PUBLISHED ON : டிச 16, 2012

சீனாவின், பீஜிங் நகரில், ஒரே கையில், அதிக அளவு, ஒயின் கிளாசை வைத்திருப்பது தொடர்பான போட்டி நடத்தப்பட்டது. இதில், பிலிப் ஒசென்டன் என்பவர், ஒரே கையில், அதிகபட்சமாக, 51 கிளாஸ்களை தூக்கி வைத்து, சாதனை படைத்தார்.
இந்த சாதனையை படைப் பதற்கு, அவருக்கு மூன்று முயற்சிகள் தேவைப்பட்டன. முதல் முயற்சியில், 40 கிளாஸ் களையும், இரண்டாவது முயற்சி யில், 45 கிளாஸ் களையும், மூன்றாவது முயற்சி யில், 51 கிளாஸ்களையும், தூக்கி, இந்த சாதனையை நிகழ்த்தினார்.
இறுதியாக, 52 கிளாஸ்களை வைத்துக் கொள்வதற்கான சாதனையில் ஈடுபட்டபோது, கிளாஸ்கள், ஒன்றன் பின் ஒன்றாக, தவறி விழுந்தன. 'ஸ்பெயினில், 2007ல், நிகழ்த்தப்பட்ட சாதனை, கடந்த ஐந்தாண்டுகளாக முறியடிக் கப்படாமல் இருந்தது. இறுதியில், அந்த சாதனையை, நான் முறியடித்து விட்டேன். இதற்காக, நான்காண்டுகள் கடுமையாக உழைத்தேன்...' என்கிறார், பிலிப்ஸ்.
— ஜோல்னா பையன்.
