PUBLISHED ON : நவ 04, 2012

அமெரிக்காவில், சர்வதேச அளவிலான மோட்டார் சைக்கிள் கண்காட்சி நடக்கவுள்ளது. இந்த கண்காட்சியை பிரபலப்படுத்து வதற்காக, சான் பிரான்சிஸ்கோ நகரில் உள்ள, பிரபல விளம்பர தயாரிப்பு நிறுவனம், புதிய முயற்சியை கையாண்டுள்ளது.
உலகின் முன்னணி, 'பாடி பெயின்டர்' என, புகழ் பெற்றுள்ள, அமெரிக்காவின் ட்ரினா மெர்ரி உதவியுடன், இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. பிரபலமான யோகா நிபுணர்களை வரவழைத்து, அவர்களின் உடல்களில், பல்வேறு நிறங்களிலான பெயின்ட்டை அடித்து, மனித மோட்டார் சைக்கிள்கள் உருவாக்கப்பட்டன.
யோகா நிபுணர்கள் மட்டுமல்லாமல், சர்க்கஸ் கலைஞர்களும், இந்த புதுமையான முயற்சிக்கு உதவினர். அவர்களை பல்வேறு கோணங்களில், அமரவைத்தும், படுக்க வைத்தும், கை, கால்களை நீட்ட வைத்தும், உண்மையான மோட்டார் சைக்கிள் போன்ற, தோற்றம் உருவாக்கப்பட்டது. இறுதியாக, அதில், மாடல்களை அமரவைத்து, புகைப்படம் பிடித்தனர்.
இந்த விளம்பரங்கள், இணையதளங்களில் வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. மிகவும் கூர்ந்து கவனித்தால் மட்டுமே, இந்த மோட்டார் சைக்கிள்கள், மனிதர்களை கொண்டு உருவாக்கப்பட்டது என்பது தெரிய வரும்.
— ஜோல்னா பையன்.
