இருக்கிறது. அதனால் தான் இப்படிச் சொல்லியிருக்கிறாள். இதிலிருந்து என்ன தெரிகிறது? நல்வழியில் வந்த பணம், நல்ல வழியிலும், தவறான வழியில் வந்த பணம், தவறான வழியிலும் தான் செலவாகும் என்பது புரிகிறது தானே!

***

ஆன்மிக வினா-விடை!

வீட்டில் சண்டை சச்சரவின்றி, ஒற்றுமையுடன், சந்தோஷமாக இருக்க, தமிழ் சுலோகம் உண்டா?

தமிழிலுள்ள அபிராமி அந்தாதியும், கந்தரனுபூதியும் படிக்கலாம்.

***

வைரம் ராஜகோபால்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us