தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அம்மா என்றழைக்காமல் உயர்வில்லையே...

அம்மா என்றழைக்காமல் உயர்வில்லையே...

அம்மா என்றழைக்காமல் உயர்வில்லையே...


PUBLISHED ON : செப் 04, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 04, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தினமலர் - வாரமலர் சார்பில் நடைபெறும் குற்றால டூரில் கலந்து கொள்ளும் வாசகர்கள், தத்தம் பதவி மற்றும் பொறுப்புகளை சொல்லி, வாசகர்களுக்காக தங்களை அர்ப்பணித்துக் கொள்வது வழக்கம்.

இந்த ஆண்டு டூரில், சக வாசகர்கள் எழுந்து நின்று கைதட்டி பாராட்டும் வகையில், தம் கருத்தை கூறியவர், சென்னை பெரம்பூர் டாக்டர் ஜெயநிர்மலா!

எம்.பி.பி.எஸ்., - எம்.டி., முடித்து, டிப்ளமோ இன் அட்வான்ஸ்டு ஸ்கேனிங் படித்துள்ள இவர், சென்னை கோபாலபுரத்தில், தன் சகோதரி டாக்டர் ரம்யாவுடன் இணைந்து, 'ஜீவன் மித்ரா குழந்தையின்மை மற்றும் மகளிர் நல மருத்துவமனை'யை நடத்தி வருகிறார். இம்மருத்துவமனையின் பணியே, குழந்தை பேறு இல்லாத தாய்மார்களுக்கு, குழந்தைப் பேற்றை உருவாக்கித் தருவது தான்.

இதுபற்றி, டாக்டர் ஜெயநிர்மலா கூறியது:

குற்றாலம் டூரில் கலந்து கொள்ளும் அதிர்ஷ்டம் எனக்கு கிடைத்தது மிகவும் சந்தோஷமாக உள்ளது. அந்துமணியையும், அவரது குழுவினரையும் வாழ்நாளில் மறக்கவே மாட்டேன்.

முன்பெல்லாம், பத்தில் ஒரு தம்பதிக்கு தான், குழந்தையின்மை பிரச்னை இருந்தது; ஆனால், தற்போது, பத்தில், நான்கு பேருக்கு இப்பிரச்னை உள்ளது.

இதற்கு காரணம், மாறி வரும் உணவு கலாசாரம், உடல் பருமன், உடல் உழைப்பின்மை மற்றும் அதிக நேரம், 'டிவி' பார்த்தல் போன்ற விஷயங்களினால், பெண்களில் பலருக்கு, பி.சி.ஒ., எனும் கரு முட்டையில், நீர் கொப்புளம் ஏற்படுகிறது. இதனால், மாதவிடாய் பிரச்னை மற்றும் கரு முட்டை சரியாக உருவாகாமல் போவது போன்ற பிரச்னைகள் உண்டாகின்றன.

ஆண்களுக்கோ, சமூக வலைத் தளங்களில் முழ்குவது, மன அழுத்தம், இரவு நேர பணி மற்றும் கலாசார மாறுபாடுகளால் விந்தணு குறைபாடு

அதிகரித்து விட்டது; இதன் விளைவு, குழந்தைஇன்மை!

திருமணமாகி இரண்டு, மூன்று ஆண்டுகளில், குழந்தையில்லை என்றால், மேலும் தாமதிக்காமல், மகப்பேறு மருத்துவரை அணுக வேண்டும். இல்லை என்றால் பிரச்னை அதிகரித்து விடும். ஆனாலும், வளர்ந்து விட்ட இன்றைய மருத்துவ தொழில்நுட்பத்தின் துணையோடு, குழந்தையில்லை என்ற குறை ஏற்படாமல், பார்த்துக் கொள்ள முடியும்.

உயிரணுக்கள் குறைவாக உள்ளவர்களுக்கு, ஐ.வி.எப்., - ஐ.சி.எஸ்.ஐ., என்ற முறையில், கணவரின் விந்தணுக்களில் நன்றாக இருக்கும் விந்துவை தேடி எடுத்து நேரடியாக செலுத்தினால், கரு நன்றாக உருவாகும். விந்தணுக்களே இல்லாதவர்களுக்கு கூட டீசா மற்றும் பீசா என்ற நவீன முறையில் குழந்தைப் பேற்றை அடைய முடியும். அத்துடன், கருக்குழாயின் இரு பக்கமும் அடைப்பு ஏற்பட்டால் கூட குழந்தை பெற்றுக் கொள்ள முடியும்; இதற்கு, ஐ.வி.எப்., முறை வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

ஒருமுறை, ஐ.வி.எப்., முறையில் தோல்வியை சந்தித்தால், துவண்டுவிட வேண்டியது இல்லை; அடுத்த முறை நிச்சயம் வெற்றி கிடைக்கும்.

கர்ப்பப்பை இல்லாதவர்களும், கர்ப்பப்பை அகற்றப்பட்டவர்களும் கூட, வாடகைத் தாய் மூலம், அவர்களது சொந்த குழந்தையை பெற முடியும். கருமுட்டை இல்லாதவர்கள், கருமுட்டை தானம் பெற்று, கர்ப்பம் அடைய முடியும்.

ஒரு பெண் தாயாகும் போது தான் பூரணமடைகிறாள் என்பதை, தாயின் ஸ்தானத்தில் இருந்து உணர்ந்துள்ளோம். தான் பெற்ற குழந்தையை, கையில் வாங்கி கொஞ்சும் தாய்க்கு, அந்த தருணம் தான் வாழ்க்கையின் மிகச்சிறந்த கணம்; அந்த மகிழ்ச்சிக்கும், மனநிறைவிற்கும் ஈடேதும் இல்லை.

குற்றால டூர் வாசகியர்கள், அவர்களது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமல்ல, தினமலர் - வாரமலர் வாசகர்கள் அனைவருக்காகவும் எங்கள் ஜீவன்மித்ராவை அர்ப்பணிக்கிறோம். எப்போது வேண்டுமானாலும், எங்களுக்கு ஒரு போன் செய்து, உங்கள் மருத்துவமனை போல வந்து பயன் பெற்று செல்லுங்கள்! இவ்வாறு அவர் கூறினார்.

போன் எண்: 9791085541, 9940405305, 9884633282.

மெயில் முகவரி: jeevanmithraivf@gmail.com

website: www.jeevanmithrafertilitycentre.com

எல்.முருகராஜ்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us